Wednesday, September 4, 2019

#இவர்களுக்கும்_வாக்களித்து அனுபவித்த பின்னும், #நேர்மையற்ற_போலிகள்... அரசு பங்களாக்களை காலி செய்யாத ஜென்மங்கள் / முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு சம்மன்.


#இவர்களுக்கும்_வாக்களித்து அனுபவித்த பின்னும், #நேர்மையற்ற_போலிகள்... அரசு பங்களாக்களை காலி செய்யாத ஜென்மங்கள் / முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு சம்மன்.
---------------------------
நாடாளுமன்றத்திற்கு புதிய உறுப்பினர்கள் பதிவியேற்று மூன்று மாதங்கள் ஆகியும் பல்வேறு முன்னாள் உறுப்பினர்கள் தங்களது பங்களாக்களை காலி செய்யாமல் இழுத்தடிப்பு செய்து வருகின்றனர். இப்படி திரும்ப ஒப்படைக்காமல் இந்தியா முழுதும் இருக்கும் நாடாளுமன்றமுன்னாள்உறுப்பினர்களில் தமிழக எம்.பிக்கள் 8 பேரும் உள்ளனர். 

நாடாளுமன்ற தேர்தலுக்குப் பின், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள உறுப்பினர்களுக்கு டெல்லியில் உள்ள அந்தந்த மாநில பவன்களில் தற்காலிக ஏற்பாடாக வசதிகள் செய்து தரப்பட்டன. தற்போது பெரும்பாலான நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு, அங்கெல்லாம் மராமத்து பணிகள் நடைபெற்றுக் கொண்டுள்ளன.

ஆனால், முன்னாள் எம்.பிக்கள் பலர் வீடுகளை காலி செய்யாமல் தாமாதமாக்குவதால் புதிய எம்.பிக்களுக்க வீடுகளை ஒதுக்கவதில் பிரச்சனை எழுந்துள்ளது. மூன்று முறை நோட்டீஸ் அனுப்பியும் பலனில்லை. 

இதனால் அவர்களுக்கு சட்டவிரோத குடியிருப்பு தடுப்புச் சட்டத்தின் கீழ் எச்சரிக்கை விடப்பட்டு அவர்களின் கதவுகளில் நோட்டீஸ் ஒட்டி, நேரில் வந்து விளக்கம் அளிக்குமாறு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

இந்த விடயத்தில் அதிமுகவைச் சேர்ந்த 8 நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர்களுக்கும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

இந்த பட்டியலில், பிரபாகரன் - திருநெல்வேலி, உதயகுமார் - திண்டுக்கல், வசந்தி முருகேசன் - தென்காசி, மகேந்திரன் - பொள்ளாச்சி, பரசுராமன் - தஞ்சாவூர், கேபால் - நாகப்பட்டினம், ஆர். கோபாலகிருஷ்ணன் - மதுரை, நாகராஜ் - கோயமுத்தூர் ஆகியோரின் பெயர்கள் உள்ளது. 

Image may contain: sky, twilight and outdoorஇவர்களிடம் உதவியாளர்களாக இருந்தவர்கள் வசம் இந்த வீடுகள் இருக்கின்றன. இவர்களுக்கு மாற்று இடம் கிடைக்காததால் சந்தை நிலவரப்படி, இந்த வீடுகளுக்கான வாடகை, ரூபாய் 28,000த்தை கொடுத்து தங்கிக் கொள்ள அனுமதி கேட்கவே, அதை ஏற்று சில எம்.பிக்கள் கடிதம் வழங்கியுள்ளனர். இதை வைத்துக் கொண்டு, உதவியாளர்கள் சிலர் வீடுகளை ஒப்படைக்காமல் உள்ளனர். இது மட்டுமல்லாமல், எம்பிக்களில் சிலர் தங்களின் பணியாளர் குடியிருப்பையும் வாடகைக்கு விட்டிருந்தனர். அவர்களும் காலி செய்யாமல் இழுத்தடிப்பதால் சிக்கல் எழுந்துள்ளது.

லோக்சபா தேர்தலில் மீண்டும் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்ட உடனேயே, டில்லியில் வழங்கப்பட்ட வீடுகளை காலிசெய்து சாவிகளை ஒப்படைத்திருக்கலாம். ஆனால், மத்திய நகர்புற மேம்பாட்டு அமைச்சகம், இந்த வீடுகளை சட்டவிரோத குடியிருப்பாக கருதி, நோட்டீஸ் ஒட்டுமளவுக்கு காலி செய்யாமல் இழுத்தடிப்பு செய்து வருவது அவர்களது பொறுப்பிற்கும், பொது கண்ணியத்திற்கும் இழுக்காக தெரியவில்லையா?

கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
04-09-2019

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...