Monday, November 30, 2020

 


#தற்காலத்தின்_நிதர்சனங்களை_பார்த்து
#கடந்து_வந்தது.....
————————————————-



காலம் பல ஆளுமைகளை பின்னுக்கு தள்ளி விடுகிறது. இதுதான் ஊழ் என்றால், இயற்கையின் நியதி கிடையாதா? அரசியல் சூழ்ச்சிகளிலும் தந்திரங்களிலும் உழைப்பைக் கொடுத்த திறமைசாலிகள் திட்டமிட்டு முடக்கப்படுகின்றனர். கொள்கைப் பாதையில் துளியும் தடுமாற்றம் இல்லாத நிலையில் கட்சி, தேர்தல் என்ற இருமுனை அரசியல் களத்தில் ஆயிரம் ஏற்ற இறக்கங்களை நேர்மையாளர்கள் சந்திக்வேண்டும்.

பிறகு நேர்மையைப் பற்றி எப்படி பேச முடியும் அதை எங்கே தேட முடியும். கூட்டிக் கழித்து லாபத்தையும் ஆதாயத்தையும் சுயநலத்தையும் தன்னிருப்பை நிலைநிறுத்துகின்ற சில வேடிக்கை மனிதர்களால் இப்படியான் அமைப்பியல் ரீதியான் போக்கு இருக்கின்றது. ஒரு காலத்தில் குறைவாக இருந்தது, கடந்த 30 ஆண்டுகளாக கொரானா மாதிரி உச்சத்திற்கே சென்று விட்டது இந்த் இழிநிலை. சுயமரியாதை இழந்து அவமானத்தையும் கேடுகெட்டத் தனத்தையும் ஏற்றுக் கொண்டால் தான் பொதுவெளியில் அங்கீகாரம் என்றால் என்ன சொல்ல? பாரதி சொன்னது போல சிறுமை கண்டு பொங்கி எழுவதெல்லாம் சாத்தியமே இல்லை என்பது நிதர்சமான உண்மை.
ஆனால், சிலரும் அவமானங்களைத் தாங்கிக் கொண்டு சில வெகுமதிகள் பெறுகின்றனர். இப்படி தன்மானத்தை விடுவதும் சிலருக்கு போலியான தவம்தன் !
#தகுதியே_தடை

கே. எஸ். இராதாகிருஷ்ணன்
12.07.2020

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...