*வரலாறு : பிறந்த மண்ணை பார்க்க வந்த எம்.ஜி.ஆர்! : 1965 அக்டோபர் 22 வீரகேசரியில்*...
தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் மறைந்த எம்.ஜி.ஆர். கண்டியில் பிறந்து, குழந்தையாக இந்தியாவுக்கு எடுத்துச் செல்லப்பட்ட பின்னர், முதல் முறையாக பிறந்த மண்ணை பார்க்க இலங்கைக்கு வருகை தந்தது 1965 அக்டோபர் 21ஆம் தேதியாகும்.
சினிமாவில் நடித்துக்கொண்டிருந்த காலகட்டத்திலேயே அவர் சக நடிகை சரோஜாதேவியுடன் இலங்கைக்கு வந்திருந்தார்.
வந்திறங்கிய அன்றைய தினமே மாலையில் காலிமுகத்திடலில் உள்ள ஹோட்டல் ஒன்றில் இடம்பெற்ற பத்திரிகையாளர் மாநாட்டில் எம்.ஜி.ஆர். பேசினார்.
எம்.ஜி.ஆர். மற்றும் சரோஜாதேவி வருகையின்போது எடுத்துக்கொண்ட புகைப்படத்தையும், மாநாட்டில் எம்.ஜி.ஆர் பேசிய விடயங்களையும், 1965 அக்டோபர் 22ஆம் தேதி வெளியான வீரகேசரி பத்திரிகை "*ஈழத்தில் படமெடுக்க திட்டமிட்டுள்ளேன் : எம்.ஜி. ராமச்சந்திரன் அறிவிப்பு*" என்ற தலைப்பில் இவ்வாறு பிரசுரித்திருந்தது.
virakesari.lk/article/183082
#MGR
No comments:
Post a Comment