Monday, November 30, 2020

 

#கர்நாடக_முன்னாள்_முதல்வர்_தேவராஜ்_அர்ஸ்
————————————————




தேவராஜ் அர்ஸ் இறுக்கமான மனிதர். அத்தனை இறுக்கமான மனிதரிடத்தில் இணக்கமும், இளக்கமும் இல்லாமல் இல்லை. என்னிடம் அன்பு பாராட்டுவர். நெடுமாறனை தனது தம்பியாக கொண்டடியவர். கவிஞர் கண்ணதாசன் மீது நேசம் கொண்டவர். தேவராஜ் அர்ஸ்
பற்றி ஏற்கனவே பல பதிவுகள் செய்துள்ளேன. இன்னும் அவரைப்பற்றி நான் அறிந்த செய்திகளை விரிவாக பதிவு செய்வேன்.இந்திரா காந்தி சிக்மகளுர்இடைத்தேர்தல்போட்டியிட்டநிகழ்வு,காங்கிரஸிலிருந்து நெடுமாறன் தலைமையில வெளியேறியது என பல விஷயங்களில் அர்ஸை சொல்லாமல்
முழமை அடையாது.

ஓர் ஞாயிற்றுக் கிழமை பெங்களூரில் அவரைச் சந்திக்க நேர்ந்தது. ஒரு மதிய உணவிற்கான அழைப்பு. ஈடு இணையற்ற வயலின் வாசிப்பாளர் எல். சுப்பிரமணியம், புகழ் பெற்ற தபேலாக்கார் அல்லாரக்கான், நாதஸ்வரத்தோடு மாத்திரமே துணை போகிற தவில், இப்போது வயலின் கூடவும் தோழியாவதற்குக் காரணமான முனிரெத்தினம், மூன்று நான்கு அர்ஸ் அவையின் அமைச்சர்கள், நடன மாது ஹேமா செள்த்ரி, ஆந்திரநாடக அகாடமி செயலாளர் கிருஷ்ணம்ராஜு - தம்பதிகள் இப்படி முற்றிலும் வித விதமான மனிதப் பூக்கள். அர்ஸ் முதலமைச்சராக இருந்தபோதும் பதவியில் இல்லாத பொழதும் பலமுறை பெங்களூர், மைசூர்,சென்னை, டில்லி கர்நாடக பவனத்தில் சந்தித்திருக்கிறேன். அதற்கு அப்பால் இப்போது பார்ப்பதற்கு அவரிடத்தில் பெரிதான மாறுதல் ஒன்றும் இல்லை. ஒருவர் பதவியில் இல்லாதபோது எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதற்கு அர்ஸ்தான் உதாரணம். இரவில் நடைபெற்ற இசை விழாவில் அவரோடு இருந்தேன். எனக்குக் கூடப் பாராட்டு! ஒரு சால்வை குளிருக்கு இதமாக இருந்தது. பேசாமல் இருந்தார் அர்ஸ். கூட்டம் அவரைப் பேசித்தான் ஆக வேண்டும் என்று கூச்சலிட்டு மடக்கியது. அவரொன்றும் கன்னடத்திலேகூட பெரும் பேச்சாளர் இல்லை.

#Devaraj_Urs
#ksrpost
கே. எஸ். இராதாகிருஷ்ணன்
11.07.2020.

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...