*இந்த பாடல் இருத்தலியல் குறித்த கேள்வியை 9ஆம் நூற்றாண்டில் எழுப்பியிருக்கிறது* ..
*வானாகி மண்ணாகி வளியாகி ஒளியாகி*
*ஊனாகி உயிராகி உண்மையுமாய்* *இன்மையுமாய்*
*கோனாகி யானெனதென் றவரவரைக் கூத்தாட்டு*
*வானாகி நின்றாயை என்சொல்லி வாழ்த்துவனே*
-*மாணிக்கவாசகர்*.
*நாம் நாமாக வாழ நினைத்தால்*
மகிழ்ச்சிக்கு எல்லை இல்லை*,
நாம் மற்றவரைப் போல் வாழ
நினைத்தால் மகிழ்ச்சிக்கு
வாய்ப்பே இல்லை....
காலத்திடம் விடுவிடுங்கள்
உங்களிடம் நடித்தவர்கள் விரைவில் மேடையை விட்டு ஓடிவிடுவார்கள்...
சோகத்திலும் மகிழ்ச்சியிலும் உங்கள் பலவீனங்களை
உளறி வைக்காதீர்கள்...
அதையே தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும் உலகமிது..!!
வாழ்க்கை என்பது இருட்டில் நடக்கும் நீண்ட நெடிய போராட்டம். வெற்றிகரமான ஓட்டப்பந்தய வீரன் தன் சிறிய தீப்பந்தத்தைக் கைமாற்றிவிடுவதைப் போன்று உங்களது தனித்த சிந்தனையை மனித குலத்துக்கான பங்களிப்பாக விட்டுச்செல்வதே நீங்கள் ஆற்றக்கூடிய ஒரே மகத்தான பணி.
தன்னை மிஞ்சியவர் யாருமில்லை என்று நினைப்பவர்களிடம் விவாதம் செய்யாமலிருப்பதுதான் ஆகச்சிறந்தது ....
தளர்த்திக்கொள்ள
விரும்பாத
வாழ்வின் பிடிமானம்
வேண்டும்.
#ksrpost
1-5-2024.
No comments:
Post a Comment