Tuesday, May 28, 2024

#முல்லைபெரியாறு #MullaiPeriyar

#*முல்லைபெரியாறு சிக்கல்*….. 
*சிபிஎம் - திமுக சேட்டன்களின் மன சீக நட்புகள் வேறு*
———————————

கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் உள்ள முல்லைப் பெரியாறு அணை 1886 இல் கட்டப்பட்டது. அப்போதைய திருவிதாங்கூர் சமஸ்தானத்திடம் போட்ட ஒப்பந்தத்தின்படி 999 வருடங்களுக்கு  தமிழகத்திற்கு அந்த அணை குத்தகைக்குத் தரப்பட்டு அதை ப் பராமரிக்கும் பணியும் வழங்கப்பட்டது.

இந்நிலையில் இன்றைய கேரளா அரசு முல்லைப் பெரியாறு அணையில் இருந்து கீழாக 1200 அடிக்குக்கீழ் புதிய அணையை கட்டவும் முல்லைப் பெரியாறு அணையை இடிக்கவும் திட்டமிட்டு வந்து கொண்டிருப்பது நாம் அறிந்தது தான். அதற்கான வழக்குகளும் தாவாக்களும் தொடர்ந்து நடந்து கொண்டு இருக்கிறது.

எத்தனையோ நிபுணர் குழுக்கள் நேரில் வந்து இடுக்கி யின் முல்லைப் பெரியாறு அணையை பரிசோதித்து அது மிகவும் உறுதியாக இருக்கிறது என்று சொன்ன பின்பும் 142 அடிகளுக்கு மேல் நீரை தேக்க முடியாது என்றும் 
தேக்கினால் அணை தகர்ந்து விடும் என்றும் அவர்கள் பொய்யான ஒரு பரப்புரையை எப்போதும் மேற்கொண்டு கேரள ஆட்சியாளர்கள் வருகிறார்கள்.

எதிர்கால நலன்களின் பேரில் ஏறக்குறைய அப்பகுதி விவசாயிகளின் வாழ்க்கை தரத்தை உயர்த்த நீண்ட காலத்திட்ட மதிப்பீட்டின்படி கட்டப்பட்ட அந்த அணை ஏறக்குறைய 15 ஆயிரத்துக்கு மேலான ஹெக்டேர்களுக்கு நீரை வழங்கி விவசாயத்தை மேம்பட செய்கிறது என்பதை இன்றைய கேரள அரசியல்வாதிகள் வசதியாக மறந்து விடுகிறார்கள்.

தற்போது புதிதாகக் கட்டப்பட இருப்பதாகக் கேரள அரசு  மனு கொடுத்துள்ள புள்ளி விவரங்களின்படி புதிய அணையும் இடிக்கப் பட இருப்பதாகச் சொல்லும்  பழைய அணையும் அமைந்துள்ள மலைப்பகுதி  மத்திய அரசின் புலிகள் சரணாலயமாகவும் இருப்பதால் புதிய அணை கட்டுவதற்கோ பழைய அணையை இடிப்பதற்கோ அவர்கள் மத்திய அரசிடம் அனுமதி பெற வேண்டும்

இவை ஒருபுறம் இருக்க 2014ல் உச்ச நீதிமன்றம் அணையை கட்டுவதற்கும் இடிப்பதற்கும் தமிழகத்திற்கும் கேரளாவுக்கும் இடையே ஒப்புதல்கள் நிகழ வேண்டும் என்று சட்டம் இயற்றி இருக்கிறது.

இப்படியான நிலையில் கேரள அரசு புதிய அணையை கட்டவும் இடிக்கவும் மனு போட்டிருப்பது எந்த விதத்தில் நியாயமாக இருக்கும்! போக தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் இந்த விஷயத்தில் என்ன விதமாக முடிவெடுக்கிறார்கள்!

இந்திய கூட்டணியில் மாநில உரிமைகளுக்கு அதிகம் குரல் கொடுக்கும் இவர்கள் தங்களது பிரச்சனைகளை நல்ல புரிந்துணர்வுடன் அண்டை மாநிலங்களோடு ஏற்படுத்திக் கொள்ள தங்களுக்குள்ளே மறுக்கிறார்கள்.  அப்படியானால் அது என்ன விதமாக ஆன கூட்டணி? என்ன விதமான ஒற்றுமை? சிபிஎம் - திமுக சேட்டன்களின் மன சீக நட்புகள் வேறு

இந்த அணை கட்டப்பட்டு பழைய அணை இடிக்கப்பட்டாலும் கூட வழக்கமான நீர் தமிழகத்திற்கு தரப்படும் என்று சொல்லுகிறார்களே இதுவரையும் வழக்கமான நீர் வந்து கொண்டு தான் இருக்கிறது இதில் இவர்களுக்கு என்ன பிரச்சனை? கேரளாவின் நதிகளில் எவ்வளவு நீர் வீணாகக் கடலில் கலக்கிறது. பல நாடுகளில் நதிநீரை முறையாகப் பயன்படுத்துகிறார்கள் அந்த புதிய தொழில்நுட்பங்கள் எல்லாம் வேண்டியது இல்லையா? இன்னொரு பக்கம் சிலந்தி அணை…

நான் தொடர்ந்து குறிப்பிட்டு வந்திருப்பது போல இம்மாதிரி விவகாரங்களை பொதுநல வழக்காக ஆக்கி அதில் ஈடுபட்டவன் என்கிற முறையில் சொல்லிக் கொள்வதெல்லாம்
எப்போதுமே தாமதமாக எல்லா விவகாரகத்திலும் தலையிடும் தமிழக அரசு இந்த விஷயத்தில் முந்திக் கொள்ள வேண்டும் என்று தான் ஞாபகமூட்டுகிறேன். ஏனென்றால் இது பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்களின் வாழ்வாதார பிரச்சனை! இது வேறு விடியல் திமுக மாடல் ஆட்சி.⁉️.      

#முல்லைபெரியாறு
#MullaiPeriyar
#ksrpost
#கேஎஸ்ஆர்போஸ்ட்
28-5-2024.


No comments:

Post a Comment

நாடளுமன்ற முறைகள்- ஜனநாயகம் கேலி கூத்தாக்கி விட்டனர்.

நாடளுமன்ற முறைகள்- ஜனநாயகம் கேலி கூத்தாக்கி விட்டனர். •••• "வாழ்க கலைஞர், வாழ்க தளபதி, வாழ்க உதயநிதி" நாடாளுமன்றத்தில் திமுக எம்பி...