#*மர்ம மரணங்கள்*
—————————-
இரண்டு நாட்களுக்கு முன்பு நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கேபிகே.ஜெயக்குமார் தனசிங் (60) மர்ம மரணம் தொடர்பான விசாரணையில் பல்வேறு முடிச்சுகள் அவிழ்க்கப்படாமல் உள்ளது. அவர் எங்கேயாவது நெல்லை பக்கம் பார்த்தால் அண்ணா என்பார். அவர் மரணம் அடைந்ததை ஒட்டி விசாரணைகள்நடந்துகொண்டிருக்
கிறன. பல்வேறு மாதிரியான யூகங்கள் வெளி வருகின்றன.
இது மாதிரியான வழக்குகள் முன்பே தமிழகத்தில் உதாரணமாக2012ல் அமைச்சர் கே என் நேரு அவர்களின் தம்பி ராமஜெயம் கொலையுண்டது இன்னும் கண்டுபிடிக்க முடியாத மர்மமாகவே இருக்கிறது. எந்த துப்பும் கிடைக்கவில்லை. பத்தாண்டுகள் கடந்து விட்டன.
அதுபோல ஆட்டோ சங்கர் விவகாரத்தில் இதுவரை முழுமையான விசாரணை மேற்கொள்ளப்படவில்லை. அதிலும் இன்னும் பல மர்மங்கள் ஒளிந்து கிடக்கின்றன.
ராஜீவ் காந்தி மரணத்திலும் குற்றப் பின்னணிகள் பற்றி ஏதும் தெளிவாகச் சொல்லப்படவில்லை. மேலும் பல வகையான குளறுபடிகளோடு அவ்வழக்கிற்கான காரணங்களை முழுமையாக அல்லது ஒரு கறாரான விசாரணைகளின் வழியே இன்னும் கண்டுபிடிக்கப்பட்ட முடியவில்லை. உண்மையான குற்றவாளிகள் யார் என்பது இதுவரை வெளிப்படவில்லை.
அண்ணாமலை பல்கலைகழக மாணவர்
உதயகுமார்….
பூலவாரி சுகுமாரன், தா. கிருட்டிணன் என…..
அதேபோல் இந்திரா நகர் பிரேமா வழக்கு சம்பந்தமாக பல பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.1980களில் நடந்த வழக்கு முழுமையாக விசாரிக்கப்பட்டுக் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படவில்லை.
இதுபோல தமிழகத்தில் தொடர்ந்து; திரைத்துறையை சார்ந்தவர்களை தாறு மறக்க தாக்கி 'இந்து நேசன்' பத்திரிக்கையில் எழுதி வந்த லட்சுமிகாந்தன்.
இதனால் 08-11-1944 அன்று லட்சுமிகாந்தன் மதராஸ் மாகாணம் புரசைவாக்கம் பகுதியில் ரிக்ஷாவில் சென்ற போது மர்மநபர்களால் கத்தியால் குத்தப்பட்டார். 1945 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இவ்வழக்கு மதராஸ் உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளப்பட்டது. தியாகராஜ பாகவதர் உள்ளிட்ட 8 பேருக்காக அன்றைய பிரிட்டிஷ் ஆட்சிக்குட்பட்ட இந்தியாவிலிருந்த மிகப்பெரிய வழக்குரைஞர்கள் வாதிட்டனர்.
வழக்கில் தயாரிப்பாளர் ஸ்ரீராமுலு நாயுடு மற்றும் இன்னொருவர் மீது குற்றச்சாட்டு வலுவாக இல்லாத காரணத்தால் அவர்கள் விடுவிக்கப்பட்டனர். மீதமிருந்த தியாகராஜ பாகவதர், என்.எஸ்.கிருஷ்ணன் உட்பட அனைவருக்கும் குற்றத்தில் தொடர்பு இருப்பதாக கூறி 1945-ஆம் ஆண்டு மே மாதம் 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை அளித்தது. இதிலும் சரியாக விசாரிக்கப்படவில்லை என அன்று விமரசானங்கள் எழுந்தன.
இப்படி நடந்து வரும் பல மர்மமான கொலைகள் அதற்கான வழக்குகள் குற்றவாளிகள் எதுவும் கண்டுபிடிக்கப்படாமலே கிடப்பில் இருக்கின்றன.
கடந்த இரண்டு ஆண்டுகளில் காவல் நிலைய மரணங்கள் மட்டும் 100க்கு மேல் நடந்திருக்கின்றன.
பாளையங்கோட்டை மருத்துவமனை எதிரில் ஒரு பெண்ணை பட்டப்பகல் 12 மணிக்கு வெட்டிக் கொலை செய்து விட்டு போகிறார்கள்.
இதுபோல பல வழக்குகள் காரணம் என்னவென்று தெரியாத அளவில் தமிழகத்தை சுற்றி நடந்து கொண்டிருக்கின்றன. சட்டம் ஒழுங்கு குறித்த நடவடிக்கைகள் ஏன் தாமதப்படுத்தப்படுகின்றன. அல்லது ஏன் கண்டுபிடிக்க முடியாமல் போகின்றன. இது போன்ற காரணங்களைத் தெளிவுபடுத்த வேண்டும்.
இப்படியான பல மர்ம மற்றும் காவல் மரணங்கள் பொதுமக்கள் மனதில் விளைவிக்கும் அச்சம் என்பது உளவியல் பூர்வமாக மிகவும் மோசமான பாதிப்பை ஏற்படுத்தும்.
மக்கள் நல அரசு இவற்றின் மீது விழிப்புணர்வோடு இருக்க வேண்டும். அனைத்து வழக்குகளையும் கண்டுபிடித்து குற்றவாளிகளை அம்பலப்படுத்த வேண்டும். சட்ட ஒழுங்கு குறித்த அவர்களின் நடவடிக்கைகள் நவீனமான முறையில் மாற்றப்பட வேண்டும்.தமிழகத்தில் லஞ்சம் ஊழல் ஒருபுறம் இருந்தாலும் அன்றாடவாழ்வில் பொதுமக்கள் தினம் தினம் இப்படி பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொள்கிறார்கள்
#கேஎஸ்ஆர்போஸ்ட்
#ksrpost
6-5-2024.
No comments:
Post a Comment