உளி விழும் போது வலின்னு நினைச்ச எந்த கல்லும் சிலை ஆகமுடியாது.
———————————————————-
நாம் புழங்குகிற ரூபாய் நோட்டு பலவகையில் புதியதாகவும் அழுக்காகவும் மாறிப் பலரின் கையிலும் பயணிக்கிறது. அந்த ரூபாய் நோட்டு நல்லதற்கும் லஞ்ச லாவண்யத்திற்கு பிச்சைக்கும் விபச்சாரத்திற்கும் கூடப்
பயன்படுகிறது. காரணங்கள் எதுவாக இருந்தாலும் பணத்தின் மதிப்பு மட்டும் மாறுவதில்லை.
தங்கமும் அப்படித்தான்! நெருப்பிலிட்டு உருக்கி அடிக்க அடிக்க மின்னுகிறது. கல்லில் உளியை வைத்து அடித்துச் செதுக்க செதுக்கத்தான் சிற்பமும் உருவாகிறது. இப்படி உளி விழும் போது வலின்னு நினைச்ச எந்த கல்லும் சிலை ஆகமுடியாது. ஏறு ஆழ உழும் போது கஷ்டம்னு நினைச்ச எந்த நிலமும் விளைவிக்க முடியாது,
அதுபோல அடிக்க அடிக்க சிரமங்களும் கஷ்டங்களும் வேதனைகளும் வலியும் வந்தால் அதை தாங்கி நிற்பவர் சிறப்பான மனிதராக ஆகிறார். அப்படி உருவாகி வருபவர்களை தான் ஒரு ஆளுமையாக மாண்பு உடையவராக நாம் கருத வேண்டும்.
அப்படி இல்லாமல் குறுக்கு வழியில்
ஆடம்பரம் பண்ணிக்கொண்டு காரில் ஏறி வந்து பதவிகளையும் வாய்ப்புகளையும் பெற்றுக் கொள்பவர்கள் உண்மையான ஆளுமைகளாக ஏற்க முடியாது.
வாழ்க்கையில் அடிபட்டு அதை ஏற்று வாழ்ந்தவர்கள் எளிதாக நினைத்து விடாதீர்கள். பந்து அடிக்க அடிக்க உயரே எழும்புவதைப் போல அவர்கள் மற்றவரிடம் அதிகமான மதிப்பையும் மரியாதையும் பெறுவார்கள் என்பதுதான் எக்காலத்திற்குமான உண்மை.
எளிதாகச் சென்று ஓர் இடத்தில் போய் அமர்ந்து கொள்பவர்கள் வீரியமானவர்கள் அல்ல. அவர்களது பேச்சும் சிரிப்பும் ஏதோ அதிர்ஷ்டம் கிடைத்தவர்கள் போலத் தான் அற்பமாக இருக்கும். அவர்கள் சோம்பேறித்தனமான பலவீனமான ஆட்கள்.
வாழ்வில் ஆழ்ந்த அனுபவங்கள் பட்டு பல்வேறு சாதனைகள் வழியாகப் பேர் பெற்று நிமிர்ந்தவர்களே பலமானவர்கள். அவர்கள் உச்சியில் இருந்தாலும் பள்ளத்தாக்கில் இருந்தாலும் வலிமையானவர்கள். (உம்) காந்தி, நேத்தாஜி, பகத்சிங், வஉசி,ஜேபி என பலர் உண்டு.
அவர்களைக் குறைவாக எடை போட்டு
விடக்கூடாது…
இன்னும் பலர் நம்மிடை வாழ்கின்றனர்.
#கேஎஸ்ஆர்போஸ்ட்
#ksrpost
28-5-2024.
No comments:
Post a Comment