Friday, December 16, 2022

#*வட சென்னை திரைப்படம்* #மதிமுக ஏழுமலை -சிவா படுகொலைகள். *** மதிமுக - வைகோ தலைமையில் மதிமுக பேரணி

#*வட சென்னை திரைப்படம்* 
#மதிமுக ஏழுமலை -சிவா படுகொலைகள்.
*** 
மதிமுக - வைகோ தலைமையில்  மதிமுக  பேரணி 
—————————————
நள்ளிரவில் விஜய் தொலைக்காட்சியில் ‘#வடசென்னை ’ திரைப்படத்தைப் பார்க்க முடிந்தது. 

அத் திரைப்படத்தில் வடசென்னையில் நடக்கும் துயரங்களைப் பார்த்தபோது, பழைய நினைவுகள் வந்து சென்றன. 
வடசென்னையில் 1993 – 96 காலகட்டத்தில் மதிமுகவில் மிகவும் துடிப்பாகச் செயல்பட்டவர் மதிமுக மாவட்டச் செயலாளர் ஏழுமலை மற்றும் சிவா. இவர்கள் இருவரும் படுகொலை செய்யப்பட்டது போன்ற துயர நிகழ்வுகள் நினைவுக்கு வந்தன. 

அப்போது செல்பேசி எல்லாம் கிடையாது. 96 - இல்தான் செல்பேசி வந்தது. தொலைபேசிதான். 18.04.1994 அன்று நள்ளிரவு 1.30 மணி இருக்கும். அப்போது எனக்கு துறைமுகம் தொகுதி  மதிமுக சட்டமன்ற உறுப்பினரான ஏ.செல்வராசனிடம் இருந்து தொலைபேசி வருகிறது. என்னை உடனே வரச் சொன்னார். கார் ஓட்டுநர் இல்லாததால் ஆட்டோவில் ராயபுரம் சென்றேன். அங்கே அப்போது செல்வராசனும், அவருடைய உதவியாளர் மட்டுமே இருந்தனர். ஏழுமலை கொலை செய்யப்பட்டுக் கிடந்தார். காவல்துறையினர் வரும்வரை நாங்கள் 4 பேர் மட்டுமே இருந்தோம். பக்கத்தில் இருந்த மதிமுக நிர்வாகிகளை அழைத்தபோது அவர்கள் யாரும் போனை எடுக்கவுமில்லை; போனை எடுத்தவர்கள் வரவுமில்லை. அப்போது வைகோ டெல்லியில் இருந்தார். அடுத்த நாள் காலை வந்தார.

அதற்கு முன் நாள்தான் மிகப் பெரிய பேரணியை என் போன்றோர் உதவியில் ஏழுமலை மதிமுக வைகோ தலைமையில்  நடத்தினார். இந்த பேரணி அன்று சென்னை மாநகர் மட்டும்மல்ல தமிழகத்தை திரும்பி பார்க்க வைத்தது. பேரணி முடிந்த மறுநாளே அவருக்கு இந்த துயரச் சம்பவம் நிகழ்ந்தது. 

படுகொலை நிகழ்ந்த அன்று அப்போதைய  முதலமைச்சர் ஜெயலலிதா என்னைத் தொடர்பு கொண்டு மதிமுகவினர் என்ன நினைக்கின்றார்கள் என்று என்னிடம் விசாரித்ததும் உண்டு,. ஏழுமலை நல்ல செயல்வீரர். சிவாவும் நல்ல துடிப்போடு செயல்படக் கூடியவர். இந்த திரைப்படத்தைப் பார்த்தபோது, அதோடு சொல்ல முடியாத பல விடயங்கள் நினைவுக்கு வந்தன. 

 #ksrpost
16-12-2022.


No comments:

Post a Comment

"OPERATION RUDRAM".

  "OPERATION RUDRAM".