Monday, November 30, 2020

 


#சேலம்_வரதராஜூலு_நாயுடு
————————————



இன்று,23-07-2020 சேலம் வரதராஜூலு நாயுடு அவர்களின் 62வது நினைவு தினம்.. தமிழகத்தின் முதல் இதழாளர். இந்தியன் எக்ஸ்பிரஸ்

ஏட்டை இவர்தான் துவங்கினார்.

உத்தமர் காந்திக்கும் நெருக்கமானவர். வ.உ.சி சதி வழக்கில் அவரது விடுதலைக்கு உதவியவர். பெரியார், இராஜாஜி,காமராஜர் போன்றோருக்கு இவர் வழிகாட்டி உதவியாக இருந்தவர்.

Perumal Varadarajulu Naidu (4 June 1887 – 23 July 1957) was an Indian physician, politician, journalist and Indian independence activist.He was also the founder of The Indian Express, a major English-language daily, in 1932 in Madras.He was described as, "a distinguished labour leader, an eminent journalist, an ardent champion of the causes of handloom weavers, small-scale and cottage industries and a spirited advocate of interests of politically and socially disadvantaged sections of society".

Varadarajulu Naidu entered politics at an early age and joined the Indian National Congress. In 1917, he gave up medical practice. He participated in the Indian Home Rule Movement and was President of the Tamil Nadu Congress Committee at the time of the Cheranmahadevi school controversy.

#Cheranmadevi_gurukulam_issue
Varadarajulu joined Periyar and Kalyanasundara Mudaliar and strongly opposed the practice of separate dining for Brahman and non-Brahman students in Shermadevi Gurukulam, a national school run by V. V. S. Aiyar. The issue was brought to the notice of Gandhi and Aiyar later resigned. When the Tamil Nadu Congress Committee met in April 1925 to discuss the issue, the recommendation of C. Rajagopalachari and Rajan that Congress should not interfere and that the school should instead be advised to eliminate the practice was swept aside. The resolution which prevented gradations of merit based on birth should not be observed by nationalist parties moved by Ramanathan passed. Rajagopalachari and six of his associates resigned from TNCC citing that caste prejudices could not be overcome by coercion.[9] However, Varadarajulu Naidu stayed on in the Congress even as Periyar left the party.

#Temple_entry_and_Vaikam_issue
In his later years, Varadarajulu Naidu actively participated in the temple-entry movements in Madras Presidency.

....

பெ. வரதராஜுலு நாயுடு (ஜூன் 4, 1887 - ஜூலை 23, 1957) இந்திய அரசியல்வாதியும், இந்திய விடுதலை போராட்ட வீரரும் ஆவார். சித்த ஆயுர்வேத மருத்துவரும், பத்திரிக்கையாளருமான இவர் சென்னை மாநிலச் சட்டமன்ற மேலவை உறுப்பினராகவும், தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்தவர்.

வாழ்க்கைக் குறிப்பு :

தமிழ்நாடு சேலம் மாவட்டம் இராசிபுரத்தில் 1887 ஆம் ஆண்டு ஜூன் 4 ஆம் தேதி வரதராஜுலு பிறந்தார்.​ தந்தை பெயர் பெருமாள் நாயுடு, தாயார் பெயர் குப்பம்மாள். 24ஆம் வயதில் அவர் ருக்மணி என்பவரைத் திருமணம் செய்து​கொண்டார்.​

உயர்நிலைக் கல்வி கற்கும்​பொழுதே நாடெங்கும் பரவிய வந்தே​மாதரம் இயக்கம் இவரைக் கவர்ந்தது. "முற்போக்காளர் சங்கம்" எனும் ஓர் அமைப்பை மாணவர்களிடையே அமைத்தார்.​ அன்னியத் துணி விலக்கு,​​ சுதேசியம் எனும் தேசிய இலட்சியங்களை முழங்கியதால் பள்ளியில் இருந்து விலக வேண்​டிய சூழ்நிலை ஏற்பட்டது.​

பத்தொன்பது வயதிலேயே தேசிய அரசியலில் ஈடுபட்டார். ​ அவர் சித்தவைத்தியம், ஆயுர்வேத வைத்தியம் இரண்டிலும் தேர்ச்சி பெற்று மருத்துவத் தொழிலில் பெரும்​ புகழ்பெற்றதால் அமைந்தது.

அரசியல் ஈடுபாடு::

1906 ஆம் ஆண்டில் 19 வயதில் இந்திய தேசிய இயக்கத்தில் ஈடுபட்டார். 1916 இல் தேசியஅரசியலில் தீவிரமாகப் பங்கேற்றார். 1918 இல் மதுரை ஹார்வி மில் தொழிலாளர் வேலை நிறுத்தத்தை ஊக்குவித்து ஆற்றிய பேச்சுக்காக முதல் சிறைவாசம் விதிக்கப்பட்டது.​ சொற்பொழிவில் அரசு நிந்தனைக்குரிய குற்றம் இருப்பதாகக் குறிப்பிடப்பட்டு, ​​பதினெட்டு மாத கடுங்காவல் தண்டனை விதிக்கப்​பட்டது.​ விசாரணையில்,​​ நாயுடுவின் சார்பில் சி. இராஜகோபாலாச்சாரி வாதாடினார். உயர்நீதி​மன்ற மேல் முறையீட்டில் இராஜாஜி எழுப்பிய சட்ட நுணுக்க​வாதத்தால்,​​ நாயுடு விடுதலை பெற்றார்.​

அவர் சேலத்தில் வாரப்பதிப்பாக 1919ஆம் ஆண்டின் இறுதியில் ஆரம்பித்த "தமிழ்நாடு" இதழும் அவர் எழுதிய இரு கட்டுரைகள்,​ அரசுத்​துரோகமானவை என்று குற்றம் சாட்டப்பட்டு விதிக்கப்பட்ட ஒன்பது மாதக் கடுங்காவல் தண்டனையால் இரண்டாம் சிறைவாசத்தை ஏற்றார்.​

1923இல் பெரியகுளம் தாலுக்கா மாநாட்டில் தடை உத்தரவை மீறிப் பேசியதற்காக ஆறு​மாதம் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது.​ இது மூன்றாவது சிறைத்​தண்டனையாகும்.

1920 ஆகஸ்டில் காந்தியடிகள் திருப்பூர் வந்த​பொழுது,​​ வரதராஜுலு நாயுடு வீட்டில் தங்கினார்.​1921 இல் மீண்டும் சேலம் வந்த​பொழுது இவரது வீட்டில் தங்கினார்.​காந்தியடிகள் அப்பொழுது நடைபெற்ற மகளிர் கூட்டமொன்றில் நாயுடுவின் மனைவி ருக்மணி,​ தாம் அணிந்திருந்த நகைகள் அனைத்தையும்,​​ காந்தியடிகளிடம் கொடுத்து​விட்டார்.​

1922 இல் காந்தியடிகள் சிறைப்படுத்தப்பட்ட​பொழுது,​​ அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்க, அரசாங்கத்துக்​குரிய வருமான வரியைக் கட்ட மறுத்தார்.​ காந்தியடிகள் விடுதலை செய்யப்பட்ட பிறகு​ தான் வரி​கட்ட முடியும் என அறிவித்துப் புதுமையை நிகழ்த்தினார்.

வரி மறுப்பைக் குறிப்பிட்டு டாக்டர் நாயுடு அரசாங்கத்திற்கு எழுதிய கடிதம்,​​ காந்தியடிகளின் "யங் இந்​தியா"வில் வெளிவந்தது.​

1925 இல் தமிழ்நாடு மாகாண காங்கிரஸ் கமிட்டியில் தலைவராகவும் பணியாற்றினார்.​ 1929 இல் காங்கிரசோடு கருத்து வேற்றுமை கொண்டு காங்கிரசை விட்டு வெளியேறினார்.​ பின்னர் ஆரியசமாஜத்தில் இணைந்தார். ஜஸ்டிஸ் கட்சி ஆரம்பிக்கப்பட்ட ​போது,​அதனை முறியடிப்பதற்கென்று வரதராஜுலு​ பிரசாரம் செய்தார். ஜி. சுப்பிரமணிய ஐயர்,​​ பாரதியார், திரு வி. க.வைத் தொடர்ந்து,​​ தேசியத் தமிழ் இதழியல் துறையை மேலும் வளர்த்தவர் நாயுடு.

இதழியல் பணி::

இவரது இதழியல் பணி "பிரபஞ்சமித்திரன்" எனும் வார இதழ் மூலம் தொடங்கியது.​ மங்கலம் ஷண்முக முதலியார் உரிமையாளராகவும்,​​ சுப்பிரமணிய சிவா ஆசிரியராகவும் நடத்தப்பட்ட "பிரபஞ்சமித்திரன்" மிகுந்த பொருள் இழப்பில் தத்தளித்த​பொழுது,​​ நாயுடு 1916 இல் அந்த இதழை வாங்கினார்.​ அவர் ஆசிரியரானார்.​ இரண்டாண்டுகள் வெளிவந்தது.​ 1918 ஆம் ஆண்டு நாயுடு சிறைப்பட்டபொழுது, ஆயிரம் ரூபாய் ஈடுகாணம் அரசால் கேட்கப்பட்டு,​​ பத்திரிகை முடக்கப்பட்டது.

பிரபஞ்சமித்திரனுக்குப் பிறகு "தமிழ்நாடு" இதழைத் தொடங்கி ஆசிரியராக இருந்து பணிஆற்றிய நாயுடுவின் பணி ஒரு வரலாற்றுச் சாதனையாகும்.​ 1925 ல் தமிழ்நாடு வார செய்தி பத்திரிக்கையை துவக்கினார். 1931 இல் இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆங்கிலப் பத்திரிகையின் சென்னைப் பதிப்பை துவக்கினார். பிற்காலத்தில் நிதிநெருக்கடியால் விற்பணை செய்யப்பட்டது.

1930-32களில் காந்தியடிகள் நடத்திய உப்பு சத்தியாகிரகத்தையும்,​​ சட்டமறுப்பு இயக்கம் முதலியவற்றையும் நாயுடு எதிர்த்தது இவருடைய அரசியல் வீழ்ச்சிக்கும்,​​ தமிழ்நாடு இதழின் நலிவிற்​கும் காரணமாயிற்று.​ விடுதலை பெற்ற இந்தியாவில் நாயுடு 1951இல் சென்னை மாநிலச் சட்டமன்ற மேலவை உறுப்பினராக சேலத்தில் இருந்து காங்கிரஸ் சார்பில் போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்​பட்டார்.​ 1952இல் நடை​பெற்ற பொதுத்​தேர்தலில்,​​ சேலம் நகரத்தில் போட்டியிட்டு கம்யூனிஸ்ட் வேட்பாளரான மோகன் குமாரமங்கலத்தைத் தோற்கடித்து சட்ட மன்ற உறுப்பினரானார்.​

"தென்னாட்டுத் திலகராக"ப் புகழ்​பூத்த வ.உ.சி,​​ 1934இல் "தேசிய சங்க​நாதம்" எனும் தலைப்​பில் 32 பக்கங்களில் பி.வரதராஜுலு நாயுடு​வின் வாழ்க்கை வரலாற்றை எழுதினார்....


வரதராஜூலு_நாயுடு
#Varadharajulu_Naidu
#KSRadhakrishnan_Postings
#KSRPostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
23-07-2020

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...