Tuesday, December 20, 2022

#*சமூக நீதி பேசுபவர்கள் விடுதலைக்குப் பின் முதன்முதலாக தமிழகத்தில் சமூக நீதி உத்தரவைப் பிறப்பித்த ஓமந்தூராரைப் பற்றி ஏன் பேசுவதில்லை*?



—————————————
 கடந்த 1928- இல் அன்றைய சென்னை மாகாணத்தின் நீதிக்கட்சி அரசு ஒவ்வொரு 12 இடங்களும், பார்ப்பனர் 2, பார்ப்பனரல்லாதார் 5, முஸ்லீம் 2, ஆங்கிலோ இந்தியக் கிறிஸ்துவர்1  கிறிஸ்துவர் 2, தாழ்த்தப்பட்டோர்  பழங்குடியினர் 1  என  திட்டமான ஒதுக்கீட்டு முறையை நடைமுறைப்படுத்தினர். 1947 – இல் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் ஒவ்வொரு 14 இடங்களும், பார்ப்பனர் 2, பார்ப்பனரல்லாத ஹிந்து 6, பிற்படுத்தப்பட்ட ஹிந்து 2, தாழ்த்தப்பட்டோர் பழங்குடியினர் 2, ஆங்கிலோ இந்திய கிறிஸ்தவர் / இந்திய கிறிஸ்தவர் 1, முஸ்லீம் 1 என மாற்றியமைக்கப்பட்டது. 

பின் 1947இல் நாடு விடுதலை அடைந்த பின் சென்னை ராஜதானியின் முதல்வராகப் (பிரிமியர்) பொறுப்பேற்ற ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார், இந்தியாவில் முதன்முதலாக பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களுக்கான சமூகநீதி அரசாணையைப் பிறப்பித்தார். அன்றைக்கு தமிழ்நாட்டில் தெற்கே திருநெல்வேலி, கன்னியாகுமரி நீங்கலாக இன்றைய ஆந்திரப் பிரதேசம், கேரளத்தின் மலபார் பகுதி, தெற்கு கர்நாடகம் ஆகியவை உள்ளடங்கிய  மாநிலத்தில் இந்த உத்தரவை ஓமந்தூரார் முதன்முதலாகக் கொண்டு வந்தார். சமூகநீதிக்கு முன்னோடியாக அவர் திகழ்ந்ததை யாரும் மறுக்க முடியாது.

தமிழ் வழி பயிற்சி, தமிழில் பாடப்புத்தகங்கள், தமிழ்க் கலைக்களஞ்சியம் எட்டுத் தொகுதிகள் என அவர் தமிழுக்காற்றிய பல பணிகளையும் சொல்லிக் கொண்டே போகலாம். பட்டேல்,இவர் இல்லையென்றால், ஹைதராபாத் நிஜாமின் ராஜ்யம் இந்தியாவுடன் இணைந்திருக்காது. 

சமூகநீதி பேசுபவர்கள் ஏன் ஓமந்தூராரைப் பற்றி பேசுவதில்லை? அவருக்கு ஏன்  சிலை எழுப்பவில்லை என்பதுதான் வினா. சமூகநீதிக்குப் பாடுபட்ட  தமிழத்தின் முதல் முதலமைச்சர்  ஓமந்தூராரின் படத்தை தமிழக சட்டப் பேரவையில் 73 ஆண்டுகளுக்குப் பிறகு – மூன்று ஆண்டுகளுக்கு - முன்னால்தான் இங்குள்ள ஆட்சியாளர்கள் திறந்த வைத்தனர். இதுதான் நமது சமூகநீதி!

#சோசியல்_ஜஸ்டிஸ்_இன்_தமிழ்நாடு
#ஓமந்தூர்_ராமசாமி_ரெட்டியார்
#கேஎஸ்ஆர்போஸ்ட்
#social_justice
#ksrpost
20-12-2022.

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...