#*கச்சத்தீவு குறித்து திரு அண்ணாமலை வெளியிட்டட ஆவணங்கள் குறித்து சர்ச்சையைக் கிளப்பி இருக்கிறார்கள்*.
அதை முறையான முறையில் ஆய்வு செய்து அந்த ஆவணங்கள் போலிதான் என்று சொல்வதற்கு யாருக்கும் உரிமை இருக்கிறவர்கள சரியா பிழையா. சொல்லட்டும் மாற்றுக்கருத்துகள் ஏதுமில்லை.
ஆனால் நான் ஏற்கனவே “கனவாகிப் போன கட்சத்தீவு” என்கிற நூலில் அதன் முழு விபரங்களையும் அதற்கான சான்றுகளோடு இன்று வரையில் கச்சத்தீவு குறித்த விவாதங்களில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்ன நடந்திருக்க வேண்டும் மேலும் அந்த ஒப்பந்தங்களில் என்னவெல்லாம் மாற்றங்கள் நேர்ந்தது என்பதை எல்லாம் சமகால விவாதங்களாக இன்று வரையான ஆவணங்களை இணைத்து எனது நூல் இப்போது நான்காவது பதிப்பாக வெளிவந்திருக்கிறது.
இலங்கை அதிபராக இருந்த சிரிமாவோ பண்டாரநாயகாவும் அன்றைய இந்தியப் பிரதமராக இருந்த இந்திரா காந்தி அம்மையாரும் இதுகுறித்துப் பேசும்போது பண்டார நாயகா கச்சத்தீவை எங்களுக்குக் கொடுப்பதில் என்ன பிரச்சனை? கொடுத்து விடலாமே! என்று கேட்க இந்திரா அம்மையார் "இல்லை தமிழ்நாட்டில்
இது குறித்த எதிர்வினைகள் மோசமாக இருக்கும்” என்று சொன்னவை யாவும் அந்நூலில் தெளிவாக முன்வைக்கப்பட்டிருக்கின்றன. பின் என்ன நடந்தது?இன்னும் அறியப்படாத பல விபரங்கள் அந்நூலில் துல்லியமாக உள்ளன.
இன்றைக்கு வரலாறு தெரிந்தவர்களை யார் தான் மதிக்கிறார்கள்?. உண்மையில் கச்சத்தீவு பற்றிய அனைத்து வழக்குகளையும் அதனால் ஏற்பட்டிருக்கக் கூடிய விவாதங்களையும் கடந்த ஐம்பது வருடங்களாய்ப்பின் தொடர்ந்தவன்
என்கிற முறையில் சொல்கிறேன்.
ஒரு கான்ஸ்டியூசனில் ஏற்படுகிற அண்டை நாடுகளின் உறவுகள் குறித்த அல்லது எல்லைகள் விட்டுக்கொடுத்தல் பற்றிய அரசியல் புரிந்துணர்வு ஒப்பந்தங்களை ஒழுங்காக வாசிக்கத் தெரியாதவர்கள் எல்லாம் பதவிக்கு வந்து பாடாய்ப் படுத்துகிறார்கள்.
இம்மாதிரியான வரலாறுகளைத் தெரியாமல் இருப்பது தமிழ்நாட்டின் குற்றமா?
இல்லை வெறுமனே சர்ச்சையை கிளப்பிக் கொண்டிருப்பவர்களுடைய கருவின் குற்றமா?
#கச்சதீவு
#katchathivu
#katchtheev
#ksrpost
#கேஎஸ்ஆர்போஸட்
9-5-2024.
No comments:
Post a Comment