#தி_ஜானகிராமன்
————————
ஆஹா ! பசுமையான அகலமான வாழை இலை நறுக்கு !
எங்கள் முன்னால் விழுந்தது ரெண்டு இட்லி. மல்லிகை வெண்மை பசுமை இலையில் ஆச்சரியம் ! கறுப்பு சிவப்பான அரைகுறையாய் நுணுங்கிய மிளிகாய் பொடி !
தனியாக அலுமினியக் கிண்ணத்தில் எண்ணெய் மணக்க வெள்ளை உருண்டை மூன்று ! ஆவி பறக்கிறது.
சாம்பாரில் ஒரு கை முந்திரி பருப்பும் குண்டுமிளகாயும் மொதக்க வெங்காயம் பளபளக்கும் வாசனை சுகம் ! பசி இரட்டிப்பாக்கியது. தி.ஜானகிராமன் ரசித்துச் சாப்பிட்டார்.
" அடடா ! இது மாதிரி எஞ்ச கெடைக்கும் ? என்ன சுத்தம், என்ன அழகு " என்றார்.
செம்மையான நிறத்தில் ரவா தோசைகள், எங்கள் இலையில் விழுந்தது. காபி சாப்பிடும்போது அவரை ஐயர் கேட்டார், "நன்னா இருந்ததோ ? -ஏதோ செய்யறோம் நல்ல பழைய அரிசி கிடைக்கமாட்டேங்கிறது ! -என்றார் ஐயர்.
இருவருமாய் வெளியே வந்தோம் திருப்தியான ஏப்பம் இரண்டு பிரிந்தன.
வாசனை சீவலும் வெற்றிலையும் போட்டுக் கொண்டோம். " மோகமுள் " பற்றிய என் கனவுகளை அலப்ப ஆரம்பித்தேன். கியாஸ் பஸ் ரைஸ்ரைஸ்...என்ற சப்தத்துடன் கிளம்பிக் கொண்டிருந்தது. ஓயாமல் நான் "மோகமுள்" பற்றியே பேசிப் புகழ்ந்து கொண்டே இருந்தேன்.
ஜானகிராமன் சிரித்தார். மன்னார்குடி பஸ் ஏறினார்." அநியாயத்திற்கு கெட்டுப் போயிருக்கிறீர்கள். அப்படி ஒன்றும் பிரமாதமான நாவலை நான் எழுதிவிடவில்லை " என்றார் அடக்கத்துடன். கூர்மையான நாசி, எடுப்பான நிறம். சாதாரணமான தோற்றம். ஆனாலும் எனக்கு
தெய்வமே என்னிடம் வந்ததுபோல் பரவசம் !.
-#தஞ்சை_ப்ரகாஷ்...
(படம்-#தஞ்சை தெற்கு வீதியில்...
வடக்கே நீளும்
கிளை வீதியில் .
திஜரா.க. நா.சுப்ரமணியம்
தஞ்சைப் ப்ரகாஷ் என பலர் வந்து சென்ற இடம் தஞ்சை #காபி_பேலஸ். இதற்க்கு முந்தைய பெயர் வேறு .ஜானகிராமன் அந்த சந்தின் பெயர் எல்லையம்மன் கோவில் வீதி .)
#ksrpost
கே. எஸ். இராதாகிருஷ்ணன்
12-7-2020.
No comments:
Post a Comment