Saturday, November 28, 2020

 

#இலங்கையின்_16_வது
#நாடாளுமன்றத்_தேர்தல்_2020
———————————————





இலங்கை நாடாளுமன்றத் தேர்தல் 2020 ஆகஸ்ட் 5 இல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


1.சமஷ்டித் தீர்வு குறித்துப் பேசக்கூடிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு

2. இலங்கை இரு தேசங்களின் ஒன்றியம் என்ற அளவில் பேசக்கூடிய தமிழ்த் தேசியவாதிகள்

3.கொழும்பு அரசின் அமைச்சரவையில் இடம்பெறக்கூடிய, தமிழர்களின் பொருளாதார முன்னேற்றத்தை நோக்கமாகக் கொண்ட தமிழ் உணர்வாளர்கள்.

இப்படி இந்த மூன்று தரப்பினரும் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில்
வடக்கில், கிழக்கில் களத்தில் உள்ளனர்.

கடந்த 2018 நவம்பரில், அன்றைய அரசுத்தலைவர் மைத்திரிபால சிறிசேன நாடாளுமன்றத்தைக் கலைத்து அரசியலமைப்பு நெருக்கடியை ஏற்படுத்தினார்.பின்னர் நீதிமன்றம் நாடாளுமன்றக் கலைப்பை ரத்துச் செய்து, அடுத்த தேர்தல் தேதியை 2020 இற்கு மீண்டும் தள்ளிப் போட்டது.2020 மார்ச் 2 இல் 15-வது நாடாளுமன்றம் புதிய அரசுத்தலைவர் கோட்டாபய ராஜபக்சேவினால் கலைக்கப்பட்டு, மார்ச் 12 முதல் 19 வரை வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. 2020 ஏப்ரல் 25 இல் தேர்தல் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டது. ஆனாலும், கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக தேர்தலுக்கான நாள் பிற்போடப்பட்டு நாள் ஜீன் 20 என அறிவிக்கப்பட்டது. கரோனா தொற்று நீங்காதமையால், மீண்டும் 2020 ஆகஸ்ட் 5 க்கு தேர்தல் தள்ளிப்போடப்பட்டது.

#இலங்கையின்_16_வது
#நாடாளுமன்றத்_தேர்தல்_2020
#Srilanka_Elections
#KSRadhakrishnanPostings
#KSRPostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
29-06-2020 

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...