*ஆம் மிஸ்டர்*,
நான் மறுக்கவில்லை. மற்றவர்களைப் போல பாசாங்கு செய்யவில்லை. நடிக்கவில்லை. தமிழ், தெலுங்கு, ஆங்கிலம் என்ற மும்மொழி பேசும் தமிழன்தான் நான். இது உண்மைதான். எங்கும் இதை மறைக்கவும்வில்லை. அது எனக்கு அவசியமும் இல்லை.
தமிழ்நாட்டின் நலன்களுக்காவும்,
உரிமைகளுக்காகவும், பிரச்னைகளுக்காகவும் என்னளவு இன்றைய மற்றும் முன்னாள் அமைச்சர்களோ, நாடாளுமன்ற உறுப்பினர்களோ தமிழக நலன் கருதி களப்பணி ஆற்றியுள்ளார்களா என்ற கேள்வியை உங்கள் முன் வைக்கிறேன். பதில் சொல்லுங்கள் மிஸ்டர்.
மற்றவர்களைப் போல நீங்கள் சொல்லக் கூடிய விடயத்தைப் பார்த்து அஞ்சவோ, பதற்றப்படவோ மாட்டேன். எனது கருத்தை எப்போதும் வெளிப்படையாகச் சொல்வேன்.
அன்பின் வழியது உயர்நிலை…..
வாய் தவறி விழும் பேச்சுக்கள். கை தவறி விழும் கண்ணாடியை விட கூர்மையானது.
யாரிடம் பேசுகிறோம் என்பதை விட என்ன பேசுகிறோம் என்பதை அறிந்து கொண்டு பேசுங்கள்.
தன்னுடைய செயலும் தன்னுடைய வார்த்தைகளும் மட்டும்தான் சரியன்று உரத்த குரலில் வாதாடுபவர்கள் மத்தியில் அமைதி மட்டும் ஆயுதம். இருப்பினும் சிலவற்றை சொல்ல வேண்டியுள்ளது அவர்களுக்கு புரியவைக்க.
#ksrpost
24-12-2022
No comments:
Post a Comment