—————————————
91 வயதைக் கடந்த அண்ணன் புதுக்கோட்டை புலவர் துரை.மதிவாணன் அவர்களின் 90 ஆம் அகவை மலரைப் பார்க்கும்போது பழைய அரசியல் நிகழ்வுகள் கண்முன்னே நிற்கின்றன.
9 ஆம் வகுப்பு படிக்கும்போதே திராவிட இயக்கக் கொள்கைகளினால் ஈர்க்கப்பட்ட அண்ணன் மதிவாணன், அதன் பிறகு, தீவிர அரசியல் செயற்பாட்டாளராக மாறிவிடுகிறார். 1953 இல் நடந்த மும்முனைப் போராட்டத்தின் ஒருபகுதியான ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு கைதாகி, திருச்சி சிறையில் மூன்று மாதக் கடுங்காவல் தண்டனையை அனுபவிக்கிறார்.
திராவிட இயக்கத்தின் முன்னோடிகளான அண்ணா, ஈ.வெ.கி.சம்பத், சி.பி.சிற்றரசு, இரா.நெடுஞ்செழியன்,கலைஞர்,
மதியழகன், என்.வி.நடராசன் உள்ளிட்ட பலருடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்த புலவர் மதிவாணன், திமுக திராவிட நாடு பிரிவினைக் கொள்கையை கைவிட்டதால் 1963 – இல் திமுகவை விட்டு வெளியேறுகிறார். தமிழ் தேசிய உணர்வுடன் செயல்பட விரும்பிய அவருக்கு அண்ணன் பழ.நெடுமாறன் தொடர்பு கிடைக்கிறது.
புதுக்கோட்டை நாடாளுமன்றத் தொகுதியின் திமுகவின் முதல் உறுப்பினரான (1981) அண்ணன் மதிவாணன், என்மேல் அளவிடற்கரிய அன்பு உடையவர். எந்த பொருள் குறித்த ஐயம் என்றாலும் அவர் என்னிடம் கேட்பதும், நான் அவரிடம் கேட்டுத் தெரிந்து கொள்வதும் எங்களுக்குள் உறவுப் பாலத்தை உறுதியாக அமைத்திருக்கிறது. அண்ணன் மதிவாணன் நீண்ட நாட்கள் வாழ்க என வாழ்த்தவே இந்தப் பதிவு.
#ksrpost
15-12-2022.
No comments:
Post a Comment