#*திருநெல்வேலி*
#*திருப்புடைமருதூர்* #*நீதிபதி எஸ்.ரத்தினவேல்பாண்டியன்*
————————————
திருநெல்வேலி மாவட்டத்தில் திருப்புடைமருதூர் நாறும்பூநாதர் கோயில் தாமிரபரணியாற்றங்கரையில் அம்பாசமுத்திரத்திற்கு வடகிழக்கே பத்தமடை அருகே அமைந்துள்ள சிவாலயம் உள்ள திருப்புடைமருதூர் கோவிலானது மிகக் தொமையானது
.அக் கோவிலைப் புணரமைக்க அக்காலத்தில் உச்ச நீதிமன்ற நீதிபதியாக இருந்த அந்த ஊரின் மைந்தர் அண்ணாச்சி மறைந்த எஸ். ரத்தினவேல் பாண்டியன் அவர்கள் முயற்சி எடுத்து அதற்கான செயல்பாடுகளை மேற்கொண்டார்.
அம்முயற்சிக்கு உறுதுணையாக பெரிய செல்வந்தர்கள் மற்றும் டாட்டா பிர்லா போன்றவர்கள் கூட நிதி உதவி வழங்கிக் கோவிலை அழகுறப் புதுப்பித்தார்கள். நேர்மையான தீர்ப்புகளுக்கு பேர் போன திரு ரத்தினவேல் பாண்டியன் அவர்கள் சொன்னால் அப்போது அதைச் செய்வதற்கு அவ்வளவு பேர் இருந்தார்கள்.
அக்கோவிலின் சுவற்றில் வரையப்பட்டிருக்கக் கூடிய ஓவியங்கள் அனைத்தும் மிக அழகிய கலை எழில் மிக்க வேலைப்பாடுகள் நிறைந்தவை.
மிக முக்கியமாகச் சொல்வதென்றால் எல்லாமே பச்சிலைகளால் குறிப்பாகச் சொன்னால் மூலிகை வண்ணங்களால் வரையப்பட்டவை.
உலகத்தின் பல பாகங்களில் இருந்தும் கோயிலுக்கு வந்து செல்கிறவர்கள் காணும் வகையில் அந்த ஓவியங்கள் நீண்ட காலமாக அங்கு பாதுகாக்கப்பட்டு வருகிறது.
இத்தனை வருடங்கள் ஆகியும் அந்த ஓவியங்கள் புதிய பொலிவுடன் அங்கு காட்சியளிக்கிறது என்றால் அதற்கு காரணமாக இருந்து அதை புனரமைத்த உச்சநீதி அரசர் திரு ரத்தினவேல் பாண்டியன் அவர்களின் அரும்பணிதான் என்பது எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது.
இது இன்று இருக்கும் பலருக்குத் தெரிந்திருக்காது. வரலாற்றில் இவை எல்லாம் குறிப்பிட வேண்டிய செய்திகளும் பதிவுகளும் ஆகும்.அவர் மாதிரி கலைகள் மீதும் கலாச்சார மரபுகள் மீதும் பற்றுள்ள ஒரு நீதிபதியை இனிப் பார்ப்பது அரிது.
facebook.com/share/p/aDNMys…
#திருநெல்வேலி #பத்தமடை #நெல்லை #திருப்புடைமருதூர்
#jususticeratnavlpandiyan #நீதிபதிரத்தினவேல்பாண்டியன்
#tirupudaimarthur
#tirunelvli #nellai
#KSRpost
#கேஎஸ்ஆர்போஸ்ட்
7-5-2024.
No comments:
Post a Comment