#*தஞ்சை சரசுவதி மகால் நூலகம்*
—————————————
தஞ்சை முள்ளிவாய்க்கால் முற்றம் நிகழ்ச்சிக்குப் பிறகு, சென்னைக்குப் புறப்படும் வழியில் தஞ்சை சரசுவதி மகாலுக்குச் சென்றேன். மத்திய, மாநில அரசுகள் மூலம் இதன் நிர்வாகம் உதவிகள் பெறுகின்றன. நான் அறிந்தவரையில் அங்கே பணியாட்கள் குறைவாக இருப்பதாகத் தெரிகிறது. அவர்களுக்கும் ஊதியம் கிடைப்பதிலும் பிரச்னைகள் இருக்கின்றன. தாமதமாக ஊதியம் கிடைப்பதும் தெரிய வருகிறது. அங்கு பணிபுரிபவர்கள் யாரும் இதைப் பற்றி கருத்து சொல்லவில்லை. தஞ்சை சரசுவதி மகால் நூலகத்தில் புத்தகங்களை நல்லவிதமாகப் பராமரிக்க மத்திய, மாநில அரசுகள் முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும்.
#தஞ்சை_சரசுவதி_மகால்_நூலகம்
#ksrpost
22-12-2022.
No comments:
Post a Comment