Monday, November 30, 2020

 


#இந்து_மகா_கடலில் #சீனாவின்_கப்பல்கள்
————————————————-


இந்த வரைபடத்தில் இந்து மகா கடலில் சீனாவின் கப்பல்கள் இருக்கும் இடங்கள் காட்டுகின்றன. கால்வான் பள்ளத்தாக்கில் நடந்தது போல இந்தியப் பெருங்கடலில் சீனாவின் அத்துமீறல்கள் வந்துவிடக் கூடாதென தென்கிழக்கு ஆசிய புவியரசியலில் அச்சம் ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது. தென்சீன கடலில் சீனாசிக்கல்செய்துக்கொண்டிருக்கிறது. அமெரிக்கா இதை கடுமையாக எதிர்த்து வருகின்ற நிலையில் இந்தியா அமெரிக்கா ஜப்பான் ஆஸ்திரேலியா என்ற குவாட் கூட்டணி நாடுகள் சீனாவினுடைய முயற்சிகளை முறியடிக்க நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றது. பிரான்ஸ் அமெரிக்கா ஜப்பானுடன் கூட்டுக் கடல் போர் பயிற்சியில் இந்தியா ஈடுபட்டுள்ளது. பட்டுவழிச்சாலை என்று சொல்லிக் கொண்டு சீனாவின் போர்க்கப்பல்களும் அதனுடைய நிறுத்தங்களும் இந்த வரைபடத்தில் பார்த்தாலே இந்தியப் பெருங்கடலை சீனா ஆக்கிரமிக்க திட்டமிட்டுள்ளது தெளிவாகத் தெரியும்.

#ksrpost
கே. எஸ். இராதாகிருஷ்ணன்
30.07.2020

No comments:

Post a Comment

"OPERATION RUDRAM".

  "OPERATION RUDRAM".