Monday, November 30, 2020

 

#தலைவர்கலைஞர்_அவர்கள்
#நள்ளிரவுகைது_தமிழக_அரசியல் #வரலாற்றில்_ஒருபிழை......... 5
————————————————-




தலைவர் கலைஞர் அறிவாலயத்தில் பத்திரிக்கையாளர்களைச் சந்தித்துப் பேட்டிக் கொடுக்கும் பொழுது அவரது இருபுறமும் பேராசிரியரும் முரசொலி மாறனும் அமர்ந்திருந்தார்கள். ஒரு கட்டத்தில் கலைஞர் நெகிழ்ந்து கண்ணீர் வந்த போது பேராசிரியர் ஆசுவாசப்படுத்தினார்.

ஜூலை-4-ம் தேதியன்று கலைஞரை வெளியே விட முடியுமா? முடியாதா? என்று மிரட்டல் பாணியில் டெல்லியில் இருந்து உத்தரவுகள் வர.. கொஞ்சம் இறங்கி வந்தார் ஜெயல்லிதா. அன்று மதியம் 3 மணியளவில் கலைஞர் விடுதலை செய்வதற்கான உத்தரவுகள் உள்துறைச் செயலாளர் மூலமாக கோர்ட்டிற்கு அனுப்பப்பட்டு அங்கிருந்து உத்தரவு வாங்கப்பட்டு, சென்னை மத்திய சிறைக்கு அனுப்பப்பட்டது.

வீல்சேரில் உட்கார வைக்கப்பட்ட நிலையில் சிறையில் இருந்து வெளியே வந்தார் தலைவர கலைஞர். நேராக தனது வீட்டிற்குச் சென்ற கலைஞர் குளித்துவிட்டு ஒரு மணி நேரத்திலேயே அறிவாலயம் வந்து பத்திரிகை
யாளர்களைச் சந்தித்தார்.

அந்தப் பத்திரிகையாளர் சந்திப்பு சன் தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது. கொஞ்சம் சந்தோஷம், சோகம், பரிவு, இரக்கம், உருக்கம் என்று எல்லாமுமாக சேர்ந்து இருந்த்து அந்த நேரடி நிகழ்வு.

“அப்படியென்ன உங்களுக்கும், ஜெயல்லிதாவுக்கும் பகை?” என்று ஒரு நிருபர் கேட்டபோது.. “என்ன பகை..? நானென்ன அவருக்கு வளர்ப்பு மகனா..?” என்று அவருக்கே உரித்தான பாணியில் திருப்பியடித்தார் கலைஞர். அதேபோல் தன்னை இழுத்துச் சென்றதை சொன்னபோது மட்டும் ஒரு இடத்தில் தொண்டை இழுத்துக் கொண்டு அழுகையாக மாறும் சூழல் வந்தபோது, அருகில் இருந்த பேராசிரியர் அவரது கையைப் பிடித்து ஆறுதல்படுத்த அரங்கத்தில் இருந்த பத்திரிகையாளர்களையே உணர்ச்சிவசப்பட வைத்தது அந்தக் காட்சி.

கே. எஸ். இராதாகிருஷ்ணன்
19.07.2020
#ksrposts
#கலைஞர்_கைது

No comments:

Post a Comment

there was no one left To speak out for me

First they came for the Communists And I did not speak out Because I was not a Communist Then they came for the Socialists And I did not spe...