Friday, September 20, 2019

#ஆரேக்கியமான_அரசியல்_பற்றி.....



————————————————
இன்றைக்கு ஒரு இளம் பத்திரிக்கையாளர் ஈழப் பிரச்சனை குறித்து ஐ,நா. மனித உரிமை ஆணையத்தின் 42வது கூட்டத்தொடர் தொடங்குவது பற்றி பேட்டி காண என்னை சந்திக்க வந்தார். அப்போது அவர் உங்கள் முகநூல் பதிவில் அச்சுதபட்டடவர்த்தன் என்ற பெயரை பார்க்க நேர்ந்தது. அவர் யார் என்றார். 

அச்சுதப்பட்டவர்த்தன் விடுதலை போராட்ட தியாகியாவார். ஜெயப்பிரகாஷ் நாராயணனுடன் இருந்தார். இவர் சிறந்த சோசலிஷ்ட் ஆவார். பொருளாதாரம் பயின்றவர்.

திருமணமே செய்து கொள்ளவில்லை. நாடு விடுதலையான பின்பு அமைந்த நேருவின் அமைச்சரவையில் அமைச்சராகும் வாய்ப்பை தெளிவாக மறுதலித்தார். விடுதலைப் போராட்ட காலத்தில் அவர் செய்த பணிகள் ஏராளம். அது போலவே எச்.வி.காமத் போன்ற தலைவர்களும் இருந்தனர். கம்யூனிஸ்ட் கட்சித் தலைவரான சுந்தரய்யா தன்னுடைய மனைவி லீலா சுந்தரய்யாவை குடும்பக் கட்டுப்பாடு செய்து கொண்டு தான் திருமணமே செய்தார். 

காந்தியின் நெருங்கிய சகாவான கிருபளானி தனது மனைவியான சுசேதா கிருபளானியை திருமணம் செய்யும் முன்னர் குடும்பக் கட்டுப்பாடு செய்து கொண்டு தான் திருமணம் செய்தார். சுசேதா கிருபளானி தான் இந்தியாவின் முதல் பெண் முதல்வராக உத்தரபிரதேசத்தில் பொறுப்பேற்றார். 

இப்படிப்பட்ட பல ஆளுமைகளை இன்னும் இன்றைய தலைமுறைகள் தெரிந்து கொள்ளாமல் இருக்கின்றனர். கடந்த 10 ஆண்டு அரசியலை பற்றி பேசிவருவதில் எந்த அர்த்தமில்லை என்பதை உணர்ந்து முழுமையான அரசியலையும், நிகழ்வுகளையும் அறிந்து சமூக ஊடகங்களில் பயணிப்பது நல்லது. 

இவர்கள் ஏன் திருமணத்திற்கு முன்னர் குடும்பக் கட்டுப்பாடு செய்து கொண்டனர். பலர் ஏன் திருமணமே செய்து கொள்ளவில்லை என்ற கேள்வி எழலாம். பொது வாழ்க்கையில் சேவைகளை பந்தத்தினால் முழுமனதோடு ஆற்றமுடியாது என்று தியாக வாழ்க்கை வாழ்ந்த தியாகச் சீலர்கள் தான் இவர்கள்.

சீரியல், பிக்பாஸில் நடித்தால் போதும் என்ற மனப்பான்மை இருந்தால் நாடும் அவ்வளவு தான்.

தமிழகத்தில், மறைந்த தலைவர்களான வ.உ.சிதம்பரனார், ஓமந்தூரார், குமாரசாமி ராஜா, சேலம் வரதராஜராஜுலு நாயுடு, ஜே.சி.குமரப்பா, பெரியார், அண்ணா, கக்கன், ஜீவானந்தம், காயிதே மில்லத் மற்றும் வடபுலத்தில் கிருபளானி, ஜெயப்பிரகாஷ் நாராயணன், லால் பகதூர் சாஸ்திரி, குல்சாரி லால் நந்தா (பிரதமர் பதவியிலிருந்து விலகியவுடன் குழல் விளக்கு இல்லாமல் பல்பு வெளிச்சத்தில் பல அடுக்கு வீட்டில் தனியாக ஒரு படுக்கையறையில் தனது உணவை தானே சமைத்துக் கொண்டு வாழ்ந்தவர். பக்கத்திலிருப்பவருக்கு கூட அவர் ஒரு முன்னாள் பிரதமர் என்று தெரியாது), லோகியோ,மோகன் தாரியா, அச்சுதப்பட்டவர்த்தன், கேரளத்தை சார்ந்த இ.எம்.எஸ். நம்பூதிரி பாட் போன்ற சில தலைவர்களுடைய அரசியல் அணுகுமுறையும், அவர்கள் சந்தித்த ரணங்களையும் பாடுகளே அரசியலில் பாலபாடமாகும். ஆரோக்கியமான அரசியலுக்கு இவர்களைப் படியுங்கள்.

ஆரேக்கியமான அரசியல் பற்றி இவர்களின் வரலாறு சொல்லும்.

#KSRPostings
#KSRadhakrishnanPostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
20-9-2019.

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...