#இயக்கங்களின்_வலிமை_அவற்றின் #கொள்கைகளில்தான்_உள்ளது, அக்
கொள்கைகளை ஏற்று அதன்படி செயல்படுபவர் அதன் வலிமையைக் கூட்டுவர். எந்த தனி நபரும் தன்னால் தான் இயக்கம் என்று நினைத்தா
ரென்றால் தோல்வி இயக்கத்திற்கு அல்ல அத்தனிநபர்க்கே.
பல நேரங்களில் பொது வாழ்க்கையில் சோர்வு ஏற்படும் போது மேற்கண்ட எண்ணமே தோன்றும். பொது வெளியில் இறங்கும் போது, கிடைக்கும் கற்றல் அதிகம்.ஆனாலும் வரவர பொது வாழ்வு கவலை தட்டுகிறது. 1970-80 களில் கிட்டதட்ட 2000 வரை அரசியல் செயல்பாட்டு ஆர்வம் மகிழ்ச்சியாகவும் இயற்கையாகவும்வந்தது, கடந்த 2001
யிலிருந்துஅரசியியலின்முகம்மாறி
விட்டது.
தற்போது வாக்கு வங்கி அரசியலுக்காக வாக்குகள் விற்பனை, கொள்முதல் வியாபாரஅரசியல் மற்றும் கொடூர கொலைகாரன்,கொள்ளைகாரன்,சமூகவிரோதிகள்,குண்டர்கள் ,தேசத்துரோகிகளை யெல்லாம் ஆதரிப்பதுஎன்பது நேர்மையான பொது வாழ்வுக்கு செய்யும் மிகப்பெரிய கொடுமையானது.
#KSRPostings
#KSRadhakrishnan_Postings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
21-07-2020.
No comments:
Post a Comment