வழக்கறிஞர். அரசியல் சிந்தனையாளர். மூத்த அரசியல்வாதி. திரு. கே.எஸ்..ராதாகிருஷ்ணன். அப்படிபட்டவர் அண்மையில் திமுகவில் இருந்து சஸ்பென்ட் செய்யப்பட்டார். அவரது ஹாட் பேட்டி.
1. நீங்கள் அரசியலில் கலைஞரோடும், திமுகவோடும் நீண்ட காலம் பயணித்தவர். உங்களால் மறக்க முடியாத சம்பவம் என்ன? திமுக தலைவர் கலைஞரோடு பயணித்த காலங்கள் மறக்க முடியாதவை. அதில் பல முக்கியமானவர்களாக இருந்தாலும் குறிப்பிட்டு சொல்லும் படியாக இருப்பது பல விடயங்கள். அதில், திமுகவுக்கு நெருக்கடியான காலத்தில் டெஸ்ஸோ மாநாடு நடத்தியது. பின்பு மாநாட்டின் தின்பாங்கரை கலைஞரை சந்தித்து ஐநா மன்றத்திற்கு இன்றைய முதல்வர் வழங்கிய நடவடிக்கைகள் அதற்குப் பிறகு பிரிட்டன் நாடாளுமன்றத்தில் நடந்த அரசியல் கட்சி தலைவர் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் இன்றைய முதல்வர் அழைத்துச் சென்றது. டெஸோ மாநாடு முன்பு முள்ளிவாய்க்கால் துயரங்கள் அடங்கிய சிடியை கலைஞரிடம் கொடுத்தேன். அதை பார்த்துவிட்டு இரவெல்லாம் எனக்கு தூக்கம் வரவில்லையா ஈழத்தில் போர் நின்றுவிட்டது. ஒரு பிரச்சனையும் இல்லை என்று டெல்லி காங்கிரஸ்காரர்கள் என்னை ஏமாற்றி விட்டனர் என்று கண்ணீர் சிந்தினார். அதேபோல பிரபாகரன் அம்மா பார்வதி அம்மாள் மருத்துவ சிகிச்சைக்கு தமிழகம் வந்தபோது அதை மத்திய அரசு முறையாக சொல்லவில்லை என்று வருந்தினார். அப்போது நீயும் திமுகவில் இல்லை. நீ இருந்திருந்தால் இந்த சம்பவங்கள் நடந்து இருக்காது. அடுத்து ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கை கர்நாடக நீதிமன்றத்திற்கு மாற்றியது. முரசொலி மாறன் உயிரோடு இருந்திருந்தால் திமுக, எனது அரசியலும் இன்னும் உயிர்பிப்போடு இருந்திருக்கும். நள்ளிரவு கலைஞர் கைது ஆண்டிப்பட்டி சைதாப்பேட்டை சங்கரன்கோவில் ஓட்டப்பிடாரம் இடைத்தேர்தல் பணிகள் அது மட்டுமல்ல இன்றைய முதல்வர் வேளச்சேரி வீட்டில் காவல்துறை நுழைந்து ஸ்டாலினை கைது செய்ய வந்த போது காவல்துறையை நான் தடுத்ததால் என் பெயரும் சேர்க்கப்பட்டது மறுநாள் மனித உரிமை ஆணையத்திற்கு இன்றைய முதல்வரின் துணைவியாரை அழைத்துச் சென்றது எல்லாம் இன்றைக்கு நினைவில் உள்ளது. மேலும் தூத்துக்குடி நாடாளுமன்றத் தேர்தலில் கனிமொழி போட்டியிட்டபோது எனது பணிகளை அனைவருக்கும் தெரியும். இப்படி ஒரு நீண்ட பட்டியலே உண்டு.
2. திமுகவில் இருந்து ஒதுங்கவேண்டும் என்று நீங்களாக ஒதுக்கி கொண்டீர்களா? அல்லது ஒதுக்கப்பட்டீர்களா? என்னை யாரும் அரசியலில் இருந்து ஒதுக்கமுடியாது. அரசியலில் இருந்து நான் ஏன் ஒதுங்கவேண்டும்? அரசியல் என்பது எம்எல்ஏ, எம்பி, அமைச்சர் பதவி மட்டும் அல்ல. அதையும் தாண்டி பல விஷயங்கள் உள்ளது. MLA, MP , அமைச்சர் பதவி இருந்தால் மக்கள் பணியை இன்னும் சிறப்பாக செய்யலாம் என்பது உண்மை. மறுப்பதற்கில்லை. எனது அரசியல் பயணம் தொடர்கிறது. இன்றும் பல்வேறு பொதுநல வழக்குகளுக்காக உச்சநீதிமன்றத்தில் வாதாடுகிறேன். பல்வேறு நிகழ்ச்சிகள் கலந்து கொள்கிறேன். இப்படி அனுபவம் வாய்ந்த நான் திமுகவுக்கு தேவையில்லை என்று அவர்கள் நினைக்கின்றார்கள். ஒரு வகையில் அது எனக்கு நல்லதும் கூட.
3. அதுதான் உங்கள் கோபத்திற்கு காரணமா? இல்லை. எனக்கு எந்த பதவி மீதும் ஆசை இல்லை. பதவிக்காக நான் யாரிடமும் கைகட்டி வாய் பொத்தி
நின்றது கிடையாது. எனக்கென ஒரு கொள்கை உண்டு. மனதில் ஒன்றும் வெளியில் ஒன்றும் பேசும் பழக்கம் என்னிடம் இல்லை. எதையும் வெளிப்படையாக பேசக் கூடியவன். அந்த வகையில் திமுக என்னை பயன்படுத்திக் கொண்டது. திமுகவுக்கு எப்போதெல்லாம் நெருக்கடி வருமோ அப்போதெல்லாம் என்னை பயன்படுத்திக் கொண்டார்கள். தேர்தல் வரும்போது என்னை கைவிட்டு விடுவார்கள். காலங்கள் கடந்து விட்டன எனக்கென்று கொள்கை அணுகுமுறை உண்டு திமுக இப்போது எல்லாம் எதிர்க்கட்சியாக வருகிறது அப்போது நான் அந்த கட்சியில் இருப்பேன். திமுக ஆளு கட்சியாக இருக்கும் போது நான் அங்க இருக்க முடியாது இதுதான் இதுவரை நான் கண்டது
4. ஏதாவது ஒரு சம்பவத்தை குறிப்பிட்டு சொல்லமுடியுமா? உதாரணத்திற்கு, எனது சொந்த ஊரான கோவில்பட்டியில் 2011 ல் தேர்தலில் எனக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது. மாறாக பாமகவுக்கு சீட் ஒதுக்கினார்கள். பாமகவுக்கு அங்கு அமைப்பும் கிடையாது. ஒரு கிளையும் கிடையாது. இப்படித்தான் நான் பல முறை ஏமாற்றப்பட்டேன். இதை வெளிப்படையாக சொல்வதில் தயக்கமில்லை. கோவில்பட்டியை சார்ந்த மக்களை திமுக ஏன் இப்படி நடந்து வருகிறது என்று வேதனையோடு சொன்னதெல்லாம் உண்டு
5. அப்படி என்றால் அதுதான் உங்கள் கோபத்திற்கு காரணமா? இல்லை. அது நடந்து 2011 ஆம் ஆண்டு. ஆனால் 2014 ஆம் ஆண்டுவரை திமுகவில் தானே இருந்தேன். அப்போது விருதுநகர் நாடாளுமன்றத் தொகுதி அல்லது தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட மனு தாக்கல் செய்ய கலைஞர் சொன்னதால் மனு செய்தேன். ஆனால் எனக்கு உறுதிமொழி வழங்கியபடி வாய்ப்பு வழங்கவில்லை.
6. ஈழத் தமிழர் விவகாரத்திலும், ஏழு பேர் விடுதலை விவகாரத்திலும் திமுகவின் நடவடிக்கையை எப்படி பார்க்கிறீர்கள்? நான் திமுகவில் இருந்த போது டெஸோ மாநாடு நடத்தினேன். இன்றைய முதல்வரை பல வெளிநாடுகளுக்கு அழைத்துச் சென்று பேச வைத்துள்ளேன். திமுகவின் நிலைப்பாட்டை ஐ.நா. சபையில் நான் பேசி அது அறிக்கையாக வெளிவந்துள்ளது. ஈழவிவகாரத்தில் திமுக கடுமையான நெருக்கடியை சந்தித்தபோது நான் தான் திமுகவிற்கு உதவினேன். ஆனால் இப்போது மஸ்தானை குழு தலைவராக போட்டு உள்ளார்கள். மஸ்தானுக்கு ஈழத் தமிழர்கள் பற்றி என்ன தெரியும்? .
7. திமுகவின் தோழமைக் கட்சி காங்கிரஸ். அக்கட்சியின் தேசிய தலைவரை முகநூலில் விமர்சனம் செய்வது சரியா? ஒருவேளை நீங்கள் அந்த பதவியில் இருந்தால் மற்றொருவர் உங்களை விமர்சனம் செய்தால் ஏற்றுக்கொள்வீர்களா? கார்கேவே இன்றுதான் பலருக்கும் தெரியும். எனக்கு 77ம் ஆண்டிலேயே தெரியும். இந்திராகாந்தி சிக்மகளூர் தொகுதியில் நிற்கும்போதே எனக்கு தெரியும். காரணம் நான் அப்போது மாணவர் காங்கிரஸில் பணியாற்றினேன். பின்னர் என்னையும், அன்று முதல் நாங்கள் காங்கிரசுக்கு எதிர்விணையாற்றி வருகிறோம். மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது அவரை சோனியா குடும்பம் ரிமோட் கண்ட்ரோல் ஆக இயக்கினார்கள். அதுபோல மற்றொரு ரிமோட் கண்ட்ரோல் தான் கார்கே என்று சொன்னேன். இதில் என்ன தவறு ? அதையேதான் காங்கிரஸில் உள்ள ஜி24 தலைவர்களும் சொன்னார்கள். கிண்டலும் செய்தார்கள். ஆனால் நான் கார்கேவை கிண்டல் செய்யவில்லை. இழிவு படுத்தவில்லை. ஆனால் சொல்ல வேண்டிய கருத்தை சொல்லாமல் இருக்க முடியாது. காரணம் நாட்டில் ஒவ்வொரு மனிதனுக்கும் பேச்சுரிமையும், எழுத்துரிமையும் அரசியல் சாசனம் வழங்கியுள்ளது. எனக்கென்று ஒரு கொள்கை உள்ளது அதிலிருந்து நான் மாறமாட்டேன். மற்ற அரசியல்வாதியைப்போல நான் நேரத்திற்கு ஒன்று பேசுவதும் நேரத்திற்கு ஒரு கொள்கையை மாற்றிக்கொள்வதும் இல்லை.
8. அதிமுகவில் இருந்து வந்தவர்களுக்கு அமைச்சர் பதவி கொடுக்கப்பட்டுள்ளது என முகநூல் பக்கத்தில் விமர்சனம் செய்துள்ளீர்களே? அப்படி செய்யவில்லை. தகுதியானவர்களுக்கு கொடுங்கள் என்று தான் சொன்னேன். திமுகவுக்கும் கலைஞர் குடும்பத்துக்கு நெருக்கடி வரும்போது எல்லாம் துணையாக இருந்துள்ளேன். ஆனால் இன்று கலைஞரையே விமர்சனம செய்தவர்கள் அவர்மீது தாக்குதல் நடத்த முயன்றவர்களுக்கு எல்லாம் பதவி வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக, மதுரையில் இருந்து திருச்செந்தூர் வரை திருச்செந்தூர் முருகன் வேல் கொள்ளையடிக்கப்பட்டது என்று கலைஞர் நெடிய பயணம் சென்றபோது, விருதுநகரில் சோடா பாட்டில் வீசியவர்கள், ராஜீவ் படுகொலைக்குப் பிறகு 91 - இல் ஆட்சியை இழந்த பின்னர் பழனி நாடாளுமன்ற இடைத்தேர்தல் மற்றும் ராணிப்பேட்டை சட்டமன்ற இடைத் தேர்தல் பிரசாரத்துக்கு கலைஞர் சென்றபோது, அவருடைய வேனைத் தாக்கியவர்கள், ஜெயலலிதா ஆட்சியில் போக்குவரத்துத்துறையில் ஏதோ மீட்டர் வாங்கிய வகையில் ஊழல் என்று இன்றைய முதல்வர் பேச, அதை மறுத்து எதிர்த்துப் பேசியவர்கள், (அது இன்றைக்கும் சட்டமன்ற குறிப்பேடுகளில் இருக்கிறது). ஜெயலலிதா ஆட்சியில் சட்டப் பேரவையில் இருக்கையில் ஏறி நின்று கடுமையான வசைமொழிகளுடன் பேசியவர்கள் எல்லாம் இன்றைக்கு திமுகவில் பிரதானமாக அமைசர்களாக வலம் வருகிறார்கள்.
கடந்த காலங்களில் முள்ளிவாய்க்கால் என பல விடயங்களில் தி.மு.க வையும் தலைவர் கலைஞரையும் கடுமையாக விமர்சித்து எதிர்வினையாற்றியவர்கள் இப்போது மாநில திட்டக் குழுவிலும் தமிழ்நாடு பாட நூல் நிறுவனத்திலும் கலைஞர் டிவியிலும் இருக்கின்றார்கள். இதில் வேடிக்கை என்னவென்றால், 2001 - இல் கலைஞர் கொடும்பாவியை எதிர்த்தவர், இன்று திமுக ஆட்சியில் ஒரு வாரியத் தலைவர். இப்படி நேற்று வரை தி.மு.க.விற்கு எதிராக கடுமையான எதிர்வினை ஆற்றியவர்கள் இன்று திமுக ஆட்சித் தயவில் முன்னிலை வகிக்கின்றனர். இதை என்ன சொல்ல ?
இன்றைக்கு திமுகவில் உள்ள அமைசர்கள் சிலர் அன்று அரசியலிலேயே இல்லை என்று நினைக்கும்போது வேடிக்கையாக உள்ளது. அப்படிபட்டவர்களுத்தான் முன்னுரிமை கொடுக்கப்பட்டுள்ளது. அப்படி பட்டவர்களுக்கு பாவமன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது. நாங்கள் நெருக்கடியான நேரத்தில் திமுகவுக்கு பணியாற்றியது முதல்வருக்கு தெரியாதா? எங்கள் முகம் தெரியாமல் அசால்ட்டாக செல்கிறாரா?
9. கலைஞர் இருந்தபோது இருந்த முக்கியத்துவம் தற்போது குறைந்து விட்டதாக கருதுகிறீர்களா? எனக்கு முக்கியத்துவம் கொடுக்க அவர்கள் யார்? தேவையில்லை. நான் காமராஜர், கலைஞர் என கடந்து வந்துள்ளேன். அகில இந்திய அளவில் பல அரசியல் ஆளுமைகளை கடந்துவந்துள்ளேன். இந்திராகாந்தி, ஜெயபிரகாஷ் ஒரு கட்டத்தில் ஈழ தமிழர் பிரச்சினையில் என்னிடம் தகவல் பெற்று அதை ராஜ்யசபாவில் ஜெயலலிதா பேசியதும் உண்டு. அப்படி தகுதியும் தரமும் எனக்கு உண்டு.
10. திமுக ஆட்சியின் பலம் என்ன ? பலவீனம் என்ன? சட்டமன்ற தேர்தலின் போது திமுக பல்வேறு வாக்குகளை அளித்தது. குறிப்பாக மதுவிலக்கு, பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய், இலவச கேஸ் கனெக்சன், மின்சார கட்டண குறைப்பு ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட உறுதிமொழி கொடுத்தும் அது நிறைவேறவில்லை. ஆட்சிக்கு வந்து ஒன்றரை வருடத்திற்கு மேல் ஆகிறது. படிப்படியாக செய்து இருக்கலாம். ஆனால் செய்யவில்லை.
11. திமுகவில் இருந்து சஸ்பென்ட் நோட்டீஸ் வரவில்லை என்று சொல்கிறீர்களே உண்மையா? ஆமாம். இதுவரை வரவில்லை. ஏன் என்று எனக்கு தெரியவில்லை. அவர்களிடம் தான்கேட்கவேண்டும்.
12. மீண்டும் தீவிர அரசியலில் ஈடுபடுவீர்களா? நான் அரசியலில் இருந்து எப்போது விலகினேன். இப்போதுதான் ஆக்டீவாகத்தானே உள்ளேன். மேற்கு தொடர்ச்சி மலை - கிழக்கு தொடர்ச்சி மலை விவகாரம், தேர்தல் சீர்திருத்தம் விவகாரம், சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கவேண்டும் என நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளேன். வாதாடுகிறேன். பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கு கொண்டு வருகிறேன்.
13. நீங்கள் பாஜகவில் இணையப் போவதாக தகவல் வருகிறதே? அரவிந்த் கெஜ்ரிவால் கட்சியில் இருந்தும் மற்ற சில கட்சிகளில் இருந்து அழைப்பு வந்தது. ஆனால் நான் தற்போது எங்கும் செல்லவில்லை. அமைதியாக உள்ளேன். இன்று வியாபார அரசியல் நடக்கிறது. அதில் எனக்கு உடன்பாடில்லை. அரசியலில் உழைத்தும் ஒரு ஒரு 52 ஆண்டுகள் பெற்றது ஒன்றுமில்லை. இறந்து தான் அதிகம். எனது இளமை வழக்கறிஞர் தொழில் பொருள் இழப்பு உறவினர்கள் நண்பர்கள் இழப்பு என நான் கண்டது. உழைத்து பலன் கிடைக்கவில்லையே என மன வருத்தம் கிடையாது. இருக்கு என்று ஒன்று இருக்கின்றது. கடந்த 25 30 ஆண்டுகளாக பலரால் ஏமாற்றப்பட்டேன் அவை குறித்து அக்கறையே இல்லை. நான் எனது அரசியல் பணிகளை செய்து கொண்டு தான் இருக்கிறேன். காலமும் இயற்கையும் அதற்கு பதில் சொல்லும்.
#ksrpost
13-12-2022.
No comments:
Post a Comment