Tuesday, May 14, 2024

கச்சத்தீவை குறித்து அறியா செய்தி ஒன்று…

#*

*…..
————————————
கச்சத்தீவை 1974-இல் இந்தியா இலங்கைக்கு வழங்கிய பொழுது ஏற்பட்ட சர்ச்சைகளின் போதும் ஈழத்தில் தமிழர் விடுதலை கூட்டணி தலைவர் அண்ணன் அப்பா பிள்ளை அமிர்தலிங்கம் தன் மருத்துவ சிகிச்சைக்காக சென்னைக்கு வரவிரும்பிய போது சிங்கள அரசு அவரை தடுத்தது.
கச்சத்தீவை இலங்கைக்கு கொடுப்பது சரியில்லை என்ற நோக்கில் அமிர்தலிங்கம் கச்சத்தீவிற்கு சென்று அன்றைய அ.தி.மு.க-வை சேர்ந்த இரா. ஜனார்த்தனன் எம்.எல்.சி கச்சத்தீவிற்கு வரவழைத்து ஈழத்தமிழர் பிரச்சனை குறித்தான கடிதங்களை பெருந்தலைவர் காமராஜர், கலைஞர் மு. கருணாநிதி, எம்.ஜி.ஆர், கம்யூனிஸ்ட் தலைவர்கள் பி. இராமமூர்த்தி, எம். கல்யாணசுந்தரம், ம.பொ.சி என தமிழக தலைவர்களுக்கு தனது கடிதங்களை ஜனார்த்தனர் மூலமாக கொடுத்தனுப்பினார். அப்போது சிங்கள அரசு இந்த நிகழ்வை குறித்து கடும் விமர்சனம் செய்தது. இந்த குறிப்பு அமிர்தலிங்கம் வரலாற்று நூலில் உள்ளது.
(கனவாகி போன கச்ச தீவு)
#கச்சதீவு
#katchathivu
#ksrpost
14-5-2024.

No comments:

Post a Comment

8 september

உனக்குப் புரியவில்லையென்றாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும் நீ புரிந்து கொண்டாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும்