Monday, November 30, 2020

 


*#மத_நல்லிணக்கத்தை #பாழ்படுத்திடாதீர்கள்*
————————————


•திருக்கோவிகளில் ஆறு கால பூஜைகள் நடக்கட்டும்.


•பள்ளிவாசலில் பாங்கு ஒலியோடு தொழுகைகள் நடக்கட்டும்.

•தேவாலயங்களில் மணியோசையோடு ஜெபங்கள் நடக்கட்டும்.

•குருத்துவாராக்களில் கிரந்தங்கள் வாசித்து வழிபாடுகள் நடக்கட்டும்.

•இறைமறுப்பாளர்கள் சதுக்கங்களில் தங்கள் கொள்கைகளை பேசட்டும்.

இது தான் மதநல்லிணக்கம்.

ஒவ்வொருவருடைய இறைக்கொள்கை
களை தனிப்பட்ட முறையில் யாரும் ஒழிக்கவோ அழிக்கவோ முடியாது என்பதை எல்லாரும் புரிந்துக் கொள்ள வேண்டும். அந்தக் கூட்டம் இந்தக் கூட்டம் என்று கிளம்பி உலக அமைதியையும் மக்களின் வாழ்க்கை முறையை சீரழித்துவிடாதீர்கள்.

ஏதோ கிளம்பி ஏதேதோ செய்து நாசப்படுத்துவதை ஜனநாயகத்தில் யாராலும் ஏற்றுக் கொள்ள முடியாது. ஒவ்வொருவரின் தனிப்பட்ட கொள்கைகளையும் கருத்துக்களையும் எவராலும் அழிக்க முடியாது என்ற புரிதல் எல்லாருக்கும் வேண்டும். அது அவரவருடைய உரிமை.

இந்த நெருக்கடியான கரானா நேரத்தில் தேவையற்ற வகையில் கந்தசஷ்டி கவசத்தையும், கட்டபொம்மனைக் குறித்தும் தேவயற்ற சர்ச்சைகளை கிளப்புவது நல்லதல்ல. அது தேவையற்ற சிக்கலைத் தான் உருவாக்கும். ஒரு போதும் வக்கிரத்தின் வெளிப்பாடு கூடாது. அவரவருடைய கொள்கை அவரவருக்கு.

இது போன்ற சர்ச்சையைக் கிளப்பி தங்கள் மேல் வெளிச்சம் படும்படி காட்டுவது என்பது நேர்மையான செயலல்ல.

கே. எஸ். இராதாகிருஷ்ணன்
15.07.2020
#ksrposts

No comments:

Post a Comment

#*இ.ந்.தி.யா தேர்தல்க்கூட்டணி* ⁉️

#*இ.ந்.தி.யா தேர்தல்க்கூட்டணி* ⁉️ ••••• இந்த இ.ந்.தி.யா தேர்தல்க் கூட்டணிகளின் விசித்திரங்களை  எவ்வாறு அணுகுவது என்று மிகச் சிறந்த பத்திரிகை...