Sunday, December 18, 2022

#ஈழத்தின் யாழ்ப்பாணம் நல்லூர் ஆறுமுகநாவலர்-200.



—————————————
ஈழத்தின் யாழ்ப்பாணம் பகுதியில் உள்ள நல்லூரில் ஆறுமுக நாவலர் பிறந்து 200 டிசம்பர் 18, 1822 ஆண்டுகளாகிவிட்டன. அவருடைய குடும்பத்தில் பலரும் தமிழ் அறிஞர்கள். ஆரம்பக் கல்வி வீட்டிலேயே தொடங்கியது. சிறு வயதிலேயே தமிழ், சமஸ்கிருதம், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் புலமை பெற்றார்.  .
யாழ்ப்பாணம் மெதடிஸ்த ஆங்கில பாடசாலையில் (மத்திய கல்லூரி) தனது 20 ஆவது வயதில் ஆசிரியராகப் பணியில் சேர்ந்த ஆறுமுகநாவலர், அந்தப் பள்ளியின் நிறுவனர் பேர்சிவல் பாதிரியார் பைபிளைத் தமிழாக்கம் செய்தபோது, அதற்கு உறுதுணையாக இருந்தார்.
 என்றாலும் சைவ சமயத்தின் மீதான ஈர்ப்பு அவருக்கு அதிகமாகவே இருந்தது.
வண்ணார்பண்ணை வைத்தீஸ்வரன் கோயிலில் 1847 முதல் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் சொற்பொழிவு ஆற்றினார்.  கோவிலில் டிசம்பர் 31, 1847 ஆம் நாள் நடைபெற்றது.
சைவ சமய வளர்ச்சி பணிகளில் ஈடுபடுவதற்காக 1848 ஆம் ஆண்டு ஆசிரியர் பணியைத் துறந்த ஆறுமுக நாவலர், அச்சு இயந்திரம் வாங்க 1849- இல் சென்னை வந்தார்.
 திருவாவடுதுறை ஆதீனத்தில் சைவப் பிரசங்கம் செய்தார். அவருக்கு நாவலர் பட்டம் திருவாவடுதுறை ஆதீனத்தில் வழங்கப்பட்டது. 
 தன் வீட்டிலேயே அச்சுக்கூடம் நிறுவி, பாலபாடம், ஆத்திச்சூடி, கொன்றை வேந்தன் உரை, சிவாலய தரிசன விதி, சைவ சமய சாரம், நன்னூல் விருத்தியுரை உள்ளிட்ட பல நூல்களை அச்சிட்டார். பெரிய புராணத்தை வசன நடையில் எழுதி அச்சிட்டார். சூடாமணி, நிகண்டுரை, சவுந்தர்ய லஹரியை பதிப்பித்தார்.
   பரிமேலழகர் உரையை முதலில் பதிப்பித்தவர் ஆறுமுக நாவலரே.
இருபதுக்கும் மேற்பட்ட நூல்களைப் படைத்துள்ளார்.  நன்னூல் விருத்தியுரை, நைடதவுரை, திருவிளையாடல் புராணம், நன்னூற் காண்டிகையுரை, சிவபூசா விதி, மூன்றாம் அனுட்டான விதி, குரு சிஷ்யக் கிரமம், பூசைக்கு இடம்பண்ணும் விதி, சிராத்த விதி, தருப்பண விதி, போசன விதி, தமிழ் அகராதி, தமிழ்-சமக்கிருத அகராதி, தமிழ்-ஆங்கில அகராதி முதலிய நூல்களை எழுதுவதிலும் சைவப் பிரசங்கங்கள் செய்வதிலும் ஈடுபட்டார். 
சென்னையில் திருவாசகம், திருக்கோவையார் நூல்களை 1859 ஆம் ஆண்டு வெளியிட்ட ஆறுமுக நாவலர்,  பெரியதொரு அச்சியந்திரத்தை விலைக்கு வாங்கி, சென்னை தங்கசாலைத் தெருவில் வித்தியானுபாலன இயந்திரசாலை என்ற அச்சகம் நிறுவினார். பல நூல்களை அச்சிட்டார். 
போர்த்துக்கீசியரால் அழிக்கப்பட்ட, யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள நகுலேஸ்வரம் எனும் பழைமையான சிவபெருமான் திருக்கோயிலை மீண்டும் உருவாக்க முயற்சி செய்தார். சைவம், தமிழ் இரு கண்களாகக் கொண்டிருந்த ஆறுமுகநாவலர், 05-12-1879 அன்று இவ்வுலகை விட்டு மறைந்தார்.
பழந்தமிழ் நூல்களுக்கு உயிர் கொடுத்த தமிழ் சான்றோர்களின் வரிசையில் யாழ்ப்பாணம் ஆறுமுக நாவலருக்கு மிக முக்கியமான இடம் உண்டு.

#ஸ்ரீலஸ்ரீ_ஆறுமுகநாவலர்_நாவலர்.

#ksrpost
18-12-2022.

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...