Tuesday, May 21, 2024

துரோணாச்சாரியார் பசியுடன் இருக்கும் தனது மகன் அஸ்வத்தாமனைக் கூட்டிக் கொண்டு தன் நண்பன் துருபதனை காண செல்லும் போது நிகழ்வது*:

1)*துரோணாச்சாரியார் பசியுடன் இருக்கும் தனது மகன் அஸ்வத்தாமனைக் கூட்டிக் கொண்டு தன் நண்பன் துருபதனை காண செல்லும் போது நிகழ்வது*:

"நண்பா துருபதா உன்னைத்தானே தேடி வந்தேன்.இப்போது இங்கே நீ அரசனாக இருக்கிறாய் என்று தெரியாது.உன் தந்தை எப்பொழுது இறந்தார்?பசியால் அழும் இந்த குழந்தைக்கு முதலில் சாப்பிட ஏதாவது ஏற்பாடு செய்.பிறகு உட்கார்ந்து சாவகாசமாக பேசலாம்.பேசுவதற்கு நிறைய விஷயங்கள் உள்ளன என்றபடி அவன் அருகில் செல்ல காலடி வைத்தேன்.உடனே அவன் சேவகனே அரசு சபையில் எங்கே நிற்க வேண்டும் எப்படி பேச வேண்டும் என்பதை சரியாக சொல்லித் தராமல் இவனை நீ எப்படி உள்ளே அனுமதித்தாய் என்று தன் சேவகனை திட்டினான் அவன்.அவனுடைய வார்த்தையை கேட்டதுமே அதிர்ச்சியில் உறைந்து போனேன் நான்.என்னை அடையாளம் தெரியவில்லையா பெரியண்ணன் என்று என்னை அழைத்தாயே குரு அக்னி தேவரின் குருகுலத்தில் உன்னோடு கூட படித்த துரோணன், நெருங்கிய தோழன் என்று விரிவாகச் சொன்னேன் நான்.

நீ என் குருவின் சிஷ்யன் என்பது உண்மைதான்.ஆனால் அவர் உனக்கு வெறுமனே வில் வித்தை தான் கற்றுக் கொடுத்திருக்கக்கூடும்.ஆனால் யாரோடு எந்த மாதிரி கௌரவத்தோடு பேச வேண்டும் என்கிற நாகரிகத்தைச் சொல்லித் தரவில்லை என்றான். அவன் முகத்தில் சட்டென ஒரு கம்பீரக் களை தோன்றியது.உன் நிலைமை சரியில்லை என்று சொன்னால் நான் ஏதேனும் உதவி செய்ய தயார்.ஆனால் நண்பன் என்ற முறை கொண்டாடும் பேச்சு வேண்டாம்.அரசு சபையில் எப்படி மரியாதையுடன் பேசுவது என்று கற்றுக்கொள்ள வேண்டும்.சேவகனே இவர்களை அழைத்துக் கொண்டு போய் அரண்மனையின் பணியாட்களுக்கான சமையல் கட்டுக்கு அழைத்துச் சென்று சாப்பாடு வழங்க ஏற்பாடு செய்ய என்றான்.
இந்த துரோணர் என்றும் அவமானத்தை சகித்துக் கொண்டவனில்லை.கோபம் வந்துவிட்டது. அடேய் துருபதா உன் திமிரை அடக்காவிட்டால் நான் அக்னிவேசரின் சீடனே அல்ல என்று முகத்துக்கு நேராக சொல்லிவிட்டு குழந்தையின் கையை  பிடித்துக் கொண்டு திரும்பி விட்டேன்.இந்த சத்திரியர்களின் திமிர் என்று தான் குறைந்திருந்தது.துருபதன் மட்டுமில்லை,ஒவ்வொரு அரசனும் அப்படித்தான்"
————————————
2)"சுகதேவன் பெரிய ஞானி விரும்பும் சமயத்தில் மரணத்தை தழுவி கொள்ளும் வரம் கொண்டவன். தானாகவே இறந்து போக வேண்டும் என்று முடிவெடுத்து இறந்தான். அவனுடைய பிரம்மச்சரியம் முதலில் அறிவு பூர்வமாக உருவாகி பிறகு உணர்வுகளின் துணையோடு உறுதி பெற்ற ஒன்றாகும்.பற்று என்பதே தவறு.அதில் அகப்பட்டுக் கொள்ளாமல் வாழ வேண்டும் என்று நம்பிக் கொண்டிருந்தவன்,ஒருநாள் அதற்கு நேர் மாறாகப் பேச ஆரம்பித்தான்.குடும்பம் மனைவி மக்கள் என்பதெல்லாம் பொருளற்றது என்ற பிறகு பிரம்மச்சாரியாக எத்தனை நாள் வாழ்ந்துதான் என்ன பயன்?இப்பொழுது இறந்துவிட்டால் என்ன அல்லது இன்னும் ஐம்பது வருஷம் கழித்து இறந்தால் என்ன? பிறப்பு சாவு என்னும் நச்சுச்சக்கரத்திலிருந்து விடுதலை ஆவதே வாழ்க்கையின் குறிக்கோள். ஆசையையும் சுயநலத்தையும் விடாத வரை விடுதலை என்பது சாத்தியம் இல்லை"

#பருவம்

எஸ்.எல்.பைரப்பா

தமிழில்:பாவண்ணன்


No comments:

Post a Comment

நாடளுமன்ற முறைகள்- ஜனநாயகம் கேலி கூத்தாக்கி விட்டனர்.

நாடளுமன்ற முறைகள்- ஜனநாயகம் கேலி கூத்தாக்கி விட்டனர். •••• "வாழ்க கலைஞர், வாழ்க தளபதி, வாழ்க உதயநிதி" நாடாளுமன்றத்தில் திமுக எம்பி...