Monday, November 30, 2020




#கறுப்புஜீலை....

1983.....ஜீலை.... 23
தமிழர்களாலும் சிங்களவர்களாலும் மறக்க முடியாத நாள். இலங்கைத் தீவு உலகின் கண்களுக்கு கறுப்பாக காட்சியளித்த நாள். நாகரிகம் உள்ள எந்தவொரு இனமும் செய்யத் துணியாத, செய்யக்கூடாத செயல்கள் அரங்கேற்றப்பட்ட நாள்.
தமிழ் மக்கள் தனியான தாயகம் கேட்டு போராட காரணமாக அமைந்த நாள்.
புலிகளுக்கும் படையினருக்கும் மட்டுமே அன்று போர் நடைபெற்றது. புலிகள் திருநெல்வேலியில் 13 படையினரைக் கொன்றமைக்காக தென்னிலங்கையில் அப்பாவித் தமிழர்கள் கொல்லப்பட்டனர்.
கட்டவிழ்த்து விடப்பட்ட சிங்கள காடையர்கள் பொலிஸார் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க, தமிழ் மக்களைக் கொன்று குவித்து தமது துவேசத்தை வெளிக்காட்டினர்.
ஜீலை 23 தொடக்கம் ஓரு வாரகாலம் நடைபெற்ற இந்த வன்முறைகளில் தென்னிலங்கையில் வாழ்ந்த 5000 வரையான தமிழர்கள் கொல்லப்பட்டதாக வரலாறு பதிவுசெய்திருக்கின்றது.
இந்த வன்முறைகளின் வலிகளைத் தாங்க முடியாமலே தமிழ் இளைஞர்கள் ஆயுத ரீதியான போராட்டத்தை ஆரம்பித்தனர். இலங்கையில் இரத்த ஆறு ஓடுவதற்கு ஜீலைக் கலவரம் முக்கியமான காரணியாக அமைந்தது.
ஜீலைக் கலவரம், தங்கள் இனத்தவர்கள் செய்த ஏற்றுக்கொள்ள முடியாது துன்பியல் நிகழ்வு என்று படித்த சிங்கள அதிகாரிகள் சிலர் காலப்போக்கில் ஏற்றுக்கொண்டிருந்தனர்.
இந்த துன்பியல் நிகழ்வுகள் இனிமேல் ஏற்படாமல் தடுப்பதற்கு இது தொடர்பான வரலாறுகள் மீளாய்வு செய்யப்படவேண்டியது அவசியம்.
நல்லிணக்கம், ஜனநாயகம் தொடர்பாக பேசிக்கொண்டிருக்கின்ற இந்தக் காலத்தில் வரலாறுகளை மறைத்துவிட்டு எதையும் சாதித்துவிட முடியாது என்பதை அனைவரும் உணர்ந்துகொள்ள வேண்டும்.

கருப்பு_யூலை_23
மறந்துபோன_நாள்! தமிழீழ தேசியத் தலைவர் வே பிரபாகரன் அவர்கள் மிகவும் ஆழமாக நேசித்த தமிழினத்தின் ஆயுதமேந்திய தலைவர்கள் கொடூரமாகப் படுகொலை செய்யப்பட்ட மிகக் கொடிய நாள்!
#ksrpost
23-7-2020.

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...