#காங்கிரஸ்காரர்களுக்கு ஒருதகவல்
#அன்றையகாங்கிரஸ் இதழ்கள்
இன்றுள்ள காங்கிரஸ் காரர்களுக்கு தெரியுமோ தெரியாதோ;
கோவை மத்திய முன்னள் அமைச்சர் பிரபுவுடைய தந்தை பி ஆர் ராமகிருஷ்ணன் நடத்திய ‘நவ இந்தியா’
சென்னை(மயிலை கல்லுக்காரன் தெரு)- மதுரையில் (குருவிகாரன் சாலை)வெளிவந்த செய்தி பழ நெடுமாறனின்
‘செய்தி’ . பின் நாட்களில் சின்னக்குத்தூசி அழைக்கப்பட்ட திருவாரூர் தியாகராஜன் இதில் பணி செய்தார்.
திராவிட இதழ் என துவக்கப்பட்ட வேலூர் நாராயணன் ஆசிரியராய் இருந்த ‘அலை ஓசை’ இவ்விதழ் 1992 வரை வெளிவந்தது. இவ்விதழில் ஜெயகாந்தன், நா. பார்த்தசாரதி, கண்ணதாசன், பழ. நெடுமாறன், முரசொலி அடியார், வலம்புரி ஜான், விருதுநகர் சீனிவாசன், அறந்தை நாராயணன் எனப் புகழ்பெற்ற எழுத்தாளர்கள் எழுதியுள்ளனர்.
ஜெயகாந்தன் போன்றவர்களின் எழுத்துகளை எடுத்து வந்த திருவிகாவின் ‘நவசக்தி’
கவிஞர் கண்ணதாசனின் ‘தென்றல்’
கனிமொழி விடயத்தை முதலில் வெளிச்சத்துக்கு கொண்டு வந்த அண்ணாச்சி விருதுநகர் எம்கேடிஎஸ்யின் ‘ஜவகரிஸ்ட்’
ஜெயக்கொடி, ஜெயபேரிகை என பல காங்கிரஸ் ஏடுகள் வந்தன.
இந்த பத்திரிகைகள் காங்கிரஸிற்கு வலிமை ஊட்டவும் செழுமையாக அவற்றை மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்கவும் இயங்கிக் கொண்டிருந்த போது அவற்றில் நான் எனது சில கட்டுரைகளையும் எழுதி உள்ளேன்.
அவற்றை எல்லாம் இன்றுள்ள காங்கிரஸ் காரர்கள் அறியாதது மட்டுமல்ல! தேர்தல் கூட்டணியில் தங்களது சுகவாழ்வை அனுபவிக்க முயன்ற பிற்போக்குத் தன்மை கொண்ட எந்த அறமும் அற்ற நில உடமையாளர்களின் அதிகாரமாகத் தான் அவை நீடித்தன.
இதன் அடிப்படையில் காங்கிரஸ் திமுக என்கிற அதிகாரக் கூட்டணியைப் புரிந்து கொள்ள வேண்டும்.
#காங்கிரஸ்_இதழ்கள்
#TamilNaduCongressCommittee
#congressdailypapers_tamilnadu
#கேஎஸ்ஆர்போஸ்ட்
#ksrpost
24-5-2024.
No comments:
Post a Comment