Saturday, December 24, 2022

#எம்ஜிஆர் நினைவுநாள்

#எம்ஜிஆர் நினைவுநாள்



—————————————
எம்.ஜி.ஆர் முதல்வராக இருந்தபோது 1985 - இல் பள்ளிக்கூடங்களில் தொடங்கப்பட்ட சத்துணவுத் திட்டம் மிக முக்கியமான நிகழ்வாகும். 1982 – ஆம் ஆண்டு ஜூலை 1 ஆம் தேதி இந்தத் திட்டத்தை அன்றைய முதல்வர் எம்ஜிஆர் திருச்சி மாவட்டம் பாப்பாக்குறிச்சியில் தொடங்கி வைத்தார். முதல்வர் காமராஜர் மதிய உணவுத்திட்டத்தை கொண்டு வந்தார்.
  
1985 - இல் இந்திய திட்டக் குழுவிடம் முதல்வர் எம்.ஜி.ஆர் இதற்கான நிதி உதவியைக் கேட்டார். ஆனால் திட்டக்குழுவின் துணைத்தலைவராக இருந்த டாக்டர் மன்மோகன் சிங் (பிற்காலத்தில் பிரதமர்) நிதி வழங்க இயலாது என்றும், இந்தத் திட்டம் வீணான திட்டம் என்றும் கூறினார். சத்துணவுக்கு பணம் ஒதுக்க முடியாது என்று மன்மோகன் சிங் குறிப்பிட்டதைக் கடுமையாகக் கண்டித்து திட்டக்குழு கூட்டத்தில் இருந்து எம்.ஜி.ஆர். வெளிநடப்பு செய்தார். பின்னாளில் ராஜீவ் காந்தி எம்.ஜி.ஆருக்குச் சாதகமான முடிவுகளை எடுத்து பணம் ஒதுக்கியதும் உண்டு. எம்ஜிஆரின் கோரிக்கையை அப்போது மறுத்த மன்மோகன்சிங், பிரதமரானவுடன் 2013 -இல் அதே சத்துணவுத் திட்டத்தை பள்ளி  மாணவ, மாணவியருக்கு சிங் அறிவித்ததும் உண்டு. நாளை எம்.ஜி.ஆரின் நினைவு நாள். 
   
இந்தியாவில் முதன்முதலாக மத்திய அரசை எதிர்த்துப் போராட்டம் நடத்திய முதலமைச்சர்,  மேற்கு வங்க முதல்வராக இருந்த பி.சி.ராய். (1948ஆம் ஆண்டு முதல் 1962ஆம் ஆண்டில் தமது இறப்பு வரை 14 ஆண்டுகள் காங்கிரசு முதலமைச்சராக ...ஒவ்வொரு இவர் நினைவாக ஆண்டும் ஜூலை 1 ஆம் தேதி, தேசிய மருத்துவர்கள் தினத்தன்று வழங்கப்படுகிறது)
அதேபோன்று, மத்திய அரசை எதிர்த்து அரிசி வழங்கல் குறித்து அண்ணா நினைவிடம் அருகில் எம்.ஜி.ஆர் உண்ணாவிரதம் இருந்ததும் உண்டு. 
  
கர்நாடகாவில் அர்ஸ்,குண்டுராவ் முதல்வர்கள்லாக இருந்தபோது இரண்டு மாநிலங்களும் காவிரிப் பிரச்னையில் ஒரு தீர்வுக்கு வரக் கூடிய நிலை ஏற்பட்டது. ஆனால் ஏதோ ஒரு சூழ்நிலையில் அது நடக்காமல் போய்விட்டது. எம்.ஜி.ஆர் ஆட்சிக் காலத்தில் சிலர் எதிர்த்ததால், அப்போது ஏற்பட வேண்டிய அந்த ஒப்பந்தம் கிடப்பில் போடப்பட்டது. அன்றைக்கு ஒப்பந்தம் கையெழுத்து ஆகியிருந்தால் தமிழகத்துக்கு காவிரிப் பிரச்னையில் பெரும் தீர்வு கிடைத்திருக்கும். காவிரி பிரச்னை இன்றுவரை ஒரு தொடர் சிக்கலாக ஆகியிருக்காது என்பது என் தனிப்பட்ட கருத்து.

# எம்.ஜி.ஆர் நினைவு நாள்
# சத்துணவுத் திட்டம்
# மன்மோகன் சிங்
# காவிரிப் பிரச்னை

# ksrpost
24-12-2022.

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...