Wednesday, May 29, 2024

என்நிலைப்பாடு இப்படியாக முகநூலில் தொடங்கியவர்கள் மட்டுமல்ல எனது அத்யந்த நண்பர்கள் என்னிடம் பலமுறை தொலைபேசியில் பேசி உங்களை வஞ்சித்தவர்களைப் பற்றி நீங்களும் மோசமாக விமர்சித்து கடுமையாகத் திட்டி எழுதுங்கள் இன்று ஆதங்கம் தாளாமல கூறுகிறார்கள்.

#என்நிலைப்பாடு

இப்படியாக முகநூலில் தொடங்கியவர்கள் மட்டுமல்ல எனது அத்யந்த நண்பர்கள் என்னிடம் பலமுறை தொலைபேசியில் பேசி உங்களை வஞ்சித்தவர்களைப் பற்றி நீங்களும் மோசமாக விமர்சித்து கடுமையாகத் திட்டி எழுதுங்கள் இன்று ஆதங்கம் தாளாமல கூறுகிறார்கள்.

தன் தகுதிக்கும் கீழே இறங்கி விமர்சிப்பவர்களை
நான் எப்போதும் பொருட்படுத்த மாட்டேன். நான் யார் மனதையும் புண்படுத்தி எதையும் சாதிக்க மாட்டேன். 
தடித்த கடினமான சொற்களால் விமர்சனம் செய்யவும் மாட்டேன்.

ஒருவர் பேசுகிற சொற்கள் மூலம் அவர் தன் தகுதியைத் தான் வெளிப்படுத்துகிறார். ஆகவே முகநூலிலோ யூ ட்யூபிலோ பத்திரிகைகளிலோ என் கருத்தை எழுதும் போது அதன் கண்ணியத்தை கருதி அது விமர்சன பூர்வமாக இருந்தாலும் கூட மரியாதைக்குரிய வார்த்தைகள் மூலமாகத்தான் நான் என் கருத்தை வெளிப்படுத்துவேன். மானங்கெட்ட தனமாக அநாகரிகமாக பேசுபவர்கள் எதற்காக அப்படி பேசுகிறார்கள் என்று எனக்கு தெரியும் ! என்னைப் பற்றி பலரும் இந்த அரசியல் வாழ்க்கையில் அசிங்கமாக பலவாறாகப் பேசியிருக்கிறார்கள் அதற்கான ஆதாரங்களைக் கூட நான் வைத்துள்ளேன். ஆனால் என்றும் என் எழுத்தில் பேச்சில்  நாகரிகத்தைக் 
 மட்டுமே கடைப்பிடிப்பது
என் வளர்ப்பு முறை. என் அன்பு நண்பர்களுக்கு சொல்லிக் கொள்வதும் இதுதான்.

#highlightseveryone
#everyonehighlights
#everyonefollowers
#highlight #life #likeforlikes
#everyone 
#ksrpost
#கேஎஸ்ஆர்போஸ்ட
29-5-2024.


No comments:

Post a Comment

நாடளுமன்ற முறைகள்- ஜனநாயகம் கேலி கூத்தாக்கி விட்டனர்.

நாடளுமன்ற முறைகள்- ஜனநாயகம் கேலி கூத்தாக்கி விட்டனர். •••• "வாழ்க கலைஞர், வாழ்க தளபதி, வாழ்க உதயநிதி" நாடாளுமன்றத்தில் திமுக எம்பி...