#*இலங்கை அரசியல் சாசனம் சட்டத்திருத்தம்* – #*ஈழத்தமிழர்களுக்கு அதிகாரப்பகிர்வு*? – புனர் வாழ்வு நடவடிக்கைகள்.. #கடந்த கால அவநம்பிக்கைகள்.
ஈழத் தமிழர்களுக்கு அதிகாரம் பகிர்வு குறித்தான இலங்கை அரசியல் சாசனத்தின் 13 ஆவது சட்டத் திருத்தத்தைக் குறித்து, இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் கொழும்பில் நடந்துள்ளது. இந்தக் கூட்டத்தில் தமிழர் அமைப்புகள், கட்சிகள் கலந்துள்ளன. இதில் ராஜீவ் – ஜெயவர்த்தனே கையொப்பமிட்ட இந்திய – இலங்கை ஒப்பந்தத்தின்படி (1987 ) 13 ஏ திருத்தச் சட்டத்தின்படி மாகாண கவுன்சில்களுக்கு அதிகாரம் வழங்குவது குறித்து, முடிவெடுக்கலாம் என்று பேசப்பட்டுள்ளது. 13 ஆவது சட்டத்திருத்தம் ஏற்கெனவே ஈழத்தமிழர்களால் நிராகரிக்கப்பட்ட ஒன்றுதான்.
ஏனெனில் மாகாண கவுன்சிலில் முதல்வராக இருந்த விக்னேஸ்வரன் எந்த அதிகாரமும் இல்லாமல் பொம்மை போல 5 ஆண்டுகள் தன் பதவிக் காலத்தைக் கழித்தார் என்பதை மறுக்க முடியாது.
இது ஒருபுறம் இருக்க, ஏற்கெனவே ஈழத்தமிழர்கள் தொடர்ந்து கேட்டு வருகிற அதிகாரங்களைக் குறித்து பொது வாக்கெடுப்பு (referendum ரெபரண்டம்) நடத்த வேண்டும் என்ற கோரிக்கையும் அப்படியேதான் உள்ளது. அதோடு, 2009 - இல் நடந்த முள்ளிவாய்க்கால் இறுதிப் போர் வரை ஈழத்தில் நடந்த இன அழிப்பு, இனப் படுகொலை குறித்து சுதந்திரமான சர்வதேச விசாரணை, முள்ளிவாய்க்கால் போர் நடந்து 13 ஆண்டுகளுக்கு மேலாகியும், வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தமிழருடைய நிலங்களில் ராணுவ முகாம்கள் அமைத்து, அங்கே வலம் வந்து பீதியைக் கிளப்புகின்ற சிங்கள ராணுவத்தைத் திரும்பப் பெறுவது, 2009 வரை காணாமல் போனவர்கள், கைது செய்யப்பட்டவர்கள் என அடையாளம் கண்டு, அவர்களுடைய உறவினர்களிடம் ஒப்படைப்பது, மேலும் ஈழப்பகுதியில் விதவைகளான பெண்களுக்குப் புனர் வாழ்வுத் திட்டம் என்பனவற்றைக் குறித்து சிங்கள அரசு என்ன சொல்கிறது என்பதும் முக்கியமான விடயங்களாகும்.
#ஈழத்தமிழர்களுக்கு_அதிகாரப்_பகிர்வு?
The Indo - Sri Lanka Accord and the 13th Amendment to the Sri Lankan Constitution
read more
#ksrpost
16-12-2022.
No comments:
Post a Comment