Thursday, May 2, 2024

காடு- மலை….

முடிந்த அளவு மரசெடிகள் நட்டு வளர்க்கனும் எல்லா..அந்தந்த பகுதி சூழலகளுக்கு ஏற்றவாறு..

பூமியைக் காப்பது பற்றி நான் உரையாடப்போவது இல்லை. ஏனெனில், பூமிக்குத் தன்னைக் காப்பாற்றிக்கொள்ளத் தெரியும்.

#மலைகளை வெட்டுகிறீர்களா? 
நன்றாக வெட்டுங்கள். 
பெருங் கடல்களுக்குக் கீழே உள்ள கண்டத் திட்டுகளை சில அடிகள் நகர்த்திக்கொண்டால், கடலுக்கு மேலே புத்தம் புதிய மலைகள் முளைத்து வந்து விடும். 

#இமயமலை பூமியால் அப்படி உருவாக்கப் பட்டதுதான். பெருங்கடலுக்கு அடியே உள்ள கடின நிலத்தை ஓரிரு ஆழிப்பேரலைச் சீற்றங்கள், சில நிலநடுக்கங்கள் வழியாக அப்படியே மேலே கொண்டுவந்துவிடுவது பூமிக்கு எளிதான செயல். இமயமலையின் உச்சியில் இப்போதும் கடல்வாழ் உயிரினங்களின் படிமங்கள் கிடைக்கின்றன.

எரிவாயு எடுக்கிறீர்களா? 
நன்றாக எடுங்கள். அதற்காக நிலத்தைத் தோண்டி நிலத்தடி நீரை உறிஞ்சித் துப்புகிறீர்களா?
நன்றாகத் துப்புங்கள்.

ஒரே ஒரு #நிலப்பிளவு, நிலத்தின் மேல் உள்ள பல கோடி உயிரினங்களை உள்ளே
 விழுங்கிக் கொள்ளும்.
 அந்த #உயிரினங்கள் யாவும் மட்கி, எரிவாயுவாகவும் தங்கமாகவும் வைரமாகவும் நிலக்கரியாகவும் இன்னும் பல விலைமதிப்பற்ற ‘செல்வங்களாகவும்’ மாற்றப்படும்.

#காடுகளை அழிக்கிறீர்களா?
 நன்றாக அழியுங்கள்.
ஒரே ஒரு பெருமழை, காடுகளை அழித்து நீங்கள் நட்டுவைத்த வண்ணக்கொடிகளையும் 
கட்டி வைத்தக் கட்டடங்களையும்
விழுங்கிச் செரித்துவிடும். 
ஆகப்பெரிய அரண்மனைகளின் மதில்களில்கூட அரசமரங்கள் முளைத்துக்கிடக்கும்.

#பூமி, தன்னைக் காப்பாற்றிக்கொள்ளும். 
அதற்குப் பின்னர், `#முன்னேற்றம்' `#வளர்ச்சி' போன்ற சொற்கள் எழுதப்பட்ட புத்தகங்களும் பதாகைகளும் ஏதோ ஒரு கடலுக்கு அடியில் அல்லது ஏதோ ஒரு பனிமலையின் உச்சியில் சிதைந்து கிடக்கும் கழிவுகளாகத்தான் இருக்கும்.




ஆயிரம் சூரியன்
 ஆயிரம் சந்திரன் 
ஒரே ஒரு பூமி

நிறுத்து அனைத்து
அழிவு திட்டங்களையும் நிறுத்து.. 
நிறுத்தி  உன்னை
 நீ காப்பாற்றிக்கொள் .. 
இல்லாவிடில்
 பூமி தன்னை காப்பாற்றிக்கொள்ள
 உன்னை கொல்லும்..

திருக்குற்றாலக்குறவஞ்சி பாடிய #திரிகூடராசப்பக்கவிராயர் வீடு இன்றும்…. #குற்றாலம் மேலகரம் நடுத்தெரு

#திருக்குற்றாலக்குறவஞ்சி பாடிய 
#திரிகூடராசப்பக்கவிராயர் வீடு இன்றும்….
#குற்றாலம்
மேலகரம்
நடுத்தெரு
—————-


மா கவி பாரதி

மா  கவி #பாரதியை கொண்டட வலம்புரி ஜானின் இந்த ‘’பாரதி - ஒரு பார்வை’’ யும் (பதிப்பு-1982)அவசியம் வாசிக்க வேண்டும்.

#பாரதி
#வலம்புரிஜானின்_பாரதிஒரு பார்வை
#கேஎஸ்ஆர்போஸட்
#ksrpost
#கேஎஸ்ஆர்போஸட்
2-5-2024



@highlight


*You have to ask yourself what for and who for you are living and if don't have answers for it*

*You have to ask yourself what for and who for you are living and if don't have answers for it*, then you are living your life wrong and not true. Everything you do should resolve around you. Every person, place and moment should start and end with you. This is your life you shouldn't spend it on dull things and on people  who don't understand and love you. You only live once it is your job to make it count. so let everyday be yours, own it and never apologize for being who you are(yourself).....

#ksrpost
2-4-2024.


Wednesday, May 1, 2024

#கனவாகிப்போனகச்சத்தீவு #கச்சதீவு #KanavaiPonaKachaTheevu #Katchatheevu

‘*கனவாகிப் போன கச்சத்தீவு’ என்னும் என்னுடைய விரிவு படுத்தப்பட்ட நான்காவது பதிப்பு வெளிவருகிறது.  நண்பர்கள், ஊடக தோழர்கள், பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரி நூலகங்களுக்கு விரைவில் பிரதிகளை அனுப்ப வேண்டும்*.

*Revised fourth edition of my book 'Kanavai Pona Kacha Theevu' is almost ready for release. I'll soon be sending copies to friends, members of the media, and university and college libraries*.

*work and knowledge are the well-springs of our life. They should also govern it. Attention is the rarest and purest form of generosity*.

#கனவாகிப்போனகச்சத்தீவு
#கச்சதீவு
#KanavaiPonaKachaTheevu
#Katchatheevu

#ksrpost
#கேஎஸ்ஆர்போஸட்
1-5-2024.


*நாம் நாமாக வாழ நினைத்தால் மகிழ்ச்சிக்கு எல்லை இல்லை*,

*இந்த பாடல் இருத்தலியல் குறித்த கேள்வியை 9ஆம் நூற்றாண்டில் எழுப்பியிருக்கிறது* ..

*வானாகி மண்ணாகி வளியாகி ஒளியாகி*
*ஊனாகி உயிராகி உண்மையுமாய்* *இன்மையுமாய்*
*கோனாகி யானெனதென்  றவரவரைக் கூத்தாட்டு*
*வானாகி நின்றாயை என்சொல்லி வாழ்த்துவனே*

-*மாணிக்கவாசகர்*.

*நாம் நாமாக வாழ நினைத்தால்*
மகிழ்ச்சிக்கு எல்லை இல்லை*, 

நாம் மற்றவரைப் போல் வாழ 
நினைத்தால்  மகிழ்ச்சிக்கு 
வாய்ப்பே இல்லை....
காலத்திடம் விடுவிடுங்கள் 

உங்களிடம் நடித்தவர்கள் விரைவில் மேடையை விட்டு ஓடிவிடுவார்கள்...

சோகத்திலும்  மகிழ்ச்சியிலும் உங்கள் பலவீனங்களை 
உளறி வைக்காதீர்கள்...

அதையே தனக்கு சாதகமாக  பயன்படுத்திக் கொள்ளும் உலகமிது..!!

வாழ்க்கை என்பது இருட்டில் நடக்கும் நீண்ட நெடிய போராட்டம். வெற்றிகரமான ஓட்டப்பந்தய வீரன் தன் சிறிய தீப்பந்தத்தைக் கைமாற்றிவிடுவதைப் போன்று உங்களது தனித்த சிந்தனையை மனித குலத்துக்கான பங்களிப்பாக விட்டுச்செல்வதே நீங்கள் ஆற்றக்கூடிய ஒரே மகத்தான பணி.

தன்னை மிஞ்சியவர் யாருமில்லை என்று நினைப்பவர்களிடம் விவாதம் செய்யாமலிருப்பதுதான் ஆகச்சிறந்தது ....

தளர்த்திக்கொள்ள 
விரும்பாத
வாழ்வின் பிடிமானம்
வேண்டும்.

#ksrpost
1-5-2024.


Understand everything that surrounds you is temporary only

Understand  everything that surrounds you is temporary only the love from your family will last forever and be thankful for everybody in your family. GOOD or BAD- PAST or PRESENT they all made you the person that you are Today. As long as we have memories yesterday remains, as long as we have hope tomorrow awaits... . 

Pic-Aaranya Alli

#ksrpost
1-5-2024.


Nov 10, 2025 கன்னியாகுமரி வரலாற்று பண்பாட்டு ஆய்வு மையத்தின் தலைவரும் ‘களஞ்சியம்’

  கன்னியாகுமரி வரலாற்று பண்பாட்டு ஆய்வு மையத்தின் தலைவரும் ‘களஞ்சியம்’ திங்கள் இதழ் ஆசிரியருமான முனைவர் எஸ். பத்மநாபன் அவர்கள் கோவையில் மற...