#வாழ்க்கை....
-------------
விறகிட மூடி அழல் கொடு போட
வெந்து விழுந்து முறிந்து
நிணங்கள் உருகி எலும்பு கருகி அடங்கி
ஓர்பிடி நீறுமிலாத உடம்பை....
-#பட்டினத்தார்..
சப்தங்கள் ஸ்திரமாய் நிலைத்திருப்பதாக
இறுமாப்பு..,அதிகாரம், திமிர், தன்முனைப்பு எனகோட்டை கட்டி வாழ்தல் ;எள்ளல் தொனிகளில் ஏவல்கள் ...
பாலையில் பெய்த சிறுநீர் போல்
பிரபஞ்சத்தின் பிரும்மாண்டத்தில் தூசியிலும் தூசாய் கலந்து அணுவாய் சிதறிப் போவதற்கு எத்தனை ஆர்பாட்டங்கள். சீர்தூக்கி ஆராய்ந்து ஒரே ஒரு கணம் தலை குனிந்து பேராற்றலுக்கு முன் நிற்பதற்கு எவ்வளவு கூச்சப்படுகிறோம் நாம்.. கூடுதறி வெளிப்போன பின் ஒரு புல்லையும் அசைக்க முடியாது நம்மால்..
#ksrposts
18-7-2020.
No comments:
Post a Comment