Conference of Indian History Congress-81 இந்திய வரலாற்று காங்கிரஸ்- December 2022.@MMC தமிழகத்தைச் சார்ந்த கே.கே.பிள்ளை, நீலகண்ட சாஸ்திரி, சத்யநாத ஐயர், தி. வை. சதாசிவ பண்டாரத்தார், தமிழர் வரலாறு எழுதிய பி.டி.சீனிவாச அய்யங்கார், ஆனந்த குமாரசுவாமி போன்ற பலர் திராவிட இயல்பை கொண்டவரகள்தான். பின் ஏன் இவர்கள் பெயர் இல்லை.
—————————————
சென்னை கிறிஸ்துவ கல்லூரியில் Conference of Indian History Congress இந்தி ய வரலாற்று காங்கிரசின் 81 ஆவது மாநாடு நடந்துள்ளது. அதில் கலந்து கொண்டு தமிழக முதல்வர் மு.ஸ்டாலின் பேசியுள்ளார். அவரின் பேச்சின் சுருக்கம் ‘தீக்கதிர்’ நாளிதழில் வெளிவந்துள்ளது.
அவருடைய பேச்சில் மூத்த வரலாற்றாசிரியர்களின் வரிசையில் டி.டி.கோசாம்பி, ஆர்.எஸ்.சர்மா, ரொமிலா தாப்பர், பிபின் சந்திரா, ஏ.எல்.பாஷ்யம், ராகுல சாங்கிருத்தியாயன், தேவி பிரசாத் சட்டோபாத்யாயா, கே.பி.ஜெய்ஸ்வால் ஆகியோரின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன.
தமிழகத்தைச் சார்ந்த கே.கே.பிள்ளை, நீலகண்ட சாஸ்திரி, சத்யநாத ஐயர், தி. வை. சதாசிவ பண்டாரத்தார், தமிழர் வரலாறு எழுதிய பி.டி.சீனிவாச அய்யங்கார், ஆனந்த குமாரசுவாமி, மு. ராகவயங்கர் போன்ற பலர் திராவிட இயல்பை கொண்டவரகள்தான். பின் ஏன் இவர்கள் பெயர் இல்லை.
இது முதல்வரின் கவனத்துக்கு வரவில்லையா? அல்லது அவர் பேசிய பேச்சை எழுதித் தயாரித்தவர்களுக்கு இது தெரியவில்லையா? என்று தெரியவில்லை.
…
வரலாறு தெற்கே இருந்து எழுத வேண்டும் எனபது நீண்ட கால நமது கோரிக்கை ஆகும்.
நான் 1980கள் இருந்து தொடர்ந்து பல காலமாக தினமணியில் பின்பு மற்றும் சமூக வலைதளங்களில் வரலாறு தெற்கே (தமிழகம்)இருந்து எழுத வேண்டும் எழுதி வருகிறேன்.
ஆனால் தமிழக தென்னிந்திய வரலாற்றைப் படைத்த கே.கே.பிள்ளை, தி.வை.சதாசிவ பண்டாரத்தார், நீலகண்ட சாஸ்திரிகள். சத்தியநாத ஐயர், பி.டி. சீனிவாச அய்யங்கார், ஆனந்த குமாரசாமி, மு. இராகவையங்கார் போன்ற பலரை பற்றி முதல்வர் பேச்சில் குறிப்பிடாமல் போனதுதான் கவலையான செய்தி.
இவர்களைத் தவிர்த்துவிட்டு தமிழக, தென்னிந்திய வரலாறு பற்றி பேசுவது இயலாது அல்லவா?பிறகு, வரலாறு எப்படி தெற்கே இருந்து எழுத முடியும?. இதில் அக்கறை காட்டாமல் எப்படி முடியும்?
Tamil Nadu Chief Minister M K Stalin recently delivered the inaugural address at the 81st Conference of Indian History Congress held at the Madras Christian College. A transcript of his speech was published in the Tamil daily Theekadhir.
In his speech, while talking about veteran historians the Chief Minister had mentioned the names of DD Kosambi, RS Sharma, Romila Thapar, Bipin Chandra, AL Bhashyam, Rahul Sangruthiyayan, Devi Prasad Chattaopadhyay and KP Jaiswal.
However, curiously he did not mention the names of historians, who worked predominantly in Tamil Nadu, such as KK Pillai, Neelakanda Shastri, Satyanatha Iyer, T. V. Sadasiva Pandarathar, PT Srinivasa Iyengar, RC Majumdar and Ananda Kumaraswamy, who wrote the book “Tamil History”. Why have these historians not grabbed the attention of the Chief Minister? And also how the ‘ghost writer’, who must have written the CM’s speech, had missed them?
#Conference_of_Indian_History_Congress-81 #இந்திய_வரலாற்று_காங்கிரஸ்
#Chennai
IndianHistoryCongress Ihc
Madras_christian_college
#Conference_of_Indian_History_Congress
#வரலாறு_தெற்கே_இருந்து_எழுதவேண்டும்
#கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
#K.S.Radhakrishnan
#ksrpost
31-12-2022.
No comments:
Post a Comment