#கயத்தாறில்,#வீரபாண்டியகட்டபொம்மன் #சிலை_அமைத்து_50ஆண்டுகள்
————————————————
கி.பி. 18-ம் நூற்றாண்டில் தூத்துக்குடி மாவட்டம் பாஞ்சாலங் குறிச்சியை ஆட்சி செய்த வீரபாண்டிய கட்டபொம்மன், ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தை எதிர்த்து முதன் முதலாகக் குரல் கொடுத்தார். ஆங்கிலேயர்கள் அவரை கைது செய்து கயத்தாறில் தூக்கிலிட்டனர். 1959-ம் ஆண்டு பி.ஆர்.பந்துலு இயக்கத்தில், சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன், பத்மினி உள்ளிட்ட பலர் நடிப்பில் வீரபா ண்டிய கட்டபொம்மன் திரைப்படம் வெளியானது. இதில், நடிகர் சிவாஜி கணேசன் வீரபாண்டிய கட்டபொம்மன் கதாபாத்திரத்தில் ஜொலித்திருப்பார். அந்த படத்தில் அவர் பேசிய ‘கிஸ்தி, திரை, வரி, வட்டி’ என்ற வசனம் இன்றளவும் பிரபலம். கயத்தாறில் நெல்லை-மது ரை நெடுஞ்சாலையை ஒட்டி வீரபாண்டிய கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்ட இடத்தில் 47 சென்ட் நிலத்தை நடிகர் சிவாஜி கணேசன் விலைக்கு வாங்கினார். அங்கு வீரபாண்டிய கட்ட பொம்மனின் 8 அடி உருவச் சிலையை நிறுவினார். இதன் திறப்பு விழா 16.7.1970-ல் நடந்தது. அன்றைய எம்.பி. என்.சஞ்சீவரெட்டி தலைமையில், முன்னாள் முதல்வர் காமராஜர் திறந்து வைத்தார். இச்சிலையை நிறுவி கடந்த ஜீலை 16-ம் தேதியுடன் 50 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. 1999-ல் இதை தமிழக அரசிடம் சிவாஜி கணேசன் வழங்கினார்.
கே. எஸ். இராதாகிருஷ்ணன்
25.07.2020
#ksrposts
No comments:
Post a Comment