#சபாஷ்!
#விக்கிரமபாகு_கருணாரத்தினா
———————————————-
இலங்கை அரசியலில் விக்கிரமபாகு முக்கியமானவர். சிங்களராக இருந்தாலும் தமிழர்களுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறவர். நீண்ட கால நண்பர்.
திமுக சார்பில் தலைவர் கலைஞர் டெசோ மாநாட்டை 2012ல் நடத்த பொறுப்பு கொடுத்த பொழுது மாநாட்டுக்கு இவரை அழைத்தபோது மாறுபட்ட கருத்துகள் இருந்தாலும் நீங்கள் நண்பர் என்ற முறையில் அழைத்துவிட்டீர்கள் அவசியம் உங்களுக்காக மட்டும் வருகின்றேன் என்று மாநாட்டில் வந்து கலந்துக் கொண்டார். டெசோ மாநாட்டிற்கு சென்னைக்கு வர கொழும்பு காட்டுநாயக்க விமான நிலையம் வந்த போது ராஜபக்சே அரசு இவரை தடுக்க நினைத்தும் அதை மீறி சென்னைக்கு வந்தார். திரும்ப மாநாட்டை முடித்து கொழும்பு விமான நிலையத்தில் இவரை சிங்கள அரசு தாக்கி கருப்புக் கொடியெல்லாம் காட்டினார்கள். இதெல்லாம் இங்குள்ள எத்தனை பேருக்கு தெரியப் போகின்றது. அப்படிப்பட்டவர் நேற்று சிங்களவர்கள் தான் வந்தேறிகள் என்று கொழும்பில் கருத்தினை தெரிவித்துள்ளார்.
ஈஸ்வரங்களில் ஒன்றான ஈழ தமிழ் இந்துக்கள்கோணேஸ்வரம் தங்களுடையது என்று சிங்கள புத்த பிக்கு கூறுகிறார்.
இராவணன் ஒரு முஸ்லிம். எனவே கோணேஸ்வரம் தங்களுடையது என முஸ்லிம் உலமாக் கட்சி கூறுகின்றது.
சிங்கள தலைவரான விக்கிரமபாகு கருணாரத்தினா “ சிங்களவர்கள் வந்தேறிகள் என்றும் அதை தம்மால் நிரூபிக்க முடியும்” என்கிறார்.
#சபாஷ்_விக்கிரமபாகு !
கே. எஸ். இராதாகிருஷ்ணன்
12.07.2020
#ksrposts
#விக்கிரமபாகு
No comments:
Post a Comment