#*கிரா விழாவில் கலாப்ரியா, வண்ணதாசன் அழைக்கவில்லையா* #*கனிமொழி அவர்களே...
ஏதோ வாக்கு வங்கி அரசியல். நடக்கட்டும்*…
—————————————
இன்று (2-12-2022)கோவில்பட்டியில் கி.ராவுக்கு அரசு விழா. கனிமொழி அவர்களின் முயற்சியில்நடத்துகிறார்களாம். சிறப்பாக நடக்கட்டும். வாழ்த்துகள்.
நான் திமுகவுக்கு உழைத்ததை கனிமொழி மறந்திருப்பார். நான் அவருக்குத் துணை நின்றதெல்லாம் இன்றைக்கு அவருடைய நினைவில் இருக்காது. இந்த நிலையில் கி.ரா விழாவுக்கு என்னை அழைக்கவில்லை என்பது வேறு விடயம்.
கி.ராவுக்கு நெருக்கமான திரைப்படக் கலைஞர் சிவகுமார், மாமா மச்சான் என்று கி.ராவுடன் உறவு கொண்டாடிய கவிஞர் கலாப்ரியா, வண்ணதாசன் போன்றோரை ஏன் அழைக்கவில்லை?திருவண்ணாமலையில் இருந்து பவா செல்லத்துரையை அழைக்கும்போது ஏன் இவர்களை அழைக்கவில்லை? வைகோ அவர்களைக் கூட அழைக்கவில்லை என்று தெரிகிறது.
ஒரு விழா நடத்துவது என்றால் அந்த விழா நாயகருக்கு நெருக்கமானவர்களை அழைப்பது வாடிக்கை. கி.ராவுக்கு அந்த வரிசையில் தென்காசியில் வசிக்கும் ரசிகமணி குடும்பத்தார், நடிகர் சிவகுமார், தி.க.சி.யின் புதல்வர் வண்ணதாசன், கவிஞர் கலாப்ரியா, தீக்கதிர்- செம்மலர் எஸ்.ஏ. பெருமாள், ஆனந்தவிகடனில் கரிசல் காட்டுக் கடிதாசி 1980 வரை காரணமாக இருந்த நானும் பாரதி கிருஷ்ணகுமாரும், கோவை விஜயா பதிப்பகம் வேலாயுதம், கவிஞர் மீராவின் புதல்வர் அகரம் பதிப்பகம் கதிர், கி.ராவுக்கு ஆரம்பகட்டத்தில் இருந்து உதவியாக இருந்த கோவில்பட்டி மாரீஸ் என பலர் கனிமொழி அவர்களின் கவனத்துக்கு வரவில்லையா?
வேறு சில தகவல்களும் வந்தன. தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் இந்த விழாவுக்கான அழைப்பிதழை இரண்டு, மூன்று முறை மாற்றி அடித்து குளறுபடியானதாகத் தகவல். கி.ராவின் புதல்வர்கள் திவாகரன், பிரபாகரன் பெயரில்லாமல் அச்சடிக்கப்பட்டதா அழைப்பிதழ்? இப்படியாக விழா நடக்கிறது. ஏதோ வாக்கு வங்கி அரசியல். 2024 – ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலை நோக்கி கனிமொழி நகர்வதற்கு இப்படியான நடவடிக்கைகள். நடக்கட்டும். இயற்கை என்று ஒன்று இருக்கிறது.
கி.ரா விழாவை யார் நடத்தினால் என்ன? எவர் கலந்து கொண்டால் என்ன? கி.ராவுக்கு நெருங்கியவர்கள் எவர் விடுபட்டால் என்ன?
வாழ்த்துகள்.
#ksrpost
2-12-2022.
No comments:
Post a Comment