Monday, November 30, 2020

 


சகோVaasanthi Sundaram அவர்களின் பதிவு.


கேரளத்தின் இடுக்கி மாவட்டத்தில் அடர்ந்த காடுகளின் நடுவே வாகனம் செல்ல முடியாத 20 கிமீ தொலைவில் ஒரு சின்ன தேநீர் கடை வைத்திருக்கும் சின்னத்தம்பி அங்கு ஓரமாக ஒரு வாசக சாலை நடத்துகிறார். 160 புத்தகங்கள் -சாதாரண சினிமாபுத்தகங்கள் இல்லை. தரமான இலக்கியங்கள் . வைக்கம் பஷீர், எம்.டி.வாசுதேவன் நாயர், கமலா தஸ் லலிதாம்பிகா அந்தர்ஜனம் என்று சிறந்த எழுத்தாளர்கள் எழுதியவை. அதில் மலையாளத்தில் மொழியாக்கம் செய்யப்பட்ட ச் சிலப்பதிகாரம் கூட உண்டு.ஒரு பெரிய கோணிப்பையில் இருக்கும் புத்தகங்கள் கடை திறந்ததும் பாயில் பரப்பி வைக்கப்பட்டிருக்கும். மலைவாழ் பழங்குடி மக்கள் வசிக்கும் இடம். 25 குடும்பங்கள் மட்டுமே. வாக்குரிமை பெற்ற முதல் பழங்குடி கிராமம். பஞ்சாயத்து உண்டு என்றாலும்வசதி அதிகம் இல்லாதவர்கள். அதிகம் பேர் படிக்காதவர்கள். . யார் வருவது புத்தகம் எடுக்க.? வருகிறார்களே ! சின்னத்தம்பி குறிப்புகள் வைத்திருக்கிறார். நான்கில் ஒரு பங்கு புத்தகங்கள் நிச்சயம் படிக்கப்படுகின்றன. முதலில் 25ரூ கட்டவேண்டும். மாதம் கட்டணம் ரூ 2. புத்தகம் இரவல் வாங்குபவர்களுக்கு ஒரு கோப்பை தேநீர் இலவசம். சிலசமயம் ஒரு வேளை சாப்பாடும் கிடைக்கும்.

இப்படிப்பட்ட அதிசயம் தமிழ் நாட்டில் நடக்கிறதோ?

No comments:

Post a Comment

there was no one left To speak out for me

First they came for the Communists And I did not speak out Because I was not a Communist Then they came for the Socialists And I did not spe...