Saturday, November 28, 2020

 

#மாபெரும்_கம்யூனிஸ்ட்_போராளி
#ஆறு_முறை_கேரள_மாநில_அமைச்சர் #கெளரி_அம்மா
#102வது_பிறந்தநாள்
வாழ்த்தி வணங்குவோம்
————————————————



கெளரி அம்மா கேரள மாநிலம் புன்னப்புரா வயலார் வீரஞ்செறிந்த மண்ணில் சேர்த்தலா அருகில் ஒரு கிரமத்தில் பிறந்தார் மிகவும் வசதியான குடும்பம்
ஆரம்ப கல்வி பட்டப்படிப்பு எர்ணாகுளம் சட்டக்கல்லூரியில் பயின்று வழக்கறிஞர் ஆனார் அன்று ஈழவா சமுதாயத்தில் சட்டம் படித்த முதல் பெண் இவரே இவரது மூத்த சகோதரர் சுகுமாறன் அந்த பகுதியின் கம்யூனிஸ்ட் கட்சியில் முக்கிய தலைவராக இருந்தார் அவரே தனது தங்கையை கம்யூனிஸ்ட் ஆக்கினார் அரசு வேலையை உதறிவிட்டு மக்கள் பணியாற்ற முன் வந்தார் 1950 முதல் இவர் மக்கள் மத்தியில் மதிப்புமிக்க கம்யூனிஸ்டாக அறியப்பட்டார் 1953 ல் இந்தியகம்யூனிஸ்ட்கட்சியின் வேட்பாளராக சேர்த்தலா தொகுதியில் அதிகமான வாக்குகள் வித்யாசத்தில் வெற்றி பெற்றார் இதே தேர்தலில் தோழர்கள் டி.வி.தாமஸ் சி.அச்சுதமேனன் மற்றும் பல தோழர்கள் வெற்றி பெற்றனர் அன்று கேரளா என்ற மாநிலம் கிடையாது திரு-கொச்சி மாநிலம் வடக்கு கேரளா சென்னை ராஜதானியில் இருந்தது தோழர் தாமஸ் எதிர்கட்சி தலைவரானார் 1957 கேரளமாநிலம் உருவாக்கப்பட்ட பிறகு முதல் தேர்தலில் கம்யூனிஸ்ட்கட்சி வெற்றி பெற்று தோழர் இ.எம்.எஸ் தலைமையில் அமைச்சரவை அமைக்கப்பட்டது அதில் இவர் வருவாய்த்துறை அமைச்சர் தோழர் தாமஸ் அமைச்சராக இருந்தார் தோழர் டி.வி.தாமஸ் மிகப்பெரிய போராளி இருவரும் காதலித்து வந்தனர் 57ல் அமைச்சரான பிறகு இருவரும் திருமணம் செய்து கொண்டனர் தோழர் கே.ஆர்.கெளரியின் புரட்சிகரமான நிலச்சீர்திருத்த சட்டத்தால் நில உடமையாளர்கள் மதவாத சக்திகள் பிற்போக்கு ஆதிக்க சக்திகள் இணைந்து ஆட்சியை கவிழ்க்க விமோசன சமரம் என்று நாடு முழுவதும் வன்முறை கலவரத்தை ஏற்படுத்தினார்கள் ஆட்சி கவிழ்க்கப்பட்டது எனவே 1967 மீண்டும் ஆட்சிக்கு வந்த பிறகு இந்த சட்டத்தை கெளரிஅம்மா மிக தீவிரமாக அமுல்படுத்தினர் 3.5மில்லியன் குத்தகைதாரர்கள் 5லட்சம் குடிகிட்டபுக்கார் என்ற விவசாய தொழிலாளர்களும் நில சொந்தககாரர்கள் ஆனார்கள் இவர் 6 முறை அமைச்சர் 12 முறை சட்டமன்ற உறுப்பினர் சட்டமன்ற கூட்டங்களில் மொத்தம் 16345 நாட்கள் பங்கெடுத்து சாதனை படைத்துள்ளார் கட்சி பிரிந்த போது இவர் சிபிஎம் கணவர் தோழர் டி.வி.தாமஸ் சிபிஐ கட்சி பிளவு இவர்களது மணவாழ்க்கையிலும் பிளவு ஏற்பட்டது இருவரும் கூட்டணி அரசில் அமைச்சர்களாக தொடர்ந்தனர் தனது கணவர் இறக்கும் தறுவாயில் அவரை சந்தித்து கண்கலக்கினார் கணவர் இறந்த பிறகு அவர் பாவமன்னிப்பு கோரி மீண்டும் கிறிஸ்தவத்தில் இணைய விரும்பினார் என்று ஆரச் பிஷப் ஜோசப் சொல்லிய போது விவாதமே ஏற்பட்டது கம்யூனிஸ்ட் தோழர்கள் கடுமையாக எதிர்த்தனர் முடிவில் இவரே தனது கணவர் என்ற முறையிலும் சக தோழர் என்ற முறையிலும் ஆனித்தரமாக சொன்னார் தோழர் தாமஸ் உறுதிமிக்க கம்யூனிஸ்ட் போராளி அவரை பற்றி எனக்கு தெரியும் நிச்சயமாக அவர் அப்படி சொல்லியிருக்கவே மாட்டார் என்று அதற்கு முற்று புள்ளி வைத்தார் அவர் தனியாக கட்சி தொடங்கியபோதும் இரு கம்யூனிஸ்ட்கட்சி தோழர்களும் அவரை மதித்தே வருகின்றனர்
கே.ஆர் கெளரி தனது மக்கள் போராட்டத்தால் அனைத்து கட்சியினரும் மக்களும் அம்மா என்று அன்போடு அழைக்கப்படுபவராக இருக்கிறர் கேரளத்தில் பொதுவாக சகாவு என்றால் கட்சி ஸ்தாபகர் தோழர் பி.கிருஷ்ணபிள்ளை குறிக்கும் அம்மா என்றால் கெளரிஅம்மாவையே குறிக்கும் அவரது 102-வது பிறந்தநாளில் வணங்குவோம்.

Ravi V Rajapalayam

 

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...