*வளர்ச்சிக்கு வழி... மக்கள் தொகை கட்டுப்பாடு*!
****
உலக மக்கள் தொகை 787 கோடியே 70 லட்சத்தை தாண்டியுள்ளது. இந்தியாவின் மக்கள்தொகை 139 கோடியே 36 லட்சமாக இருக்கிறது. கடந்த ஆண்டு எடுக்கப்பட்ட உலக மக்கள் தொகைக் கணக்கீடு இதைத் தெரிவிக்கிறது.
உலக மக்கள்தொகையில், இந்தியாவின் பங்கு 17.7 சதவிகிதம்.
அமெரிக்காவும் (98,33,517 ச.கி.மீ.), சீனாவும் (95,96,960 ச.கி.மீ.) நிலப்பரப்பில் ஏறத்தாழ சம அளவு கொண்டவை. ஆனால், இந்தியாவின் பரப்பளவு, இவ்விரு நாடுகளின் பரப்பளவில் மூன்றில் ஒரு பங்குதான் (32,87,263 ச.கி.மீ.). ஆனால் அமெரிக்காவில் மக்கள் தொகை 33 கோடியே 29 லட்சம். சீனாவிலோ 144 கோடியே 49 லட்சம்.
அமெரிக்காவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) 2020-இல் 20.49 டிரில்லியன் டாலா். சீனாவில் அதே ஆண்டு ஜிடிபி 13.40 டிரில்லியன் டாலா். இந்தியாவின் ஜிடிபி குறைந்த அளவாக 2.72 டிரில்லியன் டாலர் மட்டுமே.
அமெரிக்கா, சீனா, இந்தியா ஆகிய மூன்று நாடுகளும் அரசியல்ரீதியாக மாறுபட்டவை. என்றாலும் இந்த மூன்று நாடுகளில் அமெரிக்கா எப்போதும் உலகின் முதல் வல்லரசாகவே உள்ளது. சீனா அந்த நிலையை அடைய வேகமாக முன்னேறி வருகிறது. ஆனால் இந்தியா, உள்நாட்டு உற்பத்தியில் அல்ல, மக்கள்தொகைப் பெருக்கத்தில்தான் வேகமாக முன்னேறி வருகிறது.
மக்கள் நலத்திட்டங்களுக்கு அரசின் நிதி பெரிய அளவில் செலவழிக்கப்படுகிறது. இதனால் ஒட்டு மொத்த நாட்டின் முன்னேற்றத்தி ற்குரிய பொதுத்திட்டங்களான கல்வி, சுகாதாரம், குடிநீா், நீா், சாலை வசதி, நீா்ப்பாசனம், ஆராய்ச்சித் திட்டங்கள் போன்ற பல்வேறு திட்டங்களுக்கு நிதி ஒதுக்க, உலக நிதி நிறுவனங்களான உலக வங்கி, ஆசிய வளா்ச்சி வங்கி, உள்நாட்டு ‘நபார்டு’ போன்றவற்றில் பேரளவு கடன் பெற்று, ஆண்டுதோறும் கடனுக்கான வட்டியைக் கட்டுவதே அரசுக்குப் பெரிய சவாலாக இருக்கிறது. மால்தஸ் கோட்பாடு இதில் கூடாது.
நமது நாட்டை வளர்ச்சிப் பாதைக்குக் கொண்டு சென்று விரைவில் முன்னேறிய நாடாக மாற்ற வேண்டுமானால், மக்கள்தொகை பெருக்கத்தைக் கட்டுப்படுத்த வேண்டும்.
இந்தியாவின் மக்கள்தொகை 100 கோடிக்கும் குறைவாக இருக்கும் நிலையை ஏற்படுத்த வேண்டும். அதன்பின் இந்தியாவின் படிப்படியாக 70 முதல் 75 கோடியாக மக்கள் தொகையைக் கட்டுப்படுத்த வேண்டும். அடுத்த பத்து ஆண்டுகளில் மக்கள் தொகையை இந்த அளவுக்குக் குறைத்தால்தான் இந்தியா பொருளாதார வளர்ச்சியில் மேம்பாடு அடைய முடியும். உலக வல்லரசு நாடுகளில் ஒன்றாக மிளிர முடியும்.
#மக்கள்தொகை_கட்டுப்பாடு!
#population_control
#கே_எஸ்_இராதாகிருஷ்ணன்
#K_S_Radhakrishnan
#ksrpost
27-12-2022.
No comments:
Post a Comment