திரள்மணி கதிர்கள் வீசி திசை ஆளும் ஆதவன்….
குமரித்தாய்..
1940s :: Rock In Kanyakumari Where Swami Vivekananda Meditated For 3 Days ( 25th December to 27 December-1892)
முக்கடல் சங்கமமாம் நீலத் திரைக் கடல் அலைகள் பொங்கும் இந்து மகா கடலின் ஊராம் கன்னியாகுமரியில் எடுத்த 1940 இன் காட்சிகள்!
ஒருபுறம் அக்காலத்தில் இங்கே வந்து விவேகானந்தர் தியானம் செய்த பாறை அதன் மேல் அவர் பெயராலே அமைந்துள்ள நினைவு மண்டபம். இன்னொரு புறம் தலைவர் கலைஞர் அவர்கள் அய்யன் திருவள்ளுவர் சிலையை வான் உயர கம்பீரமாக 2000 இல் அமைத்துள்ள காட்சி. .
இங்கே இணைக்கப்பட்டிருக்கிற புகைப்படம் 1940ல் என் தந்தை யார் தனது காமிராவில் கன்னியாகுமரி கடற்கரையைக் கருப்பு வெள்ளையாகப் பிடித்து சேகரித்து வைத்திருந்த ஒன்று.
பாருக்குள்ளே நல்ல நாடு என்று பாரதி தமிழ்நாட்டை பாடினான் யாமறிந்த மொழிகளிலே தமிழைப் போல் இனிதாவது எங்கனம் காணேன் என்றான். விவேகானந்தரும் நூறு தமிழ்நாட்டு இளைஞர்களை என்னிடம் கொடுங்கள் நாட்டை வேறு வழியில் நான் மாற்றி காட்டுகிறேன் என்று சொல்லி தமிழ்நாட்டின் மீது அன்பும் நம்பிக்கையும் வைத்திருந்தார்.
அந்த வகையில் இந்தியாவைப் பொறுத்து தமிழகம் ஒரு தனித்த வகையில் முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் தனி அடையாளமாகவும் இன்றுவரை இருந்து வருவதை யாரும் மறுக்க முடியாது. இங்கு பிரதமர் மோடி இங்கு வருகிறார் என்பது செய்தி.
https://youtu.be/qlaxmXlBaGM?si=Cd83rWo6LLDwSobc
#kanyakumari #கன்னியாகுமரி
#கேஎஸ்ஆர்போஸ்ட
#ksrpost
29-5-2024.
#highlightseveryone
#everyonehighlights
#everyonefollowers
#highlight #life #likeforlikes
#everyone
No comments:
Post a Comment