Friday, December 2, 2022

இனி ‘பொருநை’ என அழைக்க உயர்நீதி மன்ற உத்தரவு

இனி ‘பொருநை’ என அழைக்க உயர்நீதி மன்ற உத்தரவு 
—————————————


தண்பொருநை‘, ‘பொருநை‘, ‘பொருநல்‘, ‘தண் பொருத்தம்‘, ‘தாமிரபரணி‘ என இலக்கியங்களும், ‘தண்பொருந்த ஆறு‘, ‘தண் பொருத்தப் பேராறு‘, ‘முடி கொண்ட சோழப் பேராறு‘ என்று கல்வெட்டுகளும் இன்றைய தாமிரபரணி ஆற்றினைச் சுட்டுகின்றன. இந்நதிக் கரையில்தான் ஆதிச்சநல்லூரும், கொற்கையும் பழந்தமிழர் நாகரிகத்தினை வளர்த்துள்ளன. கீழ்வேம்ப நாட்டுத் திருநெல்வேலி, குலசேகரச் சதுர்
வேதிமங்கலம் எனக் கல்வெட்டுகள் கூறும் திருநெல்வேலியும் தாமிரபரணி நதிக்கரையில் அமைந்துள்ள பழம்பெருமை மிக்க ஊராகும். திருநெல்வேலி பகுதியைச் சுற்றிலுமுள்ள ஊர்களில் பனைமரம் மிகுதி. அதனால் இங்குள்ள மக்கள் தமிழ் இலக்கியங்களையும் பிறகலைகளையும் பனை ஒலைகளில் பதிவு செய்து பாதுகாத்துள்ளனர்


Meerut

Meerut village area; derived its name from 'Mayarashtra'the capital of the kingdom of Mayasura, Mandodari's father and Ravana's father-in-law. This name may have mutated to Mairashtra, Mai-dant-ka-khera, Mairaath and eventually Meerut. (Sugarcane-Mawana Sugar Distillary).

உங்களுக்கு அரசியல் வியாபாரம். எனக்கு அரசியல் நெறியான தவம்.

நான்  உங்களைப் போல் காலில் விழுந்து, கையைக் கட்டிக் கொண்டு, குனிந்து ஏதாவது பதவி கிடைக்காதா என்ற எதிர்பார்ப்போடு இருக்கிற அரசியல் வியாபாரி அல்ல. சொல்ல வேண்டிய கருத்தைத் திடமாகவும் ஆழந்த புரிதலோடும் எந்த எதிர்பார்ப்பும் இன்றி அந்தந்த நேரத்தில் சொல்வதுதான் என் இயல்பு. 
 உங்களுக்கு அரசியல் வியாபாரம். எனக்கு அரசியல் நெறியான தவம். எதிலும் ஐ ஆம் டோன்ட் கேர் மாஸ்டர். யாரையும் புண்படுத்தவும் மாட்டேன்.


#*கிரா விழாவில் கலாப்ரியா, வண்ணதாசன் அழைக்கவில்லையா* #*கனிமொழி அவர்களே...

#*கிரா விழாவில் கலாப்ரியா, வண்ணதாசன் அழைக்கவில்லையா* #*கனிமொழி அவர்களே...



ஏதோ வாக்கு வங்கி அரசியல். நடக்கட்டும்*…
—————————————
 இன்று (2-12-2022)கோவில்பட்டியில் கி.ராவுக்கு அரசு விழா. கனிமொழி அவர்களின் முயற்சியில்நடத்துகிறார்களாம். சிறப்பாக நடக்கட்டும். வாழ்த்துகள். 
  
நான் திமுகவுக்கு உழைத்ததை கனிமொழி மறந்திருப்பார். நான் அவருக்குத் துணை நின்றதெல்லாம் இன்றைக்கு அவருடைய நினைவில் இருக்காது.  இந்த நிலையில் கி.ரா விழாவுக்கு என்னை அழைக்கவில்லை என்பது வேறு விடயம்.  
  
கி.ராவுக்கு நெருக்கமான திரைப்படக் கலைஞர் சிவகுமார், மாமா மச்சான் என்று கி.ராவுடன் உறவு கொண்டாடிய கவிஞர் கலாப்ரியா, வண்ணதாசன் போன்றோரை ஏன் அழைக்கவில்லை?திருவண்ணாமலையில் இருந்து பவா செல்லத்துரையை அழைக்கும்போது ஏன் இவர்களை அழைக்கவில்லை? வைகோ அவர்களைக் கூட அழைக்கவில்லை என்று தெரிகிறது. 

ஒரு விழா நடத்துவது என்றால் அந்த விழா நாயகருக்கு நெருக்கமானவர்களை அழைப்பது வாடிக்கை. கி.ராவுக்கு அந்த வரிசையில் தென்காசியில் வசிக்கும் ரசிகமணி குடும்பத்தார், நடிகர் சிவகுமார், தி.க.சி.யின் புதல்வர் வண்ணதாசன், கவிஞர் கலாப்ரியா, தீக்கதிர்- செம்மலர் எஸ்.ஏ. பெருமாள், ஆனந்தவிகடனில் கரிசல் காட்டுக் கடிதாசி 1980  வரை காரணமாக  இருந்த நானும் பாரதி கிருஷ்ணகுமாரும்,  கோவை விஜயா பதிப்பகம் வேலாயுதம், கவிஞர் மீராவின் புதல்வர் அகரம் பதிப்பகம் கதிர், கி.ராவுக்கு ஆரம்பகட்டத்தில் இருந்து உதவியாக இருந்த கோவில்பட்டி மாரீஸ்  என பலர் கனிமொழி அவர்களின் கவனத்துக்கு  வரவில்லையா? 
 
வேறு சில தகவல்களும் வந்தன.  தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் இந்த விழாவுக்கான அழைப்பிதழை  இரண்டு, மூன்று முறை மாற்றி அடித்து குளறுபடியானதாகத் தகவல். கி.ராவின் புதல்வர்கள் திவாகரன், பிரபாகரன் பெயரில்லாமல் அச்சடிக்கப்பட்டதா அழைப்பிதழ்? இப்படியாக விழா நடக்கிறது. ஏதோ வாக்கு வங்கி அரசியல். 2024 – ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலை நோக்கி கனிமொழி நகர்வதற்கு இப்படியான நடவடிக்கைகள். நடக்கட்டும். இயற்கை என்று ஒன்று இருக்கிறது.
கி.ரா விழாவை யார் நடத்தினால் என்ன?  எவர் கலந்து கொண்டால் என்ன?  கி.ராவுக்கு நெருங்கியவர்கள் எவர் விடுபட்டால் என்ன?  
வாழ்த்துகள்.

#ksrpost
2-12-2022.

#கிரா #kera #கி.ராஜநாராயணன

மீள் பதிவு  
#கிரா #kera  #கி.ராஜநாராயணன https://youtu.be/ar8APH0AKgk
#ksrpost
2-12-2022

https://youtu.be/ar8APH0AKgk


Thursday, December 1, 2022

கிரா

*தமிழக முதல்வர் அவர்களே*... 

*வைகோ அவர்களே*... 

*கனிமொழி அவர்களே*... 

கிராவுக்கு  நாளை  அவரது ஊரான இடைசெவலில் விழாவா? தகவல் வந்தது. நல்லது. மகிழ்ச்சி, வாழ்த்துகள். விழா சிறப்பாக நடக்கட்டும். 
  
கிராவை இவ்வாறு சிறப்பிக்கும் தமிழக முதல்வர்,  புதுவையில் நான் எடுத்த கிராவின் 95 ஆம் ஆண்டு விழாவுக்கு (16-9-2017)வாழ்த்துச் செய்தி அனுப்பியிருக்கலாமே? நான் கேட்டும் அனுப்பவில்லையே 
அன்று …. 
 
வைகோ அவர்களே... நான் அமைத்த கிரா விழ மேடைகளில் நீங்களும் 1991 - இலிருந்து பேசி வந்தீர்கள் என்பது உங்களுக்கு நினைவிருக்கிறதா?
 
கனிமொழி அவர்களே... உங்களுக்கு கிராவை எப்போது அறிமுகம்?
 
கோவில்பட்டி மந்தையில் கிரா விழாவைச் சிறப்பாகக் கொண்டாடுங்கள். இதுதான் நேர்மை.
நடக்கட்டும். மகிழ்ச்சி.

#ksrpost
1-12-2022

*விவசாய முதல்வர், தமிழின் முதல்வர், சமூக நீதி முதல்வர் என உண்மையாக இவரை அழைக்கலாம். திருவருட் பிரகாச வள்ளலாரின் அன்பர்*…. ஓமந்தூரார்

*விவசாய முதல்வர், தமிழின் முதல்வர், சமூக நீதி முதல்வர் என உண்மையாக இவரை அழைக்கலாம். திருவருட் பிரகாச வள்ளலாரின் அன்பர்*…. ஓமந்தூரார்
—————————————
சர்தார் வல்லபாய் படேலின் இரும்புக்கரங்கள் தான்
இதையும் செய்தன. இந்திய வரலாற்றின் இந்தப் பக்கங்களைப்பற்றிப் பேசப்படவில்லை. குறிப்புகள் கிடைப்பதில்லை.
562 சமஸ்தானங்களை இணைத்து ஒன்றுபட்ட இன்றையஇந்தியாவை சர்தார் படேல் உருவாக்கியதில் இந்தப் பக்கம்
மட்டும் அச்சிடப்படவில்லை.
 ஐதராபாத் சமஸ்தானத்திற்கு
இந்தியா இராணுவம் அனுப்பிய நாள் 12-9-1948. 
அதன் பின் 5  நாட்களில் அதாவது 18-9-1948ல்
 நிஜாம் சரணடைந்துவிட்டார்.
ஆனால் இந்திய இராணுவம் 21-10-1951 வரை 
- 3 ஆண்டுகளுக்கும் மேலாக போராடியது?
யாரை எதிர்த்து ?! ஏன்?
தெலுங்கனா பகுதியில் வாழ்ந்த விவசாயிகள்,சென்னா ரெட்டி மற்றும் சுந்தரய்யா தலைமையில் கம்யூனிஸ்டுகள்
பண்ணையார்களுக்குஎதிராகப் போராடி நிலத்தை கைப்பற்றி விவசாயம் செய்து
விளைந்ததை தங்களுக்குள் பகிர்ந்து கொண்டு வாழ்ந்தகுழு வாழ்க்கையை / சமதர்ம வாழ்க்கையை இந்திய இராணுவம்எதிர்த்து போராடியது.. விவசாயிகள் தங்கள் நிலங்களை மீண்டும்
பண்ணையார்களிடம் கொடுத்தாக வேண்டும் என்று ஆணையைஎதிர்த்து போரிட்டார்கள். அதுவும் இராணுவப் பயிற்சி இல்லாத
விவசாயிகள் 3 ஆண்டுகளுக்கும் மேலாக  போராடி இருக்கிறார்கள்.
இந்திய இராணுவம் 21-10-1951  தன் வெற்றியை அறிவித்தது.
தெலுங்கானாவில் மலர்ந்திருந்த ஒரு சோஷலிச அமைப்பு முறை வாழ்க்கை இப்படியாக இரும்புக்கரம் கொண்டு அழிக்கப்பட்ட து.
இந்த தெலுங்கனா வரலாற்றை எழுதுவதும் பேசுவதும் அறிந்து கொள்வதும்
இந்தியர்களுக்கு மறுக்கப்பட்டிருக்கிறது. 
(  ‘சிந்தனையாளன்’நவ 2018). 
இதில் சென்னை ராஜதானியின் முதல்வர் ஓமந்தூரார் பங்கும் அதிகம்…அது மறைக்கபட்டது. ஓமந்தூரார் தமிழ் கலைக்களஞ்சியம், விடுதலைக்கு பின் முதல் சமூக நீதி ஆணை, தமிழ் பயிற்சி மொழியை முதலில் அறிமுக செய்த மா மனிதரை வாக்கை விற்கும் தமிழகம் மறந்து விட்டது. அவருடைய படத்தை கூட மூன்று ஆண்டுகளுக்கு முன்தான் சட்ட மன்றத்தில் பல ஆண்டுகள் கோரிக்கைக்கு பின் வைக்கப்பட்டது.இத்தனைக்கும் ஓமந்தூரார் முதல் முதல்வர் இங்கு. அவர் 1947க்கு பின் விவசாய முதல்வர், தமிழின் முதல்வர், சமூக நீதி முதல்வர் என உண்மையாக இவரை அழைக்கலாம். திருவருட் பிரகாச வள்ளலாரின் அன்பர்….

இன்னெருவர் இராண்டாம் தமிழ் நாட்டின் முதல்வர் இராஜபாளையம் பி. எஸ். குமாரசாமி ராஜா நேர்மையின் இலக்கணம். இவரின் படம் 70 ஆண்டுகள் கடந்தும்  தமிழக சட்டமன்றத்தில் இல்லை. எதையும் அறியா ஆட்சி தர்பார்கள் இங்கு…..
முதல்வருக்கு இது தெரியமா?ஏதோ
 நடக்கிறது.
***
(2)
RadhakrishnanKS 
முதல் சமூக நீதியின் முதல்வர் ஓமந்தூரார்!
 சமூக நீதி கொள்கையில் ஓமந்தூராருடைய பணியை யாரும் பேசுவதுமில்லை, அடுத்தவர்களுக்கு சொல்வதுமில்லை. நீதிக்கட்சியில் 
வகுப்புரிமை ஆணைக்குப்பின் சென்னை ராஜதாணியின் பிரிமியராக (முதல்வர்) இருந்த ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் சமூக நீதியை 
பாதுகாக்க எடுத்த நடவடிக்கைகளை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். தென்னேட்டி விசுவநாதம் 1947 இல் வகுப்புவாரி 
இடஒதுக்கீடு ஆணையை ரத்து செய்யக் கோரி சட்டமன்றத்தில் தனி நபர் தீர்மானம் கொண்டுவந்த போது ஓமந்தூரார் 
தலைமையிலான அரசு அதை தோற்கடித்தது. 
அதுமட்டுமல்லாமல், அவர் ஆட்சி காலத்தில் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கென தனி இடஒதுக்கீடும் ஒதுக்கப்பட்டன. பிராமின் 
அல்லாதோர் 44% பிற்பட்ட வகுப்பினருக்கு 14% ஒடுக்கப்பட்ட மக்களுக்கு 14% ஆங்கிலோ இந்தியருக்கு 7% இஸ்லாம் மதத்தினருக்கு 7% 
பிராமணர்களுக்கு 14% என அவரது காலத்தில் இடஒதுக்கீடு அமைந்தது. இது தான் பிற்பட்ட மக்களுக்கு இடஒதுக்கீட்டிற்கான 
அடிப்படையும், முதல் ஆணையும் ஆகும். அப்போது ஓமந்தூராரை எதிர்த்து பலர் குரலெழுப்பினர். 

இவர் மீதான குற்றச்சாட்டுகளை நேருவிடம் அடுக்கினர். நேருவும் ஒடுக்கப்பட்டவர்களுக்கு மட்டும் இடஒதுக்கீட்டை வழங்குங்கள் 
என்று கூறினார். ஆனால் நேருவின் வார்த்தைகளை புறந்தள்ளிவிட்டு தான் இயற்றிய இடஒதுக்கீட்டு திட்டத்தை தைரியமாக 
நடைமுறைப்படுத்தினார்.
சென்னை வந்த காந்தியிடமும் ஓமந்தூராரை பற்றி இடஒதுக்கீட்டிற்கான பிரச்சனையை தேவையில்லாமல் குற்றச்சாட்டுகளாக 
வைக்கும் போது காந்தி அதற்கு செவி சாய்க்கவில்லை. ஏனெனில் ஓமந்தூராரை பற்றி காந்தி நன்கு அறிவார். அவர் முதல்வர் 
பதவியை சர்வ சாதாரணமாக தூக்கி எறிந்துவிட்டு, "போங்கடா. போக்கத்த பசங்களா" என்று சொல்லிவிட்டு வடலூரில் வள்ளலாரின் 
சத்திய ஞான சபையில் சென்று அமைதியாக தன் அறப்பணியை செய்தார். 
இப்போது சொல்லுங்கள் ஓமந்தூராரை சமூகநீதிக் காவலர் என்று சொல்ல வேண்டாமா? பெரியாருக்கு இணக்கமாகவும், பெரியாரின் 
பாராட்டுகளையும் பெற்ற நேர்மையான ஓமந்தூரார் வரலாற்றை ஏன் மறைக்கின்றோம். இன்றைக்குள்ள இளைஞர்களுக்கு ஓமந்தூரார் 
யாரென்று கூடத் தெரியாதது மிகவும் வேதனையான விடயமாகும். 
குறிப்பு: கசங்கிய ஆடையோடு எலிசபெத் இராணியை வரவேற்க சென்ற போது உடனிருந்தவர்கள், இப்படி கசங்கிய ஆடையோடு 
போறீங்களேனு கேட்டபோது, "இது தான் இந்தியாவுல ஆடையா மக்கள் போட்டிருக்காங்க. இதை அவங்
க ஏத்துக்கலன்னா நான் 
வரவேற்கவே வரல" என்று தைரியமாக சொல்லி சென்று வரவேற்றார்.
***
#சர்தார்_வல்லபாய்_படேல்
#ஓமந்தூரார்
#தெலுங்கனா
#சென்னா_ரெட்டி 
#சுந்தரய்யா_கம்யூனிஸ்டுகள்
#இராஜபாளையம்_பி_எஸ்_குமாரசாமிராஜா

#ksrpost
1-12-2022.

OCT 18 2026

  Remember how foreign-funded activists like Medha Patkar tried their best to deprive the Kutch region of Narmada water until Modi called th...