Monday, November 30, 2020

 

#தோழர்_மன்னை_மு_அம்பிகாபதி #காலமானர்


இரு முறை மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினராகவும், இவர் கம்யூனிஸ்டு இயக்கத்திலும் தொழிற்சங்கங்களில் மிகச் சிறப்புடன் பணியாற்றினார்.

கலை இலக்கியத்தில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். மிகச் சிறந்த மேடைப் பேச்சாளர். ஒரு காலத்தில் எங்களோடு காங்கிரஸ் இயக்கத்தில் அவர் இருந்தபோது, சொல்லின் செல்வர் ஈ.வி. கே சம்பத், கவிஞர் கண்ணதாசன், நெடுமாறன், தஞ்சை இராம்மூர்த்தி ஆகியோரோடு மிக நெருக்கமான தொடர்பு கொண்டிருந்தார்

1977ஆம் ஆண்டு மன்னார்குடி சட்டமன்றத் தேர்தலில் அவர் போட்டியிட்ட வெற்றியின் பின் அடிக்கடி
எங்கள் தொகுதி சட்டமன்ற உறுப்பினர்
சோ.அழகர்சாமி. அறையில் சந்திப்பதுண்டு. ஈழத்தமிழர் பிரச்சனையில் அக்கறை கொள்வார்.
எனது தினமணி கட்டுரைகளை படித்து விட்டு கை பேசியில் அழைத்து பாராட்டுவர்.
ஆழ்ந்த இரங்கல். 

No comments:

Post a Comment

8 september

உனக்குப் புரியவில்லையென்றாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும் நீ புரிந்து கொண்டாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும்