Monday, November 30, 2020

 


#இந்து_மகா_கடலில் #சீனாவின்_கப்பல்கள்
————————————————-


இந்த வரைபடத்தில் இந்து மகா கடலில் சீனாவின் கப்பல்கள் இருக்கும் இடங்கள் காட்டுகின்றன. கால்வான் பள்ளத்தாக்கில் நடந்தது போல இந்தியப் பெருங்கடலில் சீனாவின் அத்துமீறல்கள் வந்துவிடக் கூடாதென தென்கிழக்கு ஆசிய புவியரசியலில் அச்சம் ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது. தென்சீன கடலில் சீனாசிக்கல்செய்துக்கொண்டிருக்கிறது. அமெரிக்கா இதை கடுமையாக எதிர்த்து வருகின்ற நிலையில் இந்தியா அமெரிக்கா ஜப்பான் ஆஸ்திரேலியா என்ற குவாட் கூட்டணி நாடுகள் சீனாவினுடைய முயற்சிகளை முறியடிக்க நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றது. பிரான்ஸ் அமெரிக்கா ஜப்பானுடன் கூட்டுக் கடல் போர் பயிற்சியில் இந்தியா ஈடுபட்டுள்ளது. பட்டுவழிச்சாலை என்று சொல்லிக் கொண்டு சீனாவின் போர்க்கப்பல்களும் அதனுடைய நிறுத்தங்களும் இந்த வரைபடத்தில் பார்த்தாலே இந்தியப் பெருங்கடலை சீனா ஆக்கிரமிக்க திட்டமிட்டுள்ளது தெளிவாகத் தெரியும்.

#ksrpost
கே. எஸ். இராதாகிருஷ்ணன்
30.07.2020


 

 





In the original Bengali poem - Bharoto Bhagyo Bidhata by #Rabindranath #Tagore from which our national anthem was derived, only those provinces were mentioned which were under British rule, i.e. Punjab, Sindh, Gujarat, Maratha.

Those princely states (Kashmir, Rajasthan, Andhra, Mysore, or Kerala) were ruled by the Portuguese not mentioned in the anthem.

While the poem was written by Tagore in 1911, it was adopted as our national anthem in 1950. There isn't a direct one to one relation between the literary terms and contemporary regions, but with some approximation, we can establish a decent mapping.

Another interesting fact is that there exists another derivative of the poem in Hindi called Shubh Sukh Chain which was the national anthem of the Provisional Government of Free India (Azad Hind) formed by Subhash Chandra Bose.

Tagore was a man who understood the diversity of India compared to others of his times. If one read his book 'nationalism' today, he would be labelled as anti-national by the religious nationalists. The way he acknowledged and integrated the variety of culture, race, region and language in the national anthem is a reminder to us every single day that what India is all about and we should accept and cherish our differences rather than trying to impose one on another.

You can listen to that version here: https://www.youtube.com/watch?v=m0wWSyAbTgg 

 


#சென்னை_நகரைத் #தமிழகத்திற்குரியதலைநகரமாக்க ,
————————————————



சிலம்புச் செல்வர் ம.பொ.சி தலைமையில் 1956ல் அனைத்துக் கட்சித் தலைவர்களும் திரு.ஜி.உமாபதி இல்லத்தில் கூடிய காட்சி.
இதில் அறிஞர் அண்ணா, சிலம்புச் செல்வர்ம.பொ.சி,நாவலர்,இரா.நெடுஞ்செழியன்,சி.பா.ஆதித்தனர், ப.ஜீவானந்தம்,என்.வி.நடராசன்,ஒளவை சண்முகம், எச்.டி.ராஜா,பாவேந்தர் பாரதிதாசன், எல்லைப்போராட்ட வீரர் கே.விநாயகம்,பிரபல எழுத்தாளர் நாரண்.துரைக்கண்ணன், பொதட்டூர்ப்பேட்டை ஈ.எஸ்.தியாகராஜன், தமிழ்வேள் பி.டி.ராஜன் ஆகியொரும் திரு.ஜி.உமாபதியும் உள்ளனர்

Discussion held in Ji.Umbathy's house under the leadership of Ma.Po.Si regarding movement to retain #chennai in TamilNadu and make it the state capital.
In The Pic:Arignar Anna,Silambu selvar Ma.Po.Si,Navalar Nedunchezhian,Si.Pa.Aathithanaar,Pa.Jeevanantham,N.V.Natarajan,Ovvai Shanmugan,H.D.Raja,Paventhar Bharathidasan,K.Vinayagam,Writer Naran,Thuraikannan,E.S.Thiagarajan,P.T.Rajan,

கே. எஸ். இராதாகிருஷ்ணன்
28.07.2020

#ksrposts 

 


#விடுதலைப்_போராட்ட_வீரரும்_சிறந்த #தமிழ்_அறிஞருமான_நாவலர் #சோமசுந்தர_பாரதியார்_பிறந்த_தினம் #இன்று_1879
————————————————



தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் (ஜூலை27, 1879) பிறந்தார். இயற்பெயர் சத்தியானந்த சோமசுந்தரன். எட்டயபுரம் அரசியின் பராமரிப்பில் வளர்ந்தார். அரண்மனையில் பணியாற்றிவந்த சுப்பிரமணிய பாரதிக்கு நண்பரானார். இருவரும் இணைந்து பல நூல்களைக் கற்றனர். பாடல்கள் இயற்றினர். அரண்மனைக்கு வந்திருந்த ஈழப்புலவர் ஒருவர், இவர்கள் இருவருக்கும் ‘பாரதி’ என்ற பட்டத்தை வழங்கினார்.

ஒத்துழையாமை இயக்கம், தீண்டாமை ஒழிப்பில் காந்தியடிகளைப் பின்பற்றியவர். நெல்லை, மதுரையில் காங்கிரஸ் கட்சி மாநாட்டைத் தலைமை ஏற்று நடத்தினார்.

வ.உ.சி., சுப்பிரமணிய சிவா மீதான வழக்குகளில் அவர்களுக்காக வாதாடினார்.

காந்தியடிகளை முதன்முதலில் தமிழகத்துக்கு வரவழைத்து உரையாற்றச் செய்தார். தன் குடும்பத்தினரையும் விடுதலை இயக்கத்தில் பங்குபெறச் செய்தார். சுதந்திரப் போராட்டத்துக்கு நன்கொடையாக, குழந்தைகளின் நகைகளைக் கழற்றி காந்தியிடம் அளிக்கச் செய்தார். இந்தி எதிர்ப்பு மாநாடுகளில் கலந்துகொண்டு உரையாற்றினார்.

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்த் துறைத் தலைவராக பணியாற்றினார். தமிழ் இலக்கண, இலக்கிய ஆய்வுகளில் ஈடுபட்டார். தமிழ்க் கழகம் என்ற அமைப்பை நிறுவினார். ‘தசரதன் குறையும் கைகேயி நிறையும்’, ‘அழகு’, ‘சேரர் தாயமுறை’, ‘தமிழும் தமிழரும்’, ‘திருவள்ளுவர்’ உட்பட பல நூல்களையும், 5 ஆங்கில நூல்களையும் எழுதியுள்ளார். தமிழ் இலக்கண இலக்கி யங்கள், அரசியல், வரலாறு, தமிழர் நாகரிகம், பண்பாடு, மொழி பெயர்ப்பு என நூற்றுக்கும் மேற்பட்ட கட்டுரைகளை எழுதியுள்ளார்.

இவரது தமிழ்த் தொண்டைப் பாராட்டி ஈழநாட்டுப் புலவர் மன்றம் ‘நாவலர்’ என்ற பட்டத்தை வழங்கியது. திருவள்ளுவர் கழகம் ‘கணக்காயர்’ என்ற பட்டத்தையும், அண்ணாமலை பல்கலைக்கழகம் கவுரவ டாக்டர் பட்டத்தையும் வழங்கியது.

சமூக சீர்திருத்தங்களில் ஈடுபாடு கொண்டவர். சடங்குகள் இல்லாத திருமண விழாக்களை முன்னின்று நடத்தினார். தீண்டாமை ஒழிப்பு இயக்கத்தின் மதுரை மாவட்டத் தலைவராக செயல்பட்டார். தமிழுக்கும், தமிழ் சமுதாயத்துக்கும் அருந்தொண்டுகள் ஆற்றிய நாவலர் சோமசுந்தர பாரதியார் 80ஆவது வயதில் (1959) மறைந்தார்.
இவருடைய எட்டையபுரம் திருமண்டபமாக மாற்றப்பட்டுள்ளது

 


#காலத்தின்_போக்கில்_விட்டு_விடுகின்ற #நிர்ப்பந்தம்_இல்லா_வாழ்க்கை_
#கவலை_அற்றது......
#நதியை_போன்று_நிர்மலமானது.




(Pic-டில்லி அருகே #யமுனை_ஆறு

; வட இந்தியாவின் முக்கியமான ஆறுகளுள் ஒன்றாகும். உத்தராஞ்சல் மாநிலத்தில் இமய மலையில் அமைந்துள்ள யமுனோத்ரி தொடங்கும் இந்த ஆறு, தில்லி, ஹரியானா ஆகிய மாநிலங்கள் வழியாக ஓடி, உத்தரப் பிரதேசத்தின் அலகாபாத் நகரில் கங்கை ஆற்றுடன் கலக்கிறது. யமுனோத்ரியிலிருந்து அலகாபாத் வரை 1370 கிமீ இவ்வாறு ஓடுகிறது. தில்லி, மதுரா, ஆக்ரா ஆகிய நகரங்கள் யமுனை ஆற்றின் கரையில் அமைந்துள்ளன. உலகப் பாரம்பரியச் சின்னங்களுள் ஒன்றான தாஜ் மஹால் யமுனையின் கரையில் அமைந்துள்ளது. யமுனை சிலநேரங்களில் ஜமுனா அல்லதுஜம்னாஎன்றுஅழைக்கப்படுகிறது. இது ஒரு நீளமான நதி ஆகும். இது கங்கை நதியின் இரண்டாவது பெரிய கிளை நதியாகும்.)

கே. எஸ். இராதாகிருஷ்ணன்
27.07.2020


 


#பேரறிஞர்_அண்ணா #தில்லைவில்லாளன்_பேசுவதிலே , #வீரமும்_விவேகமும்_காண்கிறோம்! #என்பார்.
#தில்லை_வில்லாளன்
——————————-


மறைந்த தில்லை வில்லாளன் அவர்களிடம் 1981லிருந்து சந்தித்து பழகக் கூடிய வாய்ப்பு கிடைத்தது. உயர்நீதிமன்றத்தில் என்னுடன் வழக்கறிஞராகவும் இருந்தார். நியூ லா சேம்பர் கீழ் தளத்தில் அவருக்கு அறையும் இருந்தது. மயிலாப்பூர் சன்னதித் தெருவுக்கு நேராக உள்ள நடுத் தெருவில் இராம. அரங்கன்னல் வீட்டில் தங்கியிருந்தார். இந்த வீட்டில்தான் அவள் ஒரு தொடர்கதை படம் எடுக்கப்பட்டது. நடிகர் ஜெய்கணேஷ் நடித்து பாடிய "தெய்வம் தந்த வீடு வீதி இருக்கு" என்ற பாடல் தெருவிலிருந்து பாடும்பொழுது வீட்டிலிருந்து நடிகை சுஜாதா ஜன்னல் திரைச்சீலைகளை மூடும் காட்சி இங்குதான் அப்போது படமாக்கப்பட்டது. சுஜாதாவின் குடும்பம் அரங்கன்னல் வாழ்ந்த வீட்டில்தான் வாழ்ந்ததாக 1974ல் திரைப்படம் எடுக்கப்பட்டது. நான் அடுத்தத் தெருவில் உள்ள சாலைத் தெருவில் 1979லிருந்து வசித்தேன். மாலைப் பொழுதுகளில் தில்லை வில்லாளன் என்னைத் தேடி வந்து பேசிக் கொண்டிருப்பார். அந்த வீட்டில்தான் விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் தங்கியிருந்தார். விவசாய சங்கத் தலைவர் நாராயணசாமி நாயுடு அங்கு வருவார். இவர்களோடு அரங்கன்னல் பேசுவதை விரும்புவார். என்னிடம் அன்போடு பழகுவார். ஒரு சமயம் நானும் அவரும் டெல்லிக்குப் போனபொழுது அவர் உடல்நிலை பாதிக்கப்பட்டது. அப்போது உடனிருந்து அவரை கவனிக்கும் வாய்ப்பு கிடைத்தது. காவிரிப் பிரச்சினையைப் பற்றி என்னுடைய கட்டுரை தினமணியில் வந்தபொழுது அதைப் படித்துவிட்டு நான் நாடாளுமன்றத்தில் இது குறித்து பேசினேன். ஹேமாவதியில் அணை கட்டாதீர்கள். அது எங்கள் தமிழகத்துக்கு எமனைப் போன்று ஏமாவதி என்று பேசினேன் என்று குறிப்பிட்டார். அவரைப் பற்றி எத்தனைப் பேருக்கு இன்றைக்குத் தெரியும்? அண்ணாவின் பயிற்சி பெற்று அவருடைய நம்பிக்கை தளபதியாக இருந்தார். சிதம்பரத்தில் பிறந்த அர்ச்சுனன்தான் தில்லை வில்லாளன். சிதம்பரம்தான் தில்லை. வில்லுக்கு அர்ச்சுனன் என்று சொல்லப்படுவதால் அந்த அர்ச்சுனன் வில்லாளன் ஆனார். அண்ணாவின் திராவிட நாடு இதழில் பணியாற்றியவர். கதை, கட்டுரை, நாடகங்கள் ஆகியவற்றை எழுதியவர். 20 வயதுக்குள் 6 நாவல்களை எழுதி வெளியிட்டவர். பேசும் ஓவியம் என்கிற இவரது நாடகம், ஓவியத்தின் மூலம் மக்களுக்கு விழிப்புணர்வூட்டும் புரட்சிக்காரனை மேடையில் சித்தரித்தது. அண்ணாவின் படைப்பாற்றல் மிக்க தம்பிகளில் இவரும் ஒருவர். தம்பி, பூமாலை போன்ற பத்திரிகைகளையும் நடத்தினார். வழக்கறிஞரான இவர் தி.மு.க. வின் சார்பில் 1968 முதல் 1976 வரை நாடாளுமன்றத்தில் மாநிலங்களவை உறுப்பினராக இருந்து தமிழகத்தின் உரிமைகளுக்காக குரல் கொடுத்தார். சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் மாதவன், தன்னுடைய எழுத்துக்களுக்கு முன்னோடியாக அண்ணா, கலைஞர், தில்லை வில்லாளன் ஆகியோரது பெயரைக் குறிப்பிட்டதிலிருந்து திராவிட இயக்கத்தில் #தில்லைவில்லாளன் என்ற படைப்பாளி எத்தகைய விதைகளை விதைத்துச் சென்றிருக்கிறார் என்பதைப் புரிந்துகொள்ள முடியும். #பேரறிஞர் #அண்ணா அவர்கள் .. #தில்லைவில்லாளன் பேசுவதிலே , வீரமும் விவேகமும் காண்கிறோம்! என்பார்.


மற்ற கழகத்தின் முன்னோடிகளை ,

சொற் பொழிவாளர்களை பற்றியும்
அவர்களின் பேச்சு நடையை பற்றி
சுவைபட எடுத்து கூறுவார்

தனது தம்பிகளை பற்றி.

நாவலர் நடையில் , தமிழ் இலக்கியம்
ஆட்சி செய்கிறது

கருணாநிதியின் , பேச்சு கலை முரசு'

நடராசன் , பேச்சிலோ எளிமையும்
தோழமையும் சுவை தருகிறது:

கண்ணதாசன் , பேச்சில் காரம் கவிதை
வடிவில் கிடைக்கிறது!

ஆசைத்தம்பியின் , பேச்சில்
அழுத்தந்திருத்தம் அழகு பெறுகிறது!

இளங்கோ , பேச்சில் எதிரியை மடக்கிடும்
முடுக்கு தெரிகிறது!

சம்பத் பேசுகிறார் , சம்மட்டி அடி என்கிறார்
எதிரிகள்!

ச . அமுதன் பேசுகிறார் , பேச்சில்
அமுதென தமிழ் இருக்கும் .

ராமசாமி பேசுகிறார் , எதிரியின் மனமும்
இளகிவிடுகிறது!

சிற்றரசு பேசுகிறார் , சீறி வருவோரும்
சிரித்த படி குழைகின்றனர்!

சத்தியவாணிமுத்து , பேச்சிலே
இனிமையும் சூடும் கலந்து கிடைக்கிறது!

குடந்தை நீல மேகம் , அனுபவத்தை
கொட்டுகிறார்!

மதுரை முத்து , தமிழ் மரபாம் வீரத்தை
விளக்குகிறார்!

கோவை ராசமாணிக்கம் , கோலோச்சும்
வழியைக் கூறுகிறார்!

ப . உ . சண்முகம் பேச்சில் , பண்பும்
பயனும் காண்கிறோம் !

காஞ்சி அண்ணாமலை , கனிவு
பொழிகிறார்!

வட ஆற்காடு முல்லை சக்தி , எண்ண
பண்ணைக்கு வண்ணம் தேடி
அளிக்கிறார்!

பாராங்குசம் , பேசும்போது பாட்டாளி
படை திரளுகிறது!

திருச்சி மணி , பேசும்போது தீ கிளம்பி
தீயோரை கருக்கிவிடுகிறது!

சிவசாமி , பேசும் போது சீறும் மாற்றாரும்
சிந்திக்கின்றனர்!

மதியழகன் , பேச்சு மாணவர் உள்ளம்
எல்லாம் நிறைகிறது!

அலமேலு , அப்பாதுரையின் பேச்சிலோ
ஆர்வம் கொந்தளிக்கிறது!

திராவிட இயக்கத்தின் பொதுக்கூட்டம் .

மாலை நேரபல்கலைகழகம்
என்றளவில் நடந்தது .

பலபேச்சாளர்களைசிந்தனையாளர்கள உருவாக்கியது .

கே. எஸ். இராதாகிருஷ்ணன்
26.07.2020

#ksrposts

OCT 18 2026

  Remember how foreign-funded activists like Medha Patkar tried their best to deprive the Kutch region of Narmada water until Modi called th...