Friday, September 27, 2019

இன்று நடந்த#ஐநா_மன்ற_74_கூட்டத்தொடரில்; #யாதும்_ஊரே_யாவரும்_கேளிர்



-#கணியன்_பூங்குன்றனார்
————————————————-
பாடல்: 192
திணை: பொதுவியல் துறை -பொருண்மொழிக் காஞ்சி

‘’யாதும் ஊரே ; யாவரும் கேளிர் ;

தீதும் நன்றும் பிறர்தர வாரா ;

நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன ;

சாதலும் புதுவது அன்றே ; வாழ்தல்

இனிதுஎன மகிழ்ந்தன்றும் இலமே; முனிவின்,

இன்னா தென்றலும் இலமே; ‘மின்னொடு

வானம் தண்துளி தலைஇ, ஆனாது

கல்பொருது இரங்கும் மல்லற் பேர்யாற்று

நீர்வழிப் படூஉம் புணைபோல, ஆருயிர்

முறைவழிப் படூஉம்’ என்பது திறவோர்

காட்சியின் தெளிந்தனம் ஆகலின், மாட்சியின்

பெரியோரை வியத்தலும் இலமே;

சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே.’’
•••••
விளக்கம்:
யாதும் ஊரே,யாவரும் கேளிர்;
-எல்லா ஊரும் எங்கள் ஊர்தான், எல்லோரும் எங்கள் உறவுகள் தான்;

தீதும், நன்றும், பிறர் தர வாரா;
-தீயது, நல்லது என்பவை பிறர் தந்து வருபவை இல்லை;

நோதலும், தணிதலும், அவற்றோர் அன்ன;
-துன்பமும், அதன் தீர்வும் கூட அதுபோல் தான்.

சாதலும் புதுவது அன்றே! வாழ்தல்
-செத்துப் போவது ஒன்றும் புதியது இல்லை.

இனிது என மகிழ்ந்தன்றும் இலமே! முனிவின்
-வாழ்க்கை இனியது என்று சொல்லி மகிழ்ச்சிப் படுவதும் தவறு.

இன்னாது என்றலும் இலமே! மின்னொடு
-மாறி, வாழ்க்கையில் இருந்து விலகி ஏற்கும் துறவு கொடியது என்று சொல்லுவதும் தவறு;

வானம் தண் துளி தலைஇ ஆனாது,
-வானம், மின்னல் வெட்டும் மழையாய்

No comments:

Post a Comment

கனிமொழிக்கும் டி ஆர் பாலுவிற்கும் சிவகங்கையில் ப. சிதம்பரம் மகனையும் போட்டியாக வலுவற்ற வேட்பாளர்களை நிறுத்தி வைத்ததன் மூலம் எதிர்க்கட்சிகளே வெற்றி வாய்ப்பையே வழங்கி விட்டார்கள்

இன்று மாலை  டில்லி மூத்த பத்திரிக்கையாள நண்பர்  தொலைபேசியில் என்னைத் தொடர்பு கொண்டு தூத்துக்குடியில் கனிமொழி அவர்களின் வெற்றி எப்படி இருக்கி...