*காலத்தால் காயங்கள் ஆறினாலும் நெஞ்சத்தில் ஓலமிட்ட ஞாபகங்கள் கேள்விகளை தொடுத்துக் கொண்டே இருக்கும்….. நான் பெற்ற அனுபவங்கள்*…
*இது உண்மையா*❓
இந்தவாரம் வந்த 14-5-2024 தேதியிட்ட குமுதம் ரிப்போடர்.
*கனிமொழி அவர்களே*! தூத்துக்குடி பெரியசாமி குடும்பம் அப்படித்தான் இருக்கும்!
அவர் வைகோவுக்கு எதிராக இருந்தார். அவரை எம்ஜிஆர் கைது செய்ய முயன்ற போது அதை தடுத்து நிறுத்தியவன் நான். எம்ஜிஆர் பி ஹெச் பாண்டியன் அவர்கள் மூலம் இதே பெரிய சாமியைக் கைது செய்ய ஆணையிட்ட போது அவரைக் காப்பாற்றியவன் நான். அதேபோல அவர் தூத்துக்குடி மாவட்ட செயலாளராக திமுகவில் வருவதற்கு நானும் டி ஏ கே லக்குமணன் மற்றும் புளியங்குடி பழனிச்சாமியும் முக்கிய காரணமாக இருந்தோம். இன்றைக்கும் வைகோ இருக்கிறார்.
உங்களிடம் நான் ஏற்கனவே அவரைப் பற்றி சில முறை சொல்லி இருக்கிறேன். அதேபோல் 1991களின் நேரம். உங்களுக்கும் தனிப்பட்ட முறையில் ஏதேனும் இடைஞ்சல் வருகிற போது இன்னும் சில நெருக்கடிகளின் நேரம் நான் பக்கபலமாக இருந்து அப்போது சில உதவிகள் செய்திருக்கிறேன். அது உங்களுக்கும் ஞாபகம் இருக்கும்.
ஆனால் அவர்கள் பேச்சைக் கேட்டு நீங்கள் என்னுடைய செல்வாக்கை குறைக்க முயன்றீர்கள் மதிப்பீட்டீர்கள். ஆனால் யாரை நம்பி நீங்கள் தூத்துக்குடி மாவட்டத்தில் செயல்பட்டீர்களோ இன்னும் நம்பி இருக்கிறீர்களோ அவர்களே உங்களுக்கு விரோதமாக எதிராகச் செயல்படுவார்கள் என்பதை நான் உங்களுக்கு ஏற்கனவே இரண்டு முறை ஞாபகப்படுத்தியுள்ளேன். அவர்களைப் பற்றி எனக்கு நன்றாகவே தெரியும். அவர்கள் நடவடிக்கை அப்படித்தான் இருக்கும் என்றும் சொல்லியிருந்தேன். நீங்கள் மறந்து போய் இருப்பீர்கள்.
குறிப்பாக பெரியசாமி குடும்பம் எந்த குடும்பத்தையும் அங்கே விட்டு வைப்பதாக இல்லை. அதற்கு பலியானவர்கள் தினகரன் கேபிகே,இரா கிருஷ்ணன் அய்யாச்சாமி,ஜெயபாண்டியனும் உண்டு.
ஏரல் முத்துவும் என பலர் உண்டு. அந்தக் காலத்தில் பலரையும் இவர்கள் பாதிப்புக்கு உள்ளாக்கி இருக்கிறார்கள் பேசும்போது சர்க்கரையாக பேசுவார்கள் . அதன் மறுபக்கத்தில் நம்மைக் காலி செய்ய என்னென்ன செய்ய வேண்டுமோ அனைத்தையும் செய்து அதற்கான பல திட்டங்களையும் பல காலமாய் தீட்டிக்கொள்வார்கள். நாம இது எதையும் அறியாமல் பெருந்தன்மையாக இருந்து விடுவோம். ஆனால்அவர்களால் நாளைக்கு எந்த நேரத்திலும் யாருக்கும் ஆபத்துகள் வரலாம். இது குறித்து நான் உங்களிடம் 2017 -18 களில் சொல்லி இருந்தேன். நீங்கள்தான் மறந்து விட்டீர்கள்.
இது சம்பந்தமாக நீங்கள் விஜயா தாயன்பனிடம்
கூட விசாரித்துக் கொள்ளுங்கள்.
இவர்களைப் பற்றிய செய்திகள் இந்த வாரம் குமுதத்தில் வெளிவந்திருக்கிறது.
இதை உங்களிடம் சொல்லிக் கொண்டிருப்பதற்கு காரணம் யாரையும் குறை சொல்லியோ அவர்களைப் பழி சொல்லியோ நான் பெறப்போவது ஒன்றும் இல்லை. ஆனால் மக்கள் முன் இவர்கள் யாரென்று சொல்ல வேண்டிய அவசியம் வந்துவிடுகிறது. சில நேரம் உங்களிடம் நான் சொன்னதைப் போலவே தான் இதையும் நான் சொல்லுகிறேன். நான் மனதில் பட்டதை பேசுபவன் அதுதான் என் பலமும் பலவீனமும். நீங்கள் அறிந்தால் சரி.
@KanimozhiDMK
#ksrpost
13-5-2024.
No comments:
Post a Comment