இவரே கூட எக்காலத்திலும் காமராஜர் உடன் அரசியல் பயணம் மேற்கொண்டவர் அல்ல. இவர் கூட இருந்தவர்கள் எல்லாம் கம்யூனிச இயக்கத்தை சேர்ந்த ராம் மற்றும் மறைந்த மைதிலி சிவராமன் போன்றவர்கள் தான். Radical என்ற ஏட்டை காங்கிரஸ் எதிராக நடத்தினார்கள். பின் சி. சுப்பிரமணியம் மூலம் இந்திரா காங்கிரஸ் கடசியில் சேர்ந்தார்.
காமராஜரை பற்றி ஒன்றும் தெரியாத இவர் ஸ்டாலினை அவருடன் ஒப்பிடுகிறார். ப சிதம்பரம் இந்திரா காங்கிரசில் தான் இருந்தார் இந்திரா காங்கிரசின் இளைஞர் அணியில் இருந்து வந்தவர். காமராஜர் மறைவுக்கு பின் ஸ்தாபன காங்கிரஸ் இந்திரா காங்கிரஸ் இணைந்தது.
பிஜேபி இந்த தேர்தலில் சிவகங்கையில் கார்த்திக் சிதம்பரத்திற்கும் தூத்துக்குடியில் கனிமொழிக்கும் மற்றும் டி ஆர் பாலு மூவரையும் எதிர்க்கத்
தகுதி உள்ள வேட்பாளர்களை ஏன் அங்கே நிறுத்தவில்லை. சிதம்பரம் சிவகங்கையில் தன் மகனை நிறுத்தி இருக்கிறார்.
அதனால்தான் அவர் இப்படி எல்லாம் பேசுகிறார். பிஜேபியை எதிர்த்து பேசுகிறார். அவர் அமித்ஷாவின் கற்பனா வாதத் தன்மையில் இப்படி எல்லாம் பேசிக் கொண்டிருக்கிறார்.
இதெல்லாம் பிஜேபிக்கு வேண்டும்தான். மேற்கண்ட மூவருக்கும் எதிரான தகுதி வாய்ந்த வேட்பாளர்களை போடாததால் வந்த விளைவு. அவர் இப்படி ஸ்டாலினைப் பாராட்டிப் பேசிக் கொண்டிருப்பதற்கெல்லாம் பிஜேபி தான் பதில் சொல்ல வேண்டும்
No comments:
Post a Comment