—————————————
காவேரிக்கு பொன்னி என பல பெயர்கள் உண்டு அதுவும் கல்லணை தாண்டிவிட்டால் 16 வகை பெயர்களோடு பிரிந்து ஓடும் தமிழகம் இது
அகத்தியர் வந்து அவர் சீடர் தொல்காப்பியர்தான் தமிழுக்கு இலக்கணமே எழுதினார் எனும் வகையில் அகத்தியர் காலமே மூத்தது
ராமாயண காலத்திலே தாமிரபரணியின் பெருமை சொல்லபட்டுள்ளது, விசுவாமித்திரர் தென்முனையான விஜயாபதி பக்கம் தாடகை காட்டில் தவமிருந்த காலங்களில் ராமன் அவருக்கு துணையாக வந்தபொழுதே தாமிரபரணி பற்றி சொல்லபட்டுள்ளது
"அதஸ்யாஸ்னம் நகல்யாக்ரே மலயங்ய தாம்ரபரணம் க்ராஹ ஜிஷ்டாம்த்ரச்யத்" என்பது அந்த வரி
இப்படி ஒரு காட்சி மகாபாரத்திலும் உண்டு, பாண்டவர்களுக்கு தாமிரபரணியினை சுட்டிகாட்டும் வரியினை அந்த பாரதம் காட்டும்
காளிதாசனின் ரகுவம்சத்திலும் அது தாமிரபரணியாகவே உண்டு
இந்திய இலக்கியங்களில் ஒன்றான "தாமிரபரணி மகோமித்யம்" எனும் நூல் அதன் பெருமைகளையும் சிறப்பையும் இன்னும் கல்கி அவதார வருகையினையும் சொல்கின்றது
தாமிரபரணி நீரின் கரையில் அமர்ந்திருப்பதாலேதான் நெல்லையப்பர் கோவிலில் "தாமிர சபை" என்றொரு சபையே அந்நதி பெயரால் அமைந்தது
நம்மாழ்வார் தன் பாடலில் "பொருநல் நதி" என அதன் நிதானமான போக்கை சுட்டிகாட்டி பாடியதால் அந்த பெயர் திரிந்து பொருநை நதி என்றாயிற்று
தூத்துகுடியின் பழைய பெயர் தோத்துகரை என்பதே, அப்படித்தான் 15ம் நூற்றாண்டுக்கு முன்புவரை இருந்தது என தகவல்.தோத்துகரை தூத்துகுறையாக மாறி பின் தூத்துகுடியாயிற்றுமணப்பாடு கூட மாம்பாடு
தாமிரபரணி காணும் நீர்வீழ்ச்சி இன்றும் கல்யாண தீர்த்தம் என்றுதான் அழைக்கபடுகின்றது, அது உருவாகிவரும் பாபநாசம் ஆகும்.
இப்படி பல தகவல்கள்…
#பொருநை #தாமிரபரணி
#ksrpost
9-12-2022.
No comments:
Post a Comment