Friday, December 9, 2022

இது 1980 - களில் எடுத்த படம். இன்றைய முதல்வர் திருநெல்வேலி, தூத்துக்குடி வட்டாரத்தில் சுற்றுப்பயணம் வந்த நேரம். கோவில்பட்டி கூட்டத்தில் இன்றைய முதல்வர் ஸ்டாலின் பேசும்போது, என்னுடன் தூத்துக்குடி மறைந்த என்.பெரியசாமி இருக்கும் பழைய புகைப்படம்.

இது 1980 - களில் எடுத்த படம். இன்றைய முதல்வர் திருநெல்வேலி, தூத்துக்குடி வட்டாரத்தில்  சுற்றுப்பயணம் வந்த நேரம். கோவில்பட்டி கூட்டத்தில் இன்றைய முதல்வர் ஸ்டாலின் பேசும்போது, என்னுடன் தூத்துக்குடி மறைந்த என்.பெரியசாமி இருக்கும் பழைய புகைப்படம். 

அந்த கட்டத்தில் இன்றைக்குள்ள திமுகவில் அறியப்பட்டவர்கள் துரைமுருகன், டி.ஆர்.பாலு,  மட்டுமே. 

இந்தப் படம் எதற்கென்றால், மதுரையில் இருந்து திருச்செந்தூர் வரை திருச்செந்தூர் முருகன் வேல் கொள்ளையடிக்கப்பட்டது என்று கலைஞர் நெடிய பயணம் சென்றபோது, விருதுநகரில் சோடா பாட்டில் வீசியவர்கள், ராஜீவ் படுகொலைக்குப் பிறகு 91 - இல் ஆட்சியை இழந்த பின் பழனி நாடாளுமன்ற இடைத்தேர்தல் மற்றும்   ராணிப்பேட்டை சட்டமன்ற இடைத் தேர்தல் பிரசாரத்துக்கு கலைஞர் சென்றபோது, அவருடைய வேனைத் தாக்கியவர்கள், ஜெயலலிதா ஆட்சியில் போக்குவரத்துத்துறையில் ஏதோ மீட்டர் வாங்கிய வகையில் ஊழல் என்று இன்றைய முதல்வர் பேச, அதை மறுத்து எதிர்த்துப் பேசியவர்கள், (அது இன்றைக்கும் சட்டமன்ற குறிப்பேடுகளில் இருக்கிறது). ஜெயலலிதா ஆட்சியில் சட்டப் பேரவையில் இருக்கையில் ஏறி நின்று கடுமையான வசைமொழிகளுடன் பேசியவர்கள் எல்லாம் இன்றைக்கு திமுகவில் பிரதானமாக அமைசர்களாக வலம் வருகிறார்கள். 

கடந்த காலங்களில் முள்ளிவாய்க்கால் என பல விடயங்களில் தி.மு.க வையும் தலைவர் கலைஞரையும் கடுமையாக விமர்சித்து எதிர்வினையாற்றியவர்கள் இப்போது மாநில திட்டக் குழுவிலும் தமிழ்நாடு பாட நூல் நிறுவனத்திலும் கலைஞர் டிவியிலும் இருக்கின்றார்கள். இதில் வேடிக்கை என்னவென்றால், 2001 - இல் கலைஞர் கொடும்பாவியை எதிர்த்தவர், இன்று திமுக ஆட்சியில் ஒரு வாரியத் தலைவர். இப்படி நேற்று வரை தி.மு.க.விற்கு எதிராக கடுமையான எதிர்வினை ஆற்றியவர்கள் இன்று திமுக ஆட்சித் தயவில் முன்னிலை வகிக்கின்றனர். இதை என்ன சொல்ல ?

அந்தக் காலத்தில் இந்தப் புகைப்படம் எடுக்கப்பட்டபோது, இன்றைக்கு திமுகவில் உள்ள அமைசர்கள் சிலர் அரசியலிலேயே இல்லை என்று நினைக்கும்போது வேடிக்கையாக உள்ளது.

போரினில் யானை விழக்கண்ட - பல
பூதங்கள் நாய்நரி காகங்கள் - புலை
ஓரி கழுகென்றிவை எல்லாம் - தம
 துள்ளம் களிகொண்டு விம்மல்போல் - மிகச்
சீரிய வீமனைச் சூதினில் - அந்தத்
தீயர் விழுந்திடக் காணலும் - நின்று
மார்பிலும் தோளிலும் கொட்டினார் - களி
 மண்டிக் குதித்தெழுந்தாடுவார்...

- பாரதி( பாஞ்சாலி சபதம்)
#ksrpost
9-12-2022.


No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...